நெடும் பயணம்…

மே 30, 2008 at 3:35 பிற்பகல் | In பகுக்கப்படாதது | 1 Comment

அன்பானவர்களே,

வணக்கம். ஏறக் குறைய ஐந்து மாதங்களுக்குப் பிறகு சொந்த ஊருக்குச் செல்வதால் அடுத்த பதினைந்து நாட்களில் சில தாமதங்களை எதிர்பார்க்கலாம். கிட்டத் தட்ட மூவாயிரம் கிலோமீட்டர் பயணம் என்பதால் எங்கெங்கே இணைய வசதி கிடைக்கும் என்று சொல்ல இயலாது. தங்களுடைய மறுமொழிகள் நீண்ட நேரம் மட்டுறுத்தலுக்காக காத்திருக்கலாம். இதுபோன்ற வசதிக்குறைவுகளை அருள் கூர்ந்து பொறுத்தருள வேண்டுகிறேன்.

எழுத்தில் விருப்பமுள்ளவர்களுக்கு பயணம் எப்போதும் சுகமானதாகவே இருக்கும். எனக்கும் அப்படித்தான். வரும்போது கை நிறைய அள்ளி வருவேன், உங்களோடு பகிர்ந்து கொள்ள. என் தஞ்சை மாவட்டத்தின் சுவையான சம்பவங்களுடனும், புகைப்படங்களுடனும் விரைவில் உங்களை சந்திக்க உள்ளேன். போய் வருகிறேன்.

மீண்டும் ஒருமுறை அசௌகரியங்களுக்காக முன்கூட்டியே வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

அன்புடன்,

விஜய்கோபால்சாமி.

1 மறுமொழி »

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

  1. உங்கள் பயணம் இனிதாக அமைய வாழ்த்துகள்…. டிக்கெட்டை மறந்துடாதிங்க….. (பிறகு எனக்கு மட்டும் ஏன் இப்படி -2 எனுதிட போறிங்க)


மறுமொழியவும்

XHTML: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. | Theme: Pool by Borja Fernandez.
Entries and comments feeds.