பாம்புக்குத் தலை, மீனுக்கு வால்…

9:50 முப இல் ஓகஸ்ட் 1, 2008 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 16 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , , , ,

இன்று குசேலன் ரிலீஸ்….

(ரஜினிக்குப்) புதிய பஞ்ச் டயலாக்:

நான் சூப்பர் ஸ்டார் இல்லைடா, 100% வியாபாரி…..

இது போன்ற பஞ்ச் டயலாகுகளை நீங்களும் எழுதலாம். விசிலடிச்சான் குஞ்சுகளின் ஜால்ராக்களைத் தவிர மற்றவை பதிப்பிக்கப்படும். பின்னூட்டங்களில் தனி மனிதத் தாக்குதல் இருப்பின், ரஜினியின் வி.குஞ்சுகளுடைய யோக்கியதையை உலகறியச் செய்ய அவை மட்டுறுத்தாமல் பதிப்பிக்கப்படும்.

16 பின்னூட்டங்கள் »

RSS feed for comments on this post. TrackBack URI

 1. இந்த நாலுவரிய படிக்கிறதுக்கு ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி வரவேண்டியிருக்கு. ஏன் சாமி? கோபால்சாமி…….

 2. ரஜின மன்னீப்பு கேட்க வில்லை என்றால் பாதிக்கப்படப்போவது producer – தான்.. ரஜின அல்ல….

  நமக்காக பேசிய ரஜினக்கு நாம் யாரும் குரல் கொடுக்க வில்லை…. மாறாக இழிவு படுத்துகிர்றோம்……

  என்னெ ..100 % வியாபார உலகம் !!!!?

 3. “விசிலடிச்சான் குஞ்சுகளின் ஜால்ராக்களைத் தவிர”–புரியவில்லை… இது யாரை குறிக்கும் ? இரஜினியின் இரசிர்கர்கலையா? அல்லது பின்னுஉட்டம் இடுபவரையா? இதை நிவர்த்தி செய்யவும். உமக்கு பின்னுஉட்டம் இடுவது பிடிக்கவில்லை என்றால் சொல்லவும். நான் முந்தி பின்னுஉட்டம் இட்ட பதிவு பின்பு அப்பதிவு கடவுச்சொல் கிடக்கிறது… நான் தவறாக குஉரியிரிந்தால் மன்னிக்கவும்

 4. @ மாதரசன்

  விசிலடிச்சான் குஞ்சு = Rajini Rasigargal

 5. ///
  ரஜின மன்னீப்பு கேட்க வில்லை என்றால் பாதிக்கப்படப்போவது producer – தான்.. ரஜின அல்ல….

  நமக்காக பேசிய ரஜினக்கு நாம் யாரும் குரல் கொடுக்க வில்லை…. மாறாக இழிவு படுத்துகிர்றோம்……

  என்னெ ..100 % வியாபார உலகம் !!!!?
  ///

  ஒரு விஷயம் எனக்குப் புரியவில்லை… சினிமா என்ற ஒன்றை நம்பி பல ஆயிரம் குடும்பங்கள் பிழைக்கின்றன என்கிறார்கள். அப்படியிருக்க, ஒரே ஒரு ரஜினிகாந்துக்கு மட்டும் எதற்கு பல கோடி ரூபாய் சம்பளம். ரஜினிகாந்துக்குப் பல கோடி ரூபாய் சம்பாதிக்க உரிமை இருக்கிறதென்றால் அவருக்கு ஒப்பனை செய்துவிடும் கலைஞருக்கும் அதே அளவு சம்பாதிப்பதற்கு உரிமை உள்ளதல்லவா? எவர் ஒருவரும் அந்த ஒப்பனைக் கலைஞருக்குக் குரல் கொடுத்ததாகத் தெரியவில்லை, பிறகு எதற்கய்யா ரஜினிக்கு மட்டும் குரல் கொடுக்க வேண்டும்?

  நமக்காகக் குரல் கொடுத்தார் என்கிறீர்களே, அதே வாய் தான் இன்று தெரியாமல் அவர்களுக்குக் (நமக்குக்) குரல் கொடுத்துவிட்டேன் என்று சொல்லுகிறது. எதை நம்பி அந்த நா… மன்னிக்கவும், வாயை ஆதரித்து வாய்ஸ் கொடுப்பது?

  ___________________

  மாதரசு, இந்த பதிலப் பாத்தே புரிஞ்சிருக்கனுமே யாரு வி.குஞ்சுன்னு… வி.குஞ்சுகள ஒரண்டை இழுத்து ரொம்ப நாளாயிடுச்சு பாரு, அதுக்குத் தான் இப்படி ஒரு பதிவு.

 6. ///
  இந்த நாலுவரிய படிக்கிறதுக்கு ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி வரவேண்டியிருக்கு. ஏன் சாமி? கோபால்சாமி…….
  ///

  வெயிலன்னே, வேர்ட்பிரஸ் தளத்த தமிழ்மணத்துல இணைக்கிறதுல கொஞ்சம் சிக்கல். அதனால மொத்தத்தையும் ப்ளாகருக்குக் கொண்டு போயிடலாம்னு தான் பாத்தேன். ஆனா பாருங்க அங்க ஒவ்வொரு பதிவுக்கும் ஹிட் ஸ்டேட்டஸ் தெரிஞ்சுக்க முடியல. அதனால் இப்படி ஒரு வழிய பின்பற்ற வேண்டியிருக்கு. வேறொன்னுமில்ல, எல்லாம் ஒரு வெளம்பரம் தான்…

 7. //சினிமா என்ற ஒன்றை நம்பி பல ஆயிரம் குடும்பங்கள் பிழைக்கின்றன என்கிறார்கள். அப்படியிருக்க, ஒரே ஒரு ரஜினிகாந்துக்கு மட்டும் எதற்கு பல கோடி ரூபாய் சம்பளம். ரஜினிகாந்துக்குப் பல கோடி ரூபாய் சம்பாதிக்க உரிமை இருக்கிறதென்றால் அவருக்கு ஒப்பனை செய்துவிடும் கலைஞருக்கும் அதே அளவு சம்பாதிப்பதற்கு உரிமை உள்ளதல்லவா?

  சரியாகச் சொன்னீர்கள். நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் எல்லோருக்கும் ஒரே மாதிரியான சம்பளமா?

  //எவர் ஒருவரும் அந்த ஒப்பனைக் கலைஞருக்குக் குரல் கொடுத்ததாகத் தெரியவில்லை, பிறகு எதற்கய்யா ரஜினிக்கு மட்டும் குரல் கொடுக்க வேண்டும்?
  என்னச் சொல்ல வருகிறீர்கள்? என்ன ஒப்பனைக் கலைஞருக்கு குரல் கொடுக்க வில்லை?

  அவர் என்ன பேசினாலும்/செய்தாலும் தாக்கி பேச வேண்டுமென்று முடிவெடுத்தாயிற்று. அப்புறம் என்ன? இதை பற்றி பத்து இடுகைகள் போட்டு நிறைய ஹிட்ஸ் சேர்த்துக் கொள்ளுங்கள்.

 8. //
  சரியாகச் சொன்னீர்கள். நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் எல்லோருக்கும் ஒரே மாதிரியான சம்பளமா?
  //

  ஒரு ஒப்பனைக் கலைஞர் வாங்குகிற ஊதியத்தில் அவரால் குடும்பம் நடத்த முடிகிறதென்றால் அதே ஊதியத்தில் ரஜினியும் வாழமுடியுமே? ரஜினியின் சம்பள விவகாரம் குறித்து எனக்குத் தெரியாது, ஆனால் வெறும் சில நூறு ரூபாய் சம்பள பாக்கிக்குக் கூட யூனியனில் புகார் கொடுக்கும் நிலையில் தான் இருக்கிறது ஒப்பனைக் கலைஞர்களின் நிலை.

  //
  அவர் என்ன பேசினாலும்/செய்தாலும் தாக்கி பேச வேண்டுமென்று முடிவெடுத்தாயிற்று. அப்புறம் என்ன? இதை பற்றி பத்து இடுகைகள் போட்டு நிறைய ஹிட்ஸ் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  //

  தானே கடவுள் என்று சொல்லிக் கொண்டிருந்த ஒரு கிழவனார் சில வருடங்களுக்கு முன்பு ”ரஜினிகாந்த்” அவர்கள் தான் உலகத்தைக் காக்க வந்த கல்கி அவதாரம் என்று அறிவித்துவிட்டு உயிரை விட்டார். இது போன்ற மூடத்தனங்களை எங்களுக்கு விழுகிற சில ஹிட்டுகளாவது திருத்தும் என்றால் ஹிட்டு வாங்குவது ஒன்று தான் எங்களது நோக்கம்.

  வெறும் பின்னூட்ட அளவில் உங்கள் ரஜினி பக்தியை நிறுத்திக் கொண்டுவிட்டீர்களே! ஏன் நீங்களே ஒரு பதிவு ஆரம்பித்து ரஜினி பக்தியை தென்னிந்தியா முழுவதும் பரப்பக் கூடாது? உங்கள் பக்தியைப் பார்த்து ரஜினியே உங்கள் ப்ளாகுக்கு பத்து கோடி ஹிட் வரும்போது உங்களுக்குப் பத்து கோடி தருவதாக அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

  வாழ்க உங்கள் ரஜினி பக்தி!!!

 9. என்னச் சொல்ல வருகிறீர்கள்? எல்லாருக்கும் ஒரே மாதிரியான சம்பளம் தான் தர வேண்டுமா? உங்கள் அலுவலகத்தில் வேலை செய்யும் கடைநிலை ஊழியர் வாங்குகிற சம்பளத்தில் அவரால் குடும்பம் நடத்த முடியும், அதனால் நீங்கள் அதே அளவு சம்பளம் வாங்கிக் கொள்வீர்களா? அல்லது நீங்கள் வாங்குகிற சம்பளத்தில் உங்களால் வாழ்க்கை நடத்த முடியுமென்பதால் உங்கள் மேலதிகாரியையும் உங்களளவு சம்பளமே வாங்கச் சொல்வீர்களா?

  நான் உங்களை கேள்விக் கேட்டு பின்னூட்டம் இட்டிருப்பதைப் பார்த்து ஆவேசப்பட்டு ரஜினிக்கு ஒரு பிளாக் ஆரம்பித்து பணம் சம்பாதிக்கச் சொல்கிறீர்கள். நீங்கள் சொன்ன கருத்துக்கு யாரும் மாற்று கருத்து சொல்லக் கூடாதா? இதெப்படி இருக்கிறதென்றால் நீங்கள் யாருக்காவது ஆதரவாக பேசுவதை விரும்பாத ஆசாமிகள், நீங்கள் ஆதரவாக பேசும் நபருக்கென்று ஒரு பிளாக் ஆரம்பித்து அவரிடம் காசு வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்வதுப் போல இருக்கிறது. அவர் கடவுள் என்று யாராவது சொன்னால் நான் நம்பப் போவதில்லை.

 10. வாங்கையா, என்னை நீங்களும் விடுவதாக இல்லை, உங்களை நானும் விடுவதாக இல்லை. சரி விஷயத்துக்கு வருவோம்.

  ///
  எல்லாருக்கும் ஒரே மாதிரியான சம்பளம் தான் தர வேண்டுமா? உங்கள் அலுவலகத்தில் வேலை செய்யும் கடைநிலை ஊழியர் வாங்குகிற சம்பளத்தில் அவரால் குடும்பம் நடத்த முடியும், அதனால் நீங்கள் அதே அளவு சம்பளம் வாங்கிக் கொள்வீர்களா?
  ///

  நான் வாங்குகிற சம்பளத்தால் ஒரு கடை நிலை ஊழியன் எந்த வகையிலும் பாதிக்கப்படப் போவதில்லை. ஆனால் ரஜினி என்கிற தனிமனிதருக்கு வழங்குகிற சம்பளம், ஒரு தயாரிப்பாளரை தன் முதலீட்டைத் திரும்ப எடுக்க எதையும் செய்ய வைக்கிறது. ஊரில் உள்ள அனைத்து நல்ல தியேட்டர்களிலும் அவருடைய படம் தான் ஓடும். அப்போது மற்ற எந்த இயக்குநருடைய படத்துக்கும் தியேட்டர் கிடைக்காது (இது உன்மையான உதாரணம், சிவாஜி பட வெளியீட்டின் போது தங்கர்பச்சனின் முந்தைய திரைப்படம் இதே காரணத்தால் தாமதமானது).

  இந்த ஊரே தன் படத்தை மட்டும் தான் பார்க்க வேண்டும் என்று கூறுகிற பாசிசமல்லவா இது?

  ///
  நீங்கள் சொன்ன கருத்துக்கு யாரும் மாற்று கருத்து சொல்லக் கூடாதா?
  ///

  எழுதாதே என்று உங்கள் கையைப் பிடித்து தடுத்தேனா? நன்றாக எழுதுங்கள், இப்போது நீங்கள் எனக்குச் செய்கிற பின்னூட்ட சேவையை நானும் உங்களுக்குச் செய்ய ஒரு வாய்ப்பாக இருக்குமல்லவா?

  ///
  வெறும் பின்னூட்ட அளவில் உங்கள் ரஜினி பக்தியை நிறுத்திக் கொண்டுவிட்டீர்களே! ஏன் நீங்களே ஒரு பதிவு ஆரம்பித்து ரஜினி பக்தியை தென்னிந்தியா முழுவதும் பரப்பக் கூடாது? உங்கள் பக்தியைப் பார்த்து ரஜினியே உங்கள் ப்ளாகுக்கு பத்து கோடி ஹிட் வரும்போது உங்களுக்குப் பத்து கோடி தருவதாக அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
  ///

  இந்த வரிகளின் அர்த்தம் புரிந்தவர்களுக்கு நான் உங்களை எழுது என்று சொல்கிறேனா எழுதாதே என்று சொல்கிறேனா என்பதும் புரியும். மேலும் நதி நீர் இணைப்புக்கு ஒரு கோடி தருகிறேன் என்று சொன்ன ரஜினியின் ஸ்டண்ட்டை நினைவுபடுத்தத் தான் இந்த வரிகளை எழுதினேன். தமிழக நதிகளை இணைக்கும் திட்டத்துக்கான பூர்வாங்கப் பணிகளுக்கு கடந்த பட்ஜெட்டில் நிதியும் ஒதுக்கியாகிவிட்டது. இன்னும் உங்கள் சூப்பர் ஸ்டார் அந்த ஒரு கோடியைப் பற்றி வாயைத் திறக்கக் காணோம். ஒரு வேளை கங்கையையும் காவிரியையும் இணைத்தால் தான் தருவாரோ என்னவோ? (ஒருவேளை கங்கை காவிரி இணைப்புக்கு பணிகளைத் தொடங்கினால் கூட காவிக் கூட்டம் “சிவபெருமான் சடையில் தாங்கிய கங்கையை காவிரியோடு இணைக்கக் கூடாது” என்று சொல்லும். அப்போதும் அவருக்கு ஒரு கோடி ரூபாய் மிச்சம் தான்.)

 11. என்ன தம்பி… தலைவரைப் பற்றி தாறு மாறா எழுதிட்டிருக்கே… இதெல்லாம் ஆவறதுக்கில்ல சொல்லிட்டேன். 😀

 12. ரஜினி ஒரு முட்டாள்.

 13. மின்-அஞ்சலில் வந்தது:

  ஒருவர்: அப்போ, நீ ரஜினிக்கு அறிவு இல்லைன்னு சொல்றே….

  இன்னொருவர்: இல்லைன்னு யாரு சொன்னா? இருந்திருந்தா நல்ல இருக்கும்னு தானே சொல்றேன்…

 14. //என்ன தம்பி… தலைவரைப் பற்றி தாறு மாறா எழுதிட்டிருக்கே… இதெல்லாம் ஆவறதுக்கில்ல சொல்லிட்டேன். :D//

  எல்லாம் குசேலன் பார்த்த தாக்கம் தான்…

 15. குசேலன் படம் பார்த்தாச்சா? If so write ur comments.

 16. ///
  குசேலன் படம் பார்த்தாச்சா? If so write ur comments.
  ///

  எழுத இஷ்டமில்லை நண்பரே… வேறொன்றுமில்லை


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.

%d bloggers like this: