அட ராமகோபாலா ‘மட’ ராமகோபாலா…
2:37 பிப இல் ஏப்ரல் 10, 2008 | நகைச்சுவை இல் பதிவிடப்பட்டது | 1 பின்னூட்டம்குறிச்சொற்கள்: சத்தியராஜ், நகைச்சுவை, ராமகோபாலன்
இந்துக்கள் வழிபடுகின்ற தெய்வங்களுக்கு விரோதமாக நடிகர் சத்யராஜ் பேசியதற்கு இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தொடர்பாக கர்நாடகத்தில் சில இடங்களில் நடந்த வன்முறை சம்பவங்களை எதிர்த்து திரைஉலகத்தினர் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் நடிகர் சத்யராஜ், இந்துக்கள் வழிபடுகின்ற தெய்வங்களுக்கு விரோதமாக பேசிய பேச்சை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
தன்னை நாத்திகன் என்று கூறிக் கொள்ளும் இவர், தமிழ்நாட்டில் முருகன் இருக்கும் போது கேரளத்து ஐயப்பனையும், கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் உள்ள தெய்வங்களை ஏன் வழிபட வேண்டும்? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
முருகன் புகழ்பாடும் சத்யராஜ் எத்தனை முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தியிருக்கிறார்? முருகன் கடவுள் இருக்கிறார் என்பதை ஒத்துக் கொள்கிறாரா? கி.வீரமணியிடம் முருகன் புகழ்பாடுவாரா?
மற்ற மதங்களை பற்றி பேச தைரியமற்ற கோழை, இந்து மதத்தை மட்டும் இழிவுபடுத்தி பேசுகிறார். நடிகர் சங்கம் இதை கண்டிக்க வேண்டும்.
“தமிழ் உணர்வு’ சத்யராஜ் தமிழ்நாட்டு பெண் நடிகைகளுடன் மட்டும் தான் நடிப்பேன். வேறு மாநில நடிகைகள் வேண்டாம் என்று சொல்வாரா?
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் சீக்கிரம் நிறைவேற அரசை வற்புறுத்துகிறோம். மத மோதலை உருவாக்கும் சத்யராஜை வன்மையாக கண்டிக்கிறோம்.
நன்றி: idlyvadai.blogspot.com
இதப் படிக்கும் போது எனக்கு சிரிப்பு சிரிப்பா வந்திச்சுப்பா. நெஜமாத் தான்! இந்த மாமா என்ன சொல்றாரு பாரேன். சத்தியராஜ் என்ன புதுசாவா இந்து சாமிங்கள திட்டுறாரு. இந்த உண்னாவிரதத்துல அவரு எந்த சாமியையும் திட்டல. அந்த சாமிங்களுக்கு காசு வாங்காம பிரசாரம் தான் பண்ணாரு. ‘ராமகோ’ ஒரு விஷயத்த வசதியா மறந்திட்டாரு. சத்தியராஜ் முருகனப் பத்தி மட்டுந்தான் சொன்னாரா, சுடலைமாடன், முனுசாமி, கருப்பசாமி இப்படி பாமர சனங்க வழிபடற சிறு தெய்வங்களைப் பத்திக் கூட தான் சொன்னாரு. இதுக்கு எதுக்கு ‘ராமகோ’வுக்கு கோவம் பொத்துக்கிட்டு வருது. சாமி கும்பிடக் கூட இனிமே நம்ம ஊரவிட்டு போகாதடா, எனக்கு நம்பிக்கை இல்லாட்டியும் நம்புற நீ நம்ம ஊருல இருக்க சாமிங்கள கும்புடுன்னு சொன்னதில ராமகோ என்ன குத்தத்த கண்டாரோ.
சத்தியராஜ் நமிதா கூட ஆடுனா இவருக்கு என்ன வந்துச்சு? ஒருவேளை தன்னால நமிதா கூட ஆடமுடியலைங்கற ஆத்தாமையா?
1 பின்னூட்டம் »
RSS feed for comments on this post.
மறுமொழியொன்றை இடுங்கள்
Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.
//சத்தியராஜ் நமிதா கூட ஆடுனா இவருக்கு என்ன வந்துச்சு? ஒருவேளை தன்னால நமிதா கூட ஆடமுடியலைங்கற ஆத்தாமையா?//
என்க்கு அப்படிதான் இருக்கும் போல தோன்றுகிறது
Comment by jaisankarj(சங்கர்)— மே 6, 2008 #