அய்யோ… போச்சே…

ஜனவரி 9, 2009 at 8:24 பிற்பகல் | In பகுக்கப்படாதது | 7 Comments
Tags:

பின்னூட்டங்கள் எழுதுவதற்காகவும், அவ்வப்போது பதிவுகள் எழுதுவதற்காகவும் நான் துவங்கிய ப்ளாகர் கணக்கு தற்போது களவாடப்பட்டுள்ளதோ என்று ஐயப்படுகிறேன். ஏனெனில் தளத்தின் வடிவமைப்பில் நான் செய்யாத மாறுதல்கள் சில உள்ளன. ஹிட் கவுண்ட்டர் உள்ளிட்ட விட்ஜெட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. ஒரு வாரம் முன்பு என்னுடைய கடவுச்சொல்லை உள்ளிட்ட போது சரியாக இருந்தது. இன்று பின்னூட்டம் எழுதுவதற்காக லாகின் செய்தபோது உள்ளே செல்லமுடியவில்லை.

ஆகவே வலை நண்பர்களே, கீழ்கண்ட தளத்திலிருந்து வரும் பின்னூட்டங்களை தயை கூர்ந்து பதிப்பிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளுகிறேன்.

http://vgswami.blogspot.com/

அந்தப் புண்ணியவான் யாராயிருந்தாலும் அவருக்கும் ஒரு வார்த்தை சொல்லிக் கொள்கிறேன்.

“நல்லா இருடே”

கூடிய சீக்கிரம் புதுக் கணக்கு தொடங்கிய பிறகு தெரிவிக்கிறேன். தவறாமல் ஆதரவு தரவும்.

7 மறுமொழிகள் »

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

  1. எதனால இப்படி கண்ணுக்கு தெரியாம ஆப்படிச்சாங்க… எதுக்கும் சரி பாருங்க…. ஒரு வேளை பிழையாக கடவுச் சொல்லை போட்டிருப்பிங்க….

  2. பிழையான கடவுச்சொல்லாக இருந்தால் உள்ளே நுழைய முடியாது. ஒப்புக்கொள்கிறேன். நான் செய்யாத மாறுதல்களும் தளத்தில் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளேனே. அதனால் புதிய கணக்கு தொடங்குவது தான் வழி என்று நினைக்கிறேன்.

  3. நீங்கள் கணக்கு துவக்கும் போது, அவர்கள் பாஸ்வேர்டை, உங்கள் மற்றொறு கணக்குக்கு அனுப்பியிருப்பார்களே..

    மேலும், Security question கொடுத்து மீட்கலாமே..

  4. நல்ல யோசனை. முயற்சி செய்கிறேன். இதுல கஷ்டம் என்னன்னா, இந்த ஐடியே என்னோட நண்பன் கிரியேட் பண்ணது தான், அப்போ ஒருமுறை பாஸ்வேர்ட் மாத்துனேன். பாதுகாப்புக் கேள்விகள் ஞாபகம் இருக்குமா தெரியலை. :)

  5. இப்படிவேற நடக்குதா இங்க …

  6. ஐயோ! வடை போச்சே!

  7. வடை போகலைன்னே, கடையே போச்சு…


மறுமொழியவும்

XHTML: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. | Theme: Pool by Borja Fernandez.
Entries and comments feeds.