அபத்தமே உன் பெயர்தான் ராமகோபாலனா?

8:17 பிப இல் மே 5, 2008 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 12 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , ,

சென்னை : கமல்ஹாசன் 10 வேடங்களில் நடிக்கும் “தசாவதாரம்’ படத்தில் இடம்பெறும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காமல் படத்தை வெளியிடக் கூடாது என இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராம.கோபாலன் வெளியிட்ட அறிக்கை:

“தசாவதாரம்’ படத்தில் சைவ, வைணவ சமயங்களுக்கிடையே 16-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட மோதலை காட்சியாக்கி இருக்கிறார்கள். அப்போது கோவிலில் இருந்த சாமி சிலைகளை சேதப்படுத்துவது போன்ற சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெறுவதாகத் தெரிகிறது.

இந்து மதத்தைப் பற்றி எப்படி வேண்டுமானாலும் சித்திரிக்கலாம் என்ற எண்ணத்தோடு இந்தப் படக்குழுவினர் செயல்பட்டுள்ளனர். நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் இதுபோன்ற சர்ச்சைக்குரிய காட்சிகளை சினிமாவில் அனுமதிக்கக்கூடாது.

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காத பட்சத்தில் “தசாவதாரம்’ படத்தைத் தமிழகத்தில் திரையிட அனுமதிக்கமாட்டோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி: நெல்லைத் தமிழ் டாட் காம்

தசாவதாரம் திரைப்படத்தில் சைவ வைனவ மோதல் குறித்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று கூப்பாடு போடுகிறார் ராமகோபாலன். சைவ வைனவ மோதல் என்பது தமிழகத்தின் நிகழ்ந்ததுதானே. குலோத்துங்க சோழன் காலத்தில் சிதம்பரத்தில் இருந்த கோவிந்த ராஜ பெருமாள் சிலை கடலில் போடப்பட்டது வரலாறு.

இதில் எங்கே வரலாற்றுத் திரிபு வந்தது? இதில் எங்கே இந்து மதம் களங்கப்படுத்தப் பட்டது? கதை நிகழ்ந்த காலத்தில் இந்து மதமே கிடையாதே. சைவம், வைனவம், சாக்தம், கௌமாரம், கானபத்தியம், போன்ற இப்போதைய இந்து மதத்தின் உட்பிரிவுகள் ஒவ்வொன்றும் தனித்தனி மதங்களாக விளங்கிய காலம் அல்லவா அது. சொல்லப் போனால் இப்போது ராமகோபாலன் செய்துகொண்டிருப்பதுதானே வரலாற்றுத் திரிபு.

மேலும் சைவ வைனவ மோதல் 16 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்தது என்று கூறுகிறார். அவருடைய வரலாற்று அறியாமையை நினைத்து பரிதாபம்தான் பட முடியும். 16 ஆம் நூற்றாண்டு என்பது இந்தியாவில் மொகலாயர்களின் காலம்.

இதை எல்லாம் பார்க்கும்போது “அபத்தமே உன் பெயர்தான் ராமகோபாலனா?” என்று தான் கேட்கத் தோன்றுகிறது.

Advertisements

12 பின்னூட்டங்கள் »

RSS feed for comments on this post. TrackBack URI

 1. சரிதான். க‌ம‌ல் எடுத்த‌து உண்மையான‌ வ‌ர‌லாறு எனில் எதிர்ப்ப‌தில் பொருளில்லை.

  \\\16 ஆம் நூற்றாண்டு என்பது இந்தியாவில் மொகலாயர்களின் காலம்.///

  பொதுவாக‌ மொக‌லாய‌ர்க‌ள் கால‌ம் என்றால், மொக‌லாய‌ர்க‌ள் பெருவாரியான‌ ப‌குதியை ஆண்டு கொண்டிருந்த‌ன‌ர் என்றே பொருள். ம‌ற்ற நாடுக‌ள் போல‌ன்றி, இந்தியாவில் எந்த‌க் கால‌த்திலும் ஒரே குடையின் கீழ் அனைத்துப் ப‌குதிக‌ளும் இருந்த‌தில்லை. ஆங்காங்கே சிறு, குறு அர‌சாங்க‌ங்க‌ளும் கோலோச்சி வ‌ந்துள்ள‌ன‌.

 2. Ramagopalan is stupit. Just for advertising he is doing all this things…

 3. நன்றி கடுகு அண்ணா,

  16ம் நூற்றாண்டு மொகலாயர்களின் காலம் என்று குறிப்பிட்டிருந்தேன். தமிழகத்தின் அரசியலுக்கும் மொகலாயர்களுக்கும் எந்த நேரடித் தொடர்பும் இல்லைதான். கிபி 848 முதல் கிபி 1279 வரையுள்ள காலங்கள் மட்டுமே சோழர்களின் காலம். மொகலாயர்களின் காலத்துக்கு முன்பே சோழப் பேரரசு முடிவுக்கு வந்துவிட்டது என்பதற்காகத்தான் இவ்வாறு குறிப்பிட்டேன்.

  வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

 4. இந்த காலத்தில் சைவ வைணவ மோதல் ஏன் என்று ராம கோபால்ன் நினைத்திருக்கலாம்

 5. இந்தக் காலத்தில் அது தேவையில்லை என்பதுதான் என்னுடைய விருப்பமும். ஆனால் அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்று சொல்வதைத்தான் வரலாற்றுத் திரிபு என்கிறேன்.

 6. இன்னாபா, இன்னிக்கு லீவா?……

 7. உங்களுக்கு ராம கோபாலன் மேல என்ன கோவம்?

 8. அன்பு ஜெய்சங்கர்,

  ராமகோபாலனுடன் எனக்கு என்ன தனிப்பட்ட விரோதம் இருக்க முடியும் சொல்லுங்கள்? “நாங்கள் இதை எல்லாம் மதிக்கிறோம், இவற்றை எல்லாம் விமர்சிக்கவே கூடாது” என்று மற்றவர்கள் மீது இவரும் இவருடைய அமைப்பும் செய்கிற கருத்துத் திணிப்பு அழிச்சாட்டியத்ததான் வெறுக்கிறேன். எல்லாத்துலயும் விளம்பரம் தேடுற கீழ்த்தரமான புத்தியைத்தான் வெறுக்கிறேன்.

  சத்தியராஜ் என்கிற நாத்திகர் எதைப் பேசினால் இவருக்கென்ன? சத்தியராஜ் சொல்லிட்டாருன்னு சாமி கும்புடுற எல்லாரும் நாத்திகர்களாக மாறிடப் போறாங்களா? இல்லையே. அவங்கவங்களுக்கு அவங்கவங்க வழி. வரலாறுல நடந்த ஒரு நிகழ்ச்சிய இவரு ஏன் வரலாற்றுத் திரிபுன்னு சொல்றாரு. இந்த மோசடிதான வேணாங்கறோம்.

  ஒரு காலத்தில திரைப்படத்தில வந்த ”சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது”, ”வருவாண்டி தருவாண்டி மலையாண்டி”, “ஆறுபடை வீடுகொண்ட திருமுருகா”, “நவகிரக நாயகியே கருமாரி”, “ஆயர்பாடி மாளிகையில் கன்றினைப் போல் தாய் மடியில்” போன்ற திரைப் பாடல்களைக் கூட இவுங்க பக்திப் பாடல்களா ஏத்துக்கிட்டு, ஆடி மாசமும், வைகாசி மாசமும், மார்கழி மாசமும் ஒலிபெருக்கிய கட்டி பாடவிட்டாங்களே, அப்ப எந்த நாத்திகன் இவுங்கள கையை புடிச்சு தடுத்தான். திரைத்துறை இதுக்கு மட்டும் வேணும். “மலை மலை மருதமலை” ன்னு ஒரு பாட்டு எழுதுனா மட்டும் அரை மரத்து வேப்பிலையை அப்படியே கட்டிக்கிட்டு கூடாது, கூடாதுன்னு குதிக்கிறாரு இந்த ஐயா. அத இயல்பா எடுத்துக்கிட்ட மாதிரி இதையும் இயல்பா எடுத்துக்க வேண்டியதுதானே.

  இதே திரைத்துறை கண்ட கண்ட குப்பையையும் கழிவையும் நம்ம கண்ணுலயும் காதுலயும் கொண்டுவந்து கொட்டுதே. அதுல எதையாவது தட்டிக்கேட்டாரா இந்த பெரிய மனுசன்.

  உதாரணத்துக்கு இந்து படத்தில் வந்த “எப்படி எப்படி சமைஞ்சது எப்படி”, “உட்டாலக்கடி செவத்த தோலுடா, உத்து பாத்தா உள்ளே தெரியும் நாயுடு ஹாலுடா” மாதிரி பாட்டை எல்லாம் உங்க அக்கா தங்கச்சிகளோட ஒன்னா உக்காந்து பாக்க முடியுமா, கேக்க முடியுமா? ஏன்டா இப்படி எழுதுறீங்கன்னு இந்த ராமகோபாலன் அப்ப கேக்கலியே. அப்ப சும்மா இருந்தவருக்கு இப்ப மட்டும் எங்க பொத்துக்கிட்டு வடியுதுன்னுதான் கேக்குறேன்.

  இதுமாதிரி கழிசடைங்கள கண்டிச்சிட்டு வந்து ராமகோபாலன் என்னை செருப்பு, தொடப்பத்த கொண்டு அடிக்கட்டும். மறுபேச்சில்லாம வாங்கிக்கிறேன்.

  ஒருமுறை கூட நேர்ல பாக்காத அவரோட எனக்கு என்ன விரோதம் இருந்திட போகுது? அதுக்காக ஒவ்வொரு முறை ராமகோபாலன கண்டிச்சி பதிவு போடும்போதும் “தனிப்பட்ட விரோதத்தில் எழுதப்பட்டதல்ல” ன்னு என்னால மறுப்பு போட்டுக்கிட்டிருக்க முடியாதுங்க. அதையும் சொல்லிட்டேன். வரட்டுங்களா.

  அன்புடன்

  விஜய்கோபால்சாமி.

 9. அண்ணா இவ்ளோ பெரிய பதில் சொன்னதுக்கு நன்றி. நன்றி சொல்ல தாம்தம் ஆச்சு. நான் ஊருக்கு போய்விட்டேன். இனிமே நீங்க ராமகோபாலனை தராளமா திட்டுங்க. நான் ஒன்னுமே சொல்ல மாட்டேன்.

 10. என்னப்பா இது,

  பிள்ளைங்கள பள்ளிகூடத்தில விட வந்த அப்பா அம்மா மாதிரி சொல்றே. நல்ல நகைச்சுவை போ…

 11. […] அபத்தமே உன் பெயர்தான் ராமகோபாலனா? […]

 12. நச் பதிவு !


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.

%d bloggers like this: