எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன்…

மே 28, 2008 at 5:27 பிற்பகல் | In நகைச்சுவை, பகுக்கப்படாதது | 7 Comments
Tags: , , , ,

எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன்...

அனைவருக்கும் வணக்கம்,

என் பெயர் விஜய் மல்லையா. என்னுடைய அணி ஐ.பி.எல். போட்டிகளில் படு மோசமாகத் தோற்றுவிட்டது. அவர்களை நம்பி நான் செய்திருந்த 400 கோடி ரூபாய் முதலீடு முழுவதுமாக நஷ்டமாகிவிட்டது. இந்த 400 கோடி ரூபாய் நஷ்டத்தால் வெற்றிகரமான தொழிலதிபராக இருந்த நான் நடுத்தெருவுக்கு வரும் நிலைமைக்கு ஆளாகியுள்ளேன்.

இந்தப் பதிவைப் படிக்கிற நீங்கள் யாரென்று எனக்குத் தெரியாது. ஆனாலும் நீங்கள் நினைத்தால் எனக்கு உதவ முடியும். பொதுமக்கள் அனைவரையும், குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் இருப்பவர்களை நான் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். காபி மற்றும் தேநீருக்குப் பதிலாக என்னுடைய நிறுவனம் தயாரிக்கிற ”கிங் ஃபிஷர்” பியர் அருந்துங்கள்.

இதை என்னுடைய நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக மட்டும் சொல்லவில்லை, “கிங் ஃபிஷர்” பியர் உங்களுக்கு உற்சாகத்தையும் புதிய சிந்தனைகளையும் கொடுக்கும். உங்களுக்கு இதயம் இருந்தால் தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள். இந்த பதிவை உங்கள் நண்பர்களையும் படிக்கச் சொல்லுங்கள்.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது மட்டும்தான் தவறு. குடித்துவிட்டு தாராளமாக வேலை செய்யலாம்.

அன்புடன்,

விஜய் மல்லையா

நன்றி: இக்கடிதத்தின் ஆங்கில வடிவத்தை எனக்கு அனுப்பிய நண்பன் சசி குமாருக்கு.

டிஸ்கி: இப்பதிவின் நோக்கம் மதுப் பழக்கத்தைப் பிரச்சாரம் செய்வதல்ல. நகைச்சுவை, நகைச்சுவை, நகைச்சுவை மாத்திரமே.

7 மறுமொழிகள் »

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

  1. //உங்களுக்கு இதயம் இருந்தால் தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள். //

    எல்லோருடைய இதயத்திலும் ஆட்டைய போட சொல்லுற…

  2. ///
    எல்லோருடைய இதயத்திலும் ஆட்டைய போட சொல்லுற…
    ///

    அட இத நான் சொல்லலப்பா, விஜய் மல்லையா சொல்றாரு.

  3. பியர் அடிச்சிட்டு ஆடிய ஆட்டமென்னன்னு பாட வேண்டியதுதான்…

  4. மேட்டர் சூப்பர். ஒத்துக்குறேன்.

  5. ///
    பியர் அடிச்சிட்டு ஆடிய ஆட்டமென்னன்னு பாட வேண்டியதுதான்…
    ///

    ஆடாத ஆட்டமென்னன்னுதான் பாடனும்

  6. பயங்கர லொள்ளு புடிச்ச ஆளா இருப்ப போல இருக்கே…

  7. ச்சே…என்ன..ஒரு..நல்ல..மனசு..எல்லாம்..ஒரு….help..தானே….enjoy…..


மறுமொழியவும்

XHTML: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. | Theme: Pool by Borja Fernandez.
Entries and comments feeds.