பிள்ளைகளிடம் பாரபட்சம்… காட்டப்படுகிறதா இல்லையா?
10:12 பிப இல் மே 11, 2008 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 16 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: சுமை, நீயா நானா, பின்னூட்டம், விஜய் டிவி
ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் இருக்கிற வீடுகளில், பிள்ளைகளிடம் பாரபட்சம் காட்டப்படுகிறதா இல்லையா? கடந்த இரு வாரங்களாக விஜய் டிவி நீயா நானா? வில் விவாதிக்கப்பட்ட தலைப்பு இது.
இதைக்குறித்து நான் எதுவும் எழுதப்போவதில்லை. பின்னூட்டங்களின் வாயிலாக இப்பதிவைப் படிக்கப் போகிறவர்கள்தான் எழுத வேண்டும். இப்பதிவிற்கு பின்னூட்டம் அளிக்க சகபதிவர்கள் சிலருக்கு அழைப்பும் அனுப்ப உள்ளேன். தற்செயலாக வரக்கூடிய வாசகர்களும் பின்னூட்டமிடலாம்.
உங்கள் குடும்பத்திலோ, நீங்கள் பார்த்த குடும்பங்களிலோ நிகழ்ந்த சம்பவங்களாகக் கூட இருக்கலாம். அவை எத்தகைய பாரபட்சங்கள் அல்லது அந்த பாரபட்சம் உங்களிடம் அல்லது நீங்கள் பார்த்தவர்களிடம் எத்தகைய பாதிப்புகளை உண்டாக்கியது போன்றவற்றையும் எழுதலாம்.
எங்கே கொட்டுவது என்று தெரியாமல் மனதிலேயே வைத்திருப்பவர்களுக்கு இது கூட ஒரு வடிகாலாக அமையலாம். உங்கள் அடையாளத்தை வெளிக்காட்ட விருப்பமில்லையெனில் உங்கள் முகத்தை மறைத்துக்கொண்டு கூட கொட்டிவிட்டுப் போகலாம்.
வாருங்கள். தவறாமல் எழுதுங்கள். இங்கே நீங்கள் இறக்கி வைப்பது உங்கள் மனதை அழுத்துகிற சுமையாகக் கூட இருக்கலாம்.
16 பின்னூட்டங்கள் »
RSS feed for comments on this post. TrackBack URI
மறுமொழியொன்றை இடுங்கள்
Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.
சரி என்று கூட யாராவது சொல்கிறார்களா என பார்த்து விட்டு எழுதுகிறேன் 🙂
Comment by சேவியர்— மே 12, 2008 #
நேற்று அந்த நிகழ்ச்சியை நான் பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது.
பிள்ளைகள், தங்களது குறைகளையும், பெற்றோர் தங்கள் பிள்ளைகள் மீதான பாசத்தையும் வெளிப்படுத்திய விதம் அருமையாக இருந்தது.
Comment by தெருவோர பித்தன்— மே 12, 2008 #
எல்லாம் drama. பொய். நாடகம். ஏற்கன்வே training கொடுத்து நடத்துகிறார்கள்
Comment by jaisankarj— மே 12, 2008 #
அட அதுதான் தெரியுமே. நீ பாத்த மேட்டர் ஏதாவது இருந்தா சொல்லுய்யா…
Comment by vijaygopalswami— மே 12, 2008 #
நான் தொலைக்காட்சி பார்ப்பதில்லை. இருந்தாலும் மனதில் நினைப்பவை......
ஒரு கண்ணில் சுண்ணாம்பும் மறு கண்ணில் வெண்ணையும் அன்னை வைக்க மாட்டார் என்பதும், எல்லா பிள்ளைங்களும் அம்மாவுக்கு ஒண்ணுதான் என்பதும் அனுபவத்துக்கு ஒத்து வராத நடை என்பது கண்கூடு. ஒரே வீட்டில் இரு பிள்ளைகள் இருந்தால், ஒரு பிள்ளையை ஆங்கில வழிக் கல்வியிலும் மற்றொரு பிள்ளையை தமிழ் வழிக்கல்வியிலும் படிக்கப் போடுபவர்கள் இதற்கு உதாரணம். இப்போது ஆங்கில வழிதான் எல்லாம் என்பதால் இரு பிள்ளைகளில் ஒன்றை தரமான பள்ளியிலும் மற்றொரு குழந்தையை சற்று குறைந்த பள்ளியிலும் சேர்ப்பதை இன்றும் காணலாம். கறுப்பு குழந்தை ஒரு மாதிரியும் சிவப்பு குழந்தை ஒரு மாதிரியும் நடத்தப்படுவதை பலமுறை கண்டிருக்கிறேன். ஆண் குழந்தை ஒருமாதிரியும், பெண்குழந்தை ஒரு மாதிரியும் நடத்தப்படுவது சர்வ சாதாரணம், மறுக்க முடியாத நிதர்சனம்.
இதெல்லாம் குழந்தைப் பருவத்தில் என்றாலும், பின்னர் குழந்தைகள் வளர்ந்து ஆளாகி, பெற்றோர் பெரிசுகளான பிறகு பண்ணும் ரவுசுகளையும் நிறைய பார்த்திருக்கிறேன்.
எனக்குத் தெரிந்து ஒரு குறிப்பிட்ட அமைப்புள்ள குடும்ப அமைப்புகளை நிறைய பார்த்திருக்கிறேன்.
இந்த வகைப் பெற்றோருக்கு இரண்டு அல்லது மூன்று (மேலும் இருக்கலாம்) பிள்ளைகள் இருப்பார்கள். ஒருவர் நிறைய சம்பாதிப்பார், மற்றவர்கள் சுமாரான நிலையில் இருப்பார்கள். நிறைய சம்பாதிப்பவரிடமிருந்து எதையாவது பீராய்ந்து கொண்டு போய் குன்றிய நிலை பிள்ளைகளுக்கு கொடுப்பது இவர்களின் வழக்கம். நல்லது தான் என்றாலும், பெரும்பாலான இடங்களில் அந்த 'நிறைய சம்பாதிக்கும் தனவான்' வெறும் பணங்காய்ச்சி மரமாகவே கருதப்படுவார். அவர்தான் குடும்பத்தில் நிறைய கெட்டபெயர் வாங்குவார் (எவ்வளவு நல்லவராக இருப்பினும்).
பெருசுகளுக்கு குறைய சம்பாதிப்பவர்களின் பிள்ளைகளின் மேல்தான் பாசம் பொங்கும். நிறைய சம்பாதிப்பவர்களின் பிள்ளைகள் இவர்களுக்கு ஒரு மாற்று குறைதான். அந்த நிறைய சம்பாதிப்பவர் வீட்டிலிருந்து தான் இவர்களுக்கு மூக்குக் கண்ணாடி, பொடி டப்பி, மருந்துகள், செலவுக்கு பணம் எல்லாம் கிடைக்கும். ஆனாலும் நிறைய சம்பாதிப்பவர் பற்றியும் அந்த வீட்டு மருமகள் பற்றியும் இல்லாததும் பொல்லாததுமாக புறணி பேசுவதும் பலரின் பழக்கம்.
மற்றொரு வகைப் பெற்றோர். குன்றிய நிலைப் பிள்ளைகளைக் கண்டு கொள்வதே இல்லை, ஒட்டி உறவாடுவதுமில்லை. கொழுத்த பிள்ளை வீட்டில்தான் இவர்களின் நங்கூரம் பாய்ந்திருக்கும். என்ன செய்வது இவர்களின் மிச்ச நாட்களையும் வசதியாக, பிரச்சினையின்றி ஓட்ட வேண்டுமே... பாவம்.
இதெல்லாம் நான் பார்த்த சில குடும்பங்களில் நடப்பவை, ஒவ்வொருவரின் பார்வைக்கும் கண்டிப்பாக வித்தியாசம் இருக்கும்.
என்னைப் பொறுத்த வரையில் பாரபட்சம் காட்டப்படுவது உண்மை என்ற பட்சத்தில் நிச்சயம் அது தவறுதான்.
({ஏம்ப்பா, இன்னாத்துக்கு இப்டி தலைப்பெல்லாம் குடுத்து எயுத சொல்றே, பேஜாரா கீதுப்பா உன்னோட........ இருந்தாலும் பல தபா ரோசிச்ச ஒரு மேட்டராச்சே இது, அதனால எயுதிட்டேன்.})
Comment by கடுகு.காம்— மே 12, 2008 #
மிக்க நன்றி கடுகு அண்ணா. மிக விரிவான அலசல்.
Comment by vijaygopalswami— மே 12, 2008 #
Still am facing this probelm. I am one among twin child to my parents. I was brought up by grandparents till age of 10 (from 6 months baby). My parents have more affection to my brother and sister when compared to me. My mother saying that she has no difference among us; but certainly I feel the otherway. I am sure that it is not intentional but persists. I’ve no answer to this question.
Comment by Someone— மே 13, 2008 #
//ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் இருக்கிற வீடுகளில், பிள்ளைகளிடம் பாரபட்சம் காட்டப்படுவது சரியா, தவறா? கடந்த இரு வாரங்களாக விஜய் டிவி நீயா நானா? வில் விவாதிக்கப்பட்ட தலைப்பு இது.//
விவாதிக்கப்பட்ட தலைப்பு ‘பெற்றோர்கள் பிள்ளைகளிடம் பாரபட்சம் காட்டுகிறார்களா இல்லையா ?’ என்று நினைக்கிறேன். சரியா தவறா என்றல்ல. பெரிய வித்தியாசம் இருக்கிறது பாருங்கள்.
Comment by அனானி— மே 14, 2008 #
சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி அனானி அவர்களே!!! தவறு திருத்தப்பட்டுவிட்டது.
Comment by vijaygopalswami— மே 14, 2008 #
எங்கள் வீட்டில் நாங்கள் சகோதர சகோதரிகள் ஏழுபேர். எல்லோருக்கும் திருமணமாகி தனித்தனியே குடும்பமாக வாழ்ந்தாலும் ஆண்டுக்கு ஓரிரு முறையேனும் கிராமத்துக் குடும்ப வீட்டில் ஒன்றாய் சேர்ந்து கொட்டமடிக்கும் குடும்பம் எனது.
இதுவரை ஒரு முறை கூட எந்த குடும்பத்துக்கு இடையேயும் ஒரு சிறு சண்டை சச்சரவு கூட வரவில்லை என்பது திருஷ்டி சுத்திப் போடப்பட வேண்டிய செய்தி.
அதற்கு எனக்குத் தெரிந்த ஒரே காரணம் என் பெற்றோர் எங்களிடம் எந்தவிதமான பாரபட்சமும் காட்டாதது தான் !
குடும்பத்தில் எதிர்காலத்தில் பிள்ளைகளிடையே, அவர்களுடைய குடும்பத்தினரிடையே மாபெரும் சண்டை வரவேண்டுமென நினைக்கும் பெற்றோர் செய்ய வேண்டியதெல்ல்லாம் கொஞ்சம் பாரபட்சம் காட்டுதல் மட்டுமே !
Comment by சேவியர்— மே 14, 2008 #
நன்றி சேவி அண்ணா. அடுத்து வரும் தலைமுறையினரும் கூட இதே ஒற்றுமையுடன் இருக்க வாழ்த்துக்கள்.
//
My mother saying that she has no difference among us; but certainly I feel the otherway. I am sure that it is not intentional but persists.
//
இவர் கூட பாரபட்சம் இருந்திருக்கலாம் ஆனால் அது தெரிந்து காட்டப்பட்டதல்ல என்று உறுதியாகக் கூறுகிறார். அறியாது நிகழ்ந்ததாயினும் அறியாத வயதில் விழுந்த கீறலாக இருந்திருந்தால், நிச்சயம் காயம் பட்டிருப்பார். மேலே கூறியுள்ள வார்த்தைகள் அவருடைய புரிதல்கள் முதிர்ச்சி அடைந்திருப்பதைத்தான் காட்டுகிறது. இந்த புரிதலை அவரது பெற்றோரும் உணரும்போது, அவர் இதுவரை இழந்த அல்லது இழந்ததாக கருதிக்கொண்டிருக்கும் அன்பைக் கூட உறுதியாக அடையலாம்.
Comment by vijaygopalswami— மே 14, 2008 #
These days when people have only one or two children, the problem is not as prevalant as the earlier generations. And the earlier generation did not even know that such problems existed , they were raised in a crowd of children!.
However, I observed that this kind of attitude is present in some families. From the point of view of youngsters, I have come across complaints from one of the siblings, saying that ” my parents treat me differently from the way they do with my sister/brother”. Sometimes it is done unintentionally. The elder sibling has to bear the injustice, whether intentional or not.
In another family, I have witnessed heartburn and anger till date due to the differential treatment between the boy and the girl. The boy was not treated well by the father, he was abused constantly . But the girl child was encouraged with adoration. This has resulted in so much bitterness. After years, the role is reversed now. The parents do not get the affection they crave for from the son. He is a bitter and angry man and the father refuses to realise that he is responsible!.
Comment by Jayalakshmi— மே 14, 2008 #
ஹாய் ..விஜய்..
நான்..தொலைகாட்சி…பார்ப்பதில்லை…
நிஜம்..என்றெ..நான்..நினைக்கிறேன்…தனக்கு பிடித்த குணமுடைய குழந்தைமீது..தாய்க்கு அதிக பாசம் இருப்பதை..நான் பார்த்திருக்கிறேன்.அதே போல் தனக்கு விருப்பமானவர்களை போல் இருப்பவர்கள்மீதும் அதிக கவனம் வைக்க வாய்ப்புண்டு…
ஒன்றை புரிந்துகொள்ள..வேண்டும்..எல்லோருக்கும்..எல்லோரையும்..பிடித்துவிடாது…தாயும் மகனுமாய்..இருந்தாலும்..அனைவரும்..தனி மனிதர்களே…..
Comment by uumm— மே 15, 2008 #
கடுகு அண்ணா,
இந்த மறுமொழியை நீங்கள் தனிப்பதிவாக போடலாமே? உனக்கேன் இவ்வளவு அக்கறை? பொது நலம் என்பீர்கள்… என் பொது நலத்தில் ஒரு சுயநலமும் இருக்கிறது…
(வேற என்ன, எல்லாம் ஒரு விளம்பரம்தான்)
Comment by vijaygopalswami— மே 17, 2008 #
As per my personal experience Amma is defenetly showing differnce between her sons.
Comment by Sait— மே 27, 2008 #
\\\\\கடுகு அண்ணா,
இந்த மறுமொழியை நீங்கள் தனிப்பதிவாக போடலாமே? உனக்கேன் இவ்வளவு அக்கறை? பொது நலம் என்பீர்கள்… என் பொது நலத்தில் ஒரு சுயநலமும் இருக்கிறது… /////
இப்போதான் பார்த்தேன்…… போட்டுட வேண்டியதுதான் கூடிய சீக்கிரம்…..
Comment by கடுகு— ஜூலை 7, 2008 #