எனக்கு மட்டும் ஏன் இப்படி – II
1:41 முப இல் ஜூன் 17, 2008 | நகைச்சுவை, பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 10 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: அமெரிக்க அதிபர் தேர, நகைச்சுவை, நிதியமைச்சர், ப. சிதம்பரம், பாக்கு வெட்டி, ஹிலாரி கிளிண்டன்
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஒபாமா மற்றும் மெக்கெய்ன் ஆகியோரின் பெயரில் வந்த ஆணுறைகள் விற்பனையில் சக்கைபோடு போடுவதைக் குறித்து சேவியர் அவர்கள் ஒரு பதிவு எழுதியிருந்தார். இந்த தேர்தல் நேர நகைச்சுவையில் அவர் சொல்லாமல் விட்ட ஒரு சுவாரசியமான விஷயமும் உண்டு. அவரும் அதைக் குறித்து ஆர்வமாகக் கேட்டிருந்தார். அதற்காகவே இந்த பதிவு. கடந்த வாரம் தற்செயலாக சி.என்.என். ஐ.பி.என். செய்திகளைப் பார்த்தபோது இந்த சமாச்சாரம் தெரிய வந்தது.
விஷயம் வேறொன்றும் இல்லை. ஹிலாரி கிளிண்டன் வடிவத்தில் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவில் விற்பனையாகின்ற பாக்குவெட்டிகளைக் குறித்த செய்திதான் அது.
ஈகிள்வியூ என்ற அமெரிக்க நிறுவனம் இந்த பாக்குவெட்டியைத் தாயாரித்து விற்பனைக்கு விட்டுள்ளது. அந்நிறுவனம் இந்தப் பாக்கு வெட்டிக்கு காப்புரிமை கோரியும் விண்ணப்பித்துள்ளது. இந்தப் பாக்கு வெட்டிகளை விளம்பரப்படுத்த தனியாக ஒரு வலைத்தளத்தையும் அந்நிறுவனத்தினர் துவங்கியுள்ளனர்.
ஹிலாரி வடிவத்தில் செய்யப்பட்டுள்ள பாக்கு வெட்டியைப் பற்றி ஜார்ஜ் புஷ், அர்னால்ட், ஜான் மெக்கெய்ன், பாரக் ஒபாமா, பில் கிளிண்டன் உள்ளிட்ட அமெரிக்கப் பிரபலங்களின் கருத்துக்களையும் இந்தத் தளத்தில் பதிவு செய்துள்ளனர் (எல்லாம் தள நிர்வாகிகளின் கற்பனைதான்). வால் பேப்பர்கள் மற்றும் பாடல்களுடன் அமர்க்களப்படுத்துகிறது தளம். தளத்துக்கு செல்ல இங்கே சொடுக்கவும்.
நிற்க. இதை எதற்காக இவன் “எனக்கு மட்டும் ஏன் இப்படி – II” ஆக பதிவு செய்தான் என்ற ஐயம் உங்களுக்கு ஏற்படலாம். முன்பே சொல்லியிருக்கிறேன் ஊரே ஒரு விதமாக சிந்தித்தாலும் என்னுடைய சிந்தனை வேறு விதமாக இருக்கும் என்று. அதை மனதில் வைத்துக்கொண்டு தொடர்ந்து படிக்கவும்.
இந்தப் பாக்குவெட்டியைக் கண்டவுடன் எனக்கு வந்த விவகாரமான சிந்தனையை சொன்னால் காரைக்குடிப் பக்கம் இந்த ஜென்மத்தில் நான் கால்வைக்க முடியாது. எனக்குப் பெண் கொடுக்கும் உறவுமுறையில் அங்கே யாரும் இல்லை என்பதால் துணிந்து சொல்கிறேன். நம் ஊர் பிரபலங்களில் யாரையாவது வைத்து இது போன்ற பாக்குவெட்டியைத் தயாரிக்க வேண்டுமென்றால் யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்ற கோணத்தில் யோசிக்கத் தொடங்கினேன். அப்போதுதான் நேற்றைய காலைச் செய்திகளில் கேட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டைப் பற்றிய ஒரு பிரபலத்தின் பேச்சு நினைவுக்கு வந்தது. அந்த பிரபலம் யார் என்பதை மேலே உள்ள தொடுப்பைச் சொடுக்கி நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்.
விவகாரமான சிந்தனை இதோடு முடிந்துவிடவில்லை. இன்னும் இருக்கிறது. வி.சி. ஒன்றைவிடவும் வி.சி. இரண்டினால் எனக்கு பெரிய ஆபத்துகள் ஏற்படலாம். இருந்தாலும் ஹைதராபாதில் இருப்பதாலும் மீண்டும் ஊருக்குச் செல்ல சில மாதங்கள் ஆகும் என்பதாலும் எனது பாதுகாப்புக்கு எந்த வகையிலும் குந்தகம் ஏற்படாது என்றே நம்புகிறேன்.
வி.சி. இரண்டு இதோ உங்கள் பார்வைக்கு: ஹிலாரி அம்மாவாவது பேண்ட் போடுறவங்க. இவரு வேட்டிதானே கட்டுவாரு, அப்புறம் பாக்க எங்க வச்சு ஒடைக்கிறது?
10 பின்னூட்டங்கள் »
RSS feed for comments on this post. TrackBack URI
மறுமொழியொன்றை இடுங்கள்
Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.
ஹா…ஹா… சூப்பரா இருக்கு தொடர்.. தொடருங்கள் 🙂
Comment by சேவியர்— ஜூன் 17, 2008 #
பாக்கேடு பாக்கு உடைந்திடும்…
Comment by விக்னேஸ்வரன் அடைக்கலம்— ஜூன் 17, 2008 #
நல்லா கவிதை மாறி இருக்குல என் பின்னூட்டம்
Comment by விக்னேஸ்வரன் அடைக்கலம்— ஜூன் 17, 2008 #
///
பாக்கேடு பாக்கு உடைந்திடும்…
///
மகனே இதுக்கு நீ சேட் பண்ணும்போது குடுத்த விளக்கத்த இங்க போட்டா என்னால சென்னை, ராயப்பேட்டைல கூட காலவைக்க முடியாது. அங்கதான் காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் இருக்கு.
Comment by vijaygopalswami— ஜூன் 19, 2008 #
விக்னேஸ்வரன் குடுத்த விளக்கத்த என்னோட சேட் பண்ணும் போது சொல்லுங்க ;).
Comment by வெயிலான்— ஜூன் 21, 2008 #
[…] https://vijaygopalswami.wordpress.com […]
Pingback by வே. மதிமாறனை விரட்ட வேண்டும் « வே.மதிமாறன்— ஜூன் 27, 2008 #
பண வீக்கம்ன்னு சொல்லுவாங்களே.
அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லையே.
Comment by jaisankarj— ஜூன் 28, 2008 #
அய்யய்யோ…. வற்றவங்க எல்லாரும் வெவகாரமாவே கேக்குறாங்களே. பதிவுல சொன்ன ரெண்டு வெவகார சிந்தனைக்கு அப்புறம் எனக்கு ஒரு சரியான சிந்தனை வந்துச்சு. பாக்க அவரோட கக்கத்துல வச்சு ஒடைக்கலாமாங்கற யோசனை தான் அது.
Comment by vijaygopalswami— ஜூன் 28, 2008 #
அந்த கா.குடி பிரபலத்தை வச்சே பாக்கு வெட்டிக்கு டிரையல் பார்க்கணும்……..
Comment by கடுகு— ஜூலை 6, 2008 #
///
அந்த கா.குடி பிரபலத்தை வச்சே பாக்கு வெட்டிக்கு டிரையல் பார்க்கணும்……..
///
உங்க கண்ணுல ஒரு கொலை வெறி தெரியுது. கொஞ்ச நாளைக்கு ராயப்பேட்டை பக்கம் போயிடாதிங்க…. 🙂
Comment by vijaygopalswami— ஜூலை 6, 2008 #