ஜாக்கி சான்

5:10 முப இல் ஏப்ரல் 28, 2008 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 12 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , ,

மற்ற பதிவுகளைப்போல் இதுவும் தசாவதார விழா பற்றிய பதிவு என்று நினைத்தால் நான் பொறுப்பல்ல. இந்த பதிவுக்கும் தசாவதார பாடல் வெளியீட்டு விழாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அறுதியிட்டு உறுதியிட்டு இன்னும் எதெல்லாம் இடவேண்டுமோ அதெல்லாம் இட்டு கூறிக்கொள்கிறேன்.

ஜாக்கி சான் அனிமேட்டட் சீரிஸ் எனப்படும் கார்ட்டூன் நிகழ்ச்சியைப் பற்றித்தான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன். கதைப்படி ஜாக்கி ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர். ஜாக்கி, ஜாக்கியின் அண்ணன் மகள் ஜேட் (சுட்டி டிவியில் ஜூலி), அங்கிள் (கதை முழுவதும் அங்கிள் என்றே அழைக்கப்படுகிறார்), தோரு (சுட்டியில் பீமா), மற்றும் கேப்டன் ப்ளாக் (விஜயகாந்த் இல்லை) ஆகியோரைச் சுற்றித் தான் கதை. அங்கிள் பழங்காலப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருப்பவர். மந்திர தந்திரங்களிலும் தேர்ச்சி உள்ளவர். தோரு வில்லன் கோஷ்டியிலிருந்து மனம் மாறி அங்கிளிடம் பனியாளராக சேர்ந்துகொள்கிறார். அங்கிளிடம் மந்திர தந்திரங்களையும் சிஷ்யராக இருந்து கற்றுக்கொள்கிறார். ஜாக்கியின் அண்ணன் மகள் ஜேட் ஜாக்கியின் பொறுப்பில் வளர்கிறாள். அவளுடைய பெற்றோர் ஹாங்காங்கில் இருக்கிறார்கள்.

தீயசக்திகளை எதிர்த்து நல்லவர்களான கதநாயகன் மற்றும் அவரைச் சேர்ந்தவர்கள் போராடுவதுதான் கதை. கேப்டன் ப்ளாக் தலைமையில் இயங்கும் செக்‌ஷன் 13 மந்திர தந்திரங்களில் தேர்ந்த குற்றவாளிகளைப் பிடிப்பதற்காகவே அமைக்கப்பட்டது. கேப்டன் ப்ளாக் தன் நண்பன் ஜாக்கியிடம் சிக்கலான சமயங்களில் உதவி கேட்பது வழக்கம். என்னதான் செக்‌ஷன் 13ன் தலைவராக இருந்தாலும் கேப்டன் ப்ளாக் கதாபாத்திரம் ஏறக்குறைய கோமாளித்தனமானதுதான்.

கதைக்கு சுவாரசியம் சேர்ப்பவை சக்திவாய்ந்த பன்னிரண்டு மந்திரக் கற்கள். காளை, புலி, டிராகன், முயல் போன்ற விலங்குகளின் முத்திரை பதிக்கப்பட்ட அந்த மந்திரக் கற்களை கையில் வைத்திருக்கும் வரை அந்த கற்களுக்குரிய சக்திகள் கிடைக்கும். இந்த பன்னிரண்டு மந்திரக் கற்களால் உயிர் பெற்றுவிடுகிறது ஷெண்டு என்கிற தீயசக்தி உடைய டிராகன். இழந்த மந்திரக் கற்களை ஷெண்டுவிடமிருந்து மீட்கிறார் ஜாக்கி.

ஜாக்கி ஒவ்வொரு முறை தீயசக்திகளை எதிர்க்கும்போதும் ஜேட் அவருக்கு உதவ முன்வருகிறாள். ஆனால் ஜேட் சின்ன பெண் என்பதால் ஜாக்கி வலுக்கட்டாயமாக அவளை கழற்றி விட்டுவிடுகிறார். இருந்தாலும் ஒவ்வொரு முறையும் ஜாக்கிக்குத் தெரியாமல் அவரைத் தொடர்ந்து சென்று உதவி செய்கிறாள் ஜேட். ஜாக்கிக்கு உதவி செய்ய ஜேட் ஒரு குழுவை அமைக்கிறாள். அதற்கு ஜே. டீம் என்று பெயர் சூட்டுகிறாள். ஜே. டீமில் ஜேட், கேப்டன் ப்ளாக், மல்யுத்த வீரர் எல் டோரோ, அவருடைய ரசிகன் பேகோ (சுட்டியில் என்ன பெயர் என்று தெரியவில்லை), மற்றும் வைபர் (சுட்டி – கல்லிராணி) ஆகியோர் இருக்கின்றனர்.

எனக்கு ஜாக்கியை விட ஜேட் (ஜூலி) ஐத்தான் மிகவும் பிடிக்கும். சுட்டியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சியில் ஜாக்கிக்கு குரல் கொடுப்பவர் முரளி குமார். இவரை பல தொலைக்காட்சித் தொடர்களில் பார்த்திருக்கலாம். ஜூலிக்கு குரல் கொடுத்தவருடைய பெயர் தெரியவில்லை. ஆனால் அருமையான குரல் வளம். ஜூலி என் அழகு குட்டி செல்லம். நேரம் கிடைத்தால் சுட்டி டிவியில் பாருங்கள்.

சுட்டி ”விக்னேஷுக்காக” இதோ ஒரு ஜாக்கி அட்வென்ச்சர் காட்சி.

Advertisements

12 பின்னூட்டங்கள் »

RSS feed for comments on this post. TrackBack URI

 1. நல்லாயிருக்கு !!!

 2. நன்றி சேவியர், அனைத்து பின்னூட்டங்களுக்கும். ஞாயிற்றுக்கிழமை இங்கே (ஹைதராபாதில்) தசாவதாரம் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டபோது மின்வெட்டு. அந்த கடுப்பில் எழுதியது.

 3. ஏம்ப்பா....... ஒடம்பு எப்டி கீது.......

 4. ஜாக்கி உடம்புக்கென்ன? சும்மா கின்னுன்னு இருக்காரு.

  கடுகண்ணா, நீங்க மட்டுந்தான் ”கடுப்புடன் தாளிப்பீங்களோ”. நாங்களும் கொஞ்சம் கடுப்புடன் எழுதுறோமே. கோவிக்காதிங்க.

 5. ஆமாம் நான் கூட என் அக்கா பசங்களோட பசங்களா இருந்து பார்ப்பேன்.. ஜூலி ரொம்ப சுட்டி!

 6. அங்கில்… அங்கில்… எங்களுக்கு ஜாக்கி கார்டுன் போட்டு காட்டுவீங்களா உங்க பிலாக்ல…

  பாய்… பாய்… அங்கில்

 7. யோவ் விக்கி, நா உனக்கு அங்கிளா!!! நேர்ல வா உன்ன உண்டு இல்லைன்னு ஆக்கறேன்.

 8. இந்த வயசுல சுட்டி டிவி தேவையா?

 9. //
  இந்த வயசுல சுட்டி டிவி தேவையா?
  //

  தப்பு தப்பு தப்பு தப்பு, அதெல்லாம் நீ பேசகூடாது, நீ பேசகூடாது. நீ தப்பா பேசுற.

  விக்கி +1 லேந்து +2 போறாரு, நா எல்.கே.ஜி. லேந்து யூ.கே.ஜி. போறேன். நயன்தாரா என் கிளாஸ்மேட். அந்த காண்டுல தான் பின்னூட்டத்துல வந்து லந்த குடுக்குது விக்கி. சொல்லிவை!!! நா ரொம்ப மோசமானவன்.

 10. சின்னப்புள்ளத்தனமா இல்ல இருக்கு...............

 11. சாரி அங்கில்…. இனிமேல் நான் உங்கள மாமானு கூப்டரேன்…. மாமா… மாமா… உங்க கிளாஸ்மேட் நயந்தாரா மேல எனக்கு ஒரு இது… கொஞ்சம் எடுத்து சொல்லி எங்கள சேத்துவைங்க மாமா….

  வர்டா….

  பாய் பாய் மாமா…

 12. ஏய், உன் வருங்கால அத்தையை பத்தி தப்பா பேசலாமா? போ, போய் சுட்டி டிவில MIB பாரு போ!!!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.

%d bloggers like this: