மணவாடுகள் மன்ச்சிவாடுகள்

12:25 பிப இல் ஏப்ரல் 21, 2008 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 4 பின்னூட்டங்கள்

கடந்த ஆண்டு வேலை காரணமாக ஹைதராபாதுக்குக் குடி பெயர நேர்ந்தது. வருவதற்கு முன்பே முப்பது நாளில் தெலுங்கு பாஷை புத்தகம் வாங்கியாகிவிட்டது. ஆனால் வந்து இறங்கியதும் தான் தெரியும், தெலுங்கு பேசுபவர்களை போல ஹைதராபாதில் ஹிந்தி பேசுபவர்களும் அதிகம் என்று (தெலுங்கு தெரியாத இஸ்லாமியர்கள், வடஇந்தியர்கள்).

வாங்கிய புத்தகம் ஒரு பயனும் இல்லாமல் போனது. அனைத்துமே சைகைதான். ஆனாலும் மொழி தெரியாதவன் என்ற காரணத்துக்காக அவர்கள் என்னிடம் காட்டிய கனிவுதான் ஆர்வத்தோடு என்னைத் தெலுங்கும் அரைகுறையாகவாவது ஹிந்தியும் பேச வைத்தது.

தினமும் என்னை வீட்டிலிருந்து அலுவலகத்து அழைத்துச் செல்லும் கார் ஓட்டுனர்கள் காட்டுகிற பரிவு கூட என்னை ஆச்சரியப்பட வைத்தது. சில வருடங்களுக்கு முன் வளைகுடாவில் வேலைபார்த்த ஒரு ஓட்டுனர் தன்னோடு பணிபுரிந்த தமிழரை பற்றிக் கூறியது தான் வியப்பின் உச்சம். “தமிழர்கள் சொன்ன வார்த்தைக்காக உயிரைக் கூட தருவார்கள்,” என்று. பதிலுக்கு ”உங்களுடன் கூட எங்களுக்கு நதி நீர் தகறாறுகள் இருக்கிறது, அதற்காக கன்னடர்களைப் போல் நீங்கள் எந்தத் தமிழனையும் அடித்ததில்லை” என்று கூறினேன். காரை விட்டு இறங்கிய பிறகு “மீரு செப்பின மாட, நாக்கு சால கர்வங்கா உந்தி சார்,” என்று கூறிச் சென்றார். கொஞ்சம் கஷ்டப்பட்டால் புரிந்துகொள்ளலாம். அப்படித்தான் நானும் தெலுங்கு பேச ஆரம்பித்தேன். அவர் சொன்னதற்கு ”நீங்க சொன்ன வார்தை எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு சார்” என்று அர்த்தம். இந்த வாக்கியத்தின் முன்பு ஆந்திரர்கள் மாநிலப் பிரிவினையின் போது சொன்ன “மதறாஸ் மனதே” கூட மறந்து போனது. மதறாஸ் அவர்களுக்கு இல்லாமல் போனாலும் மதறாஸ் மக்களை அவர்கள் மக்களாகவே பாவிக்கிறார்கள்.

எனக்காக, அவர்கள் என் மொழியைக் கற்றுக்கொள்ளாமல், அவர்கள் அன்புக்காக என்னைத் தெலுங்கு கற்றுக்கொள்ளவைத்த மணவாடுகள் உன்மையில் மன்ச்சிவாடுகள்தான்.

Advertisements

4 பின்னூட்டங்கள் »

RSS feed for comments on this post. TrackBack URI

 1. நம்மை( சென்னையிலேயே பக்கத்து வீட்டுக்கார தெலுங்கு அம்மாவின் அன்புத் தொல்லையால் தெலுங்கு கற்றுக்கொண்டு அவரோடு மாட்டலாடிய )என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்,தெலுங்கு கற்றுக்கொள்ளவைத்து தான் தமிழ் கற்றுக்கொள்ளாமல் தப்பிவிடும் தெலுங்கு பெத்தம்மாக்கள் நல்லவரா இல்லை வல்லவர?
  கேள்வியுடன்
  கமலா

 2. மனதைத் தொட்டுட்டாங்க

 3. வணக்கம் கமலாம்மா,

  அன்புத் தொல்லைகளுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் செவிசாய்க்கலாம். மேலும் தாய்மொழியும் ஆங்கிலமும் மட்டுமே தெரிந்திருப்பவர்கள் வாய்பேச முடியாதவர்களுக்கு சமம் என்றே சொல்லலாம்.

  நம்மவர்கள் பலருக்கு ஹிந்தி கற்றுக்கொள்ளும்போது இத்தகைய யோசனைகள் வருவதில்லை. மாநில மொழிகள் எனும்போது தான் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மை. வேண்டாமே இந்த குறுகிய சிந்தனை!

  என்னுடைய ”பொறுத்தது போதும்” பதிவைப் படித்தவர்களுக்கு நான் இப்படி சொல்வது கொஞ்சம் வியப்பாகக் கூட இருக்கலாம். நம்முடைய மொழியை மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நம்மிடம் இருக்குமானால் நாமும் மற்றவர்களின் மொழிகளை மதிக்க வேண்டுமல்லவா!

 4. N.T.R.GAARU,A.N.R.GAARU,CHANDRABABU GAARU,REDDY GAARU.MAHESH BABU GAARU, CHIRANJEEVI GAARU ANTHA GAARULUME MANCHI VAALLE.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.

%d bloggers like this: