சரியா? தவறா?

1:22 முப இல் ஜூலை 12, 2008 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 9 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , ,

கடந்த வாரம் சன் டிவி செய்திகளில் புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி தம்பதியர் பற்றிய ஒரு செய்தியைப் பார்க்க நேர்ந்தது. இவர்கள் இருவரும் பிரியப் போவதாக செய்தி ஏடுகளில் வந்த ஒரு செய்தி காரணமாகவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குமுதம் நாளேடு புஷ்பவனம் குப்புசாமி அவர்களின் தந்தையாரிடம் பேட்டி கண்டு விரிவான செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. கணவரின் குடும்பத்தினரை திருமதி அனிதா மதிப்பதில்லை என்றும் இதன் விளைவாக குப்புசாமி, அனிதா இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. “இசைக் குடும்பத்தில் ஒரு அபஸ்வரம்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்த செய்திக்கு மறுப்பு அளிக்கும் விதமாகவே தம்பதியர் இருவரும் சன் டிவிக்கு பேட்டியளித்தனர்.

இந்த நிகழ்வில் கண்ணை உறுத்துகிற இரண்டு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. சம்பவம் ஒன்று, குமுதம் ஏடு குப்புசாமியின் தகப்பனார் சொன்ன அல்லது சொன்னதாகக் கூறப்படுகிற கருத்துக்களை மட்டும் வெளியிட்டது. குப்புசாமியின் தகப்பனாரைப் பேட்டி கண்டவுடன் இது குறித்துக் குப்புசாமியிடமும் கருத்து கேட்டிருக்கலாம். அவருடைய கருத்துக்களுடன் இந்தச் செய்தி வெளிவந்திருக்குமானால் செய்தியின் நம்பகத்தன்மை உறுதிப்பட்டிருக்கும்.

கண்ணை உறுத்தும் இரண்டாவது சம்பவம், குப்புசாமி தம்பதியர் சன் டிவியின் ஒளிப்பதிவுக் குழுவினரை படுக்கை அறை வரை அனுமதித்தது. குமுதத்தின் செய்தியை மறுக்க வேண்டும் என்பதற்காக குமுதம் செய்த அத்துமீறலுக்கு இணையான ஒரு அத்துமீறலை விரும்பி அனுமதித்தது தான் இந்த இரண்டாவது க.உ. சம்பவம். அந்த செய்திக் காட்சியில் இருவரும் இணைந்து பாடுவதற்கு ஒத்திகை செய்வது போலவும், சந்தோஷமாக உரையாடுவது போலவும் காட்சிகள் வந்தன. இவ்வளவும் அவர்கள் அறியாமல் ஒளிப்பதிவு செய்யப்பட்ட காட்சிகள் அல்ல. இருவரின் ஒப்புதலுடன் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் தான் அவை.குடும்பத்தில் இயல்பாய் நடக்கிற ஒரு சம்பவம் கூட கேமெராவுக்கு முன்னால் நிகழுமானால் அதையும் நடிப்பு என்று கருதுகிற அபாயம் இன்னும் இருக்கிறதல்லவா? சமூகத்தால் மதிக்கப்படுகிற ஒரு குடும்பத்திற்கு இது எப்படித் தெரியாமல் போனது?

குமுதம் வெளியிட்ட செய்தியில் திருமதி அனிதா தன் கணவரின் குடும்பத்தை மதிப்பதில்லை என்பதுதான் முக்கியமாகக் கூறப்பட்டிருந்தது. சன் டிவிக்கான செய்திப் பதிவில் தம்பதியர் இருவரும் இந்த விஷயத்தை ஏற்கவும் இல்லை மறுக்கவும் இல்லை. இன்னும் சொல்வதானால் அதைப் பற்றி வாயே திறக்கவில்லை.

இன்று படுக்கை அறை வரை ஊடகத்தை அனுமதிக்கிற இவர்கள், நாளை ஊடகங்கள் இவர்களது அனுமதியில்லாமலே படுக்கை அறை வரை நுழைய முற்பட்டால் அதை எவ்வாறு எதிர்கொள்வார்கள்?

நடந்தது சரியா, தவறா? படிக்கிற நீங்கள் தான் சொல்ல வேண்டும், பின்னூட்டங்கள் வாயிலாக.

புகைப்படம்: http://www.tamilonline.com

9 பின்னூட்டங்கள் »

RSS feed for comments on this post. TrackBack URI

 1. தவறு

 2. புகைஞ்சுகிட்டுருக்கு.காமராவை படுக்கை அறைவரை விட்டு (புகையை)அணைக்கப் பார்க்கிறாங்க.அணைந்தால் நல்லதுதானே? அதெல்லாம் ( ந‌ல்ல உறவுடன் சன் டிவீயுடன் இருக்கும் வரை)அவங்களுக்குத் தெரியாமல் உள்ள வர‌ மாட்டாங்க.
  அன்புடன்
  கமலா

 3. நமக்கு இதெல்லாம் இப்ப தேவையா விஜய்? 😉

 4. இந்த தம்பதியரை அவர்களின் ‘மக்கள் இசை’ வாயிலாக நாம் அறிகின்றோம், பாராட்டுகின்றோம். அவர்களின் சொந்த விடயங்களில் நாம் ஈடுபாடு காட்ட வேண்டாமென்பது எனது கருத்து. சன், குமுதம் போன்ற ஊடகங்கள் தங்களது வாசகர்கள் மற்றும் நேயர்களை காரணம் காட்டி பிரபலங்களின் சொந்த விடயங்களில் தலையிடுகின்றன. நாம் இது போன்றவற்றை தவிர்க்கலாமே. மேலும்
  குப்புசாமி, அனிதா தம்பதியினர் மகிழ்ச்சியோடு வாழ வாழ்துவோம்.

  நித்தில்

 5. அனைவருக்கும் நன்றி.

  நிதில், நான் சரியா தவறா என்று கேட்டது அனிதா குப்புசாமி கணவர் குடும்பததை மதிக்காமல் இருக்கிறார் என்பதைப் பற்றி அல்ல. ஊடகங்களின் அத்துமீறலையும் அதனை விரும்பி அனுமதித்த இவர்களின் போக்கையும் தான் நான் கேள்விப்படுத்துகிறேன்.

  கமலா அம்மா, ஊடகங்கள் வணிக நோக்கில் எது வேண்டுமானாலும் செய்யலாம். பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன் காலம் தொட்டு டயானா காலம் வரை இப்படி நடந்துகொண்டு தான் இருக்கிறது. இசைக் குடும்பம் இசைவாய் இருந்தால் எனக்கும் மகிழ்ச்சி தான்.

  வெயிலான், அவர்களின் குடும்ப விவகாரங்களை அலசுவது நாகரிகமல்ல, எனக்கும் தெரியும். ஆனால் பொது வாழ்வில் இருப்பவர்கள் ஊடகங்களை எந்த எல்லையில் வைக்க வேண்டும் என்பது வரையறுக்கப்பட வேண்டிய விஷயம். ஆகவே இது தேவையானது தான்.

  முதல் பின்னூட்டம் எழுதிய நண்பர் எதைத் தவறு என்று சொல்லுகிறார் தெரியவில்லை. அனிதா குப்புசாமி செய்ததையா, குமுதம் மற்றும் சன் டிவி நடந்து கொண்டதையா, அல்லது நான் பதிவு எழுதியதையா? 🙂

 6. //இன்று படுக்கை அறை வரை ஊடகத்தை அனுமதிக்கிற இவர்கள், நாளை ஊடகங்கள் இவர்களது அனுமதியில்லாமலே படுக்கை அறை வரை நுழைய முற்பட்டால் அதை எவ்வாறு எதிர்கொள்வார்கள்//

  puthu cd onnu release aavum.

 7. மிக மிக தவறான வியூகம் இது. தம்பதியரின் அன்பு நிஜமெனில் இந்த விளக்கம் தேவையில்லாதது அவர்களை மீறி குமுதத்தில் வந்ததெனில் (நம்பமுடியவில்லை என்றாலும்…) அவர்களிடம் தானே விளக்கம் கேட்கவேன்டும்.
  விஜய் “நாம் சரி என்றால் நமக்கு எல்லாம் சரியாகத்தான் இருக்கும் நாம் தவறென்றால் நமக்கு எல்லாம் தவறாகத்தான் இருக்கும்… “இது மறுக்கமுடியாத உண்மை…
  அவர்களுக்கே வெளிச்சம்….

  விஜய் உங்களுக்கு வேறு விசயம் கிடைக்கவில்லையா. இதற்கு மறுமொழி வேறு… அடிவிழும் அக்காவிடம் இருந்து…

 8. என்னதான் பிரபலங்களா இருந்தாலும், பிரியறாங்களோ இல்லியோ, அது அவங்க பிரச்சனை. இதுல ஊடகங்களுக்கு என்ன அக்கறை? இவங்களுக்குத் தேவை பரபரப்பு செய்தி, அம்புட்டுத்தான்............. இதையெல்லாம் ஆராய்ச்சி பண்ணறதுக்கு பதிலா இன்னொரு 'கொயவெறிக் கவுஜை' எழுதி இருக்கலாம்.

 9. நல்ல கேள்விகள். இயல்பாய் வருகிறது எழுத்து உங்களுக்கு. வாழ்த்துக்கள்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.

%d bloggers like this: