காதலில் விழுந்தேன்…
10:18 பிப இல் செப்ரெம்பர் 29, 2008 | அரசியல், நகைச்சுவை, பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 4 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: காதலில் விழுந்தேன், சன் டிவி, நேற்று முளைத்த தலைவ
காதலில் விழுந்தேன் படத்தை மதுரையில் வெளியிட முடியாமல் இருப்பதற்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கடும்(!) கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். மக்களின் அதி அத்தியாவசியத் தேவையான ”காதலில் விழுந்தேன்” படத்தைத் தடுப்பது எந்த வகையில் நியாயம் என்று நேற்று முளைத்த தலைவர்கள் முதல் கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரை சன் டிவியில் ஒப்பாரி வைத்தாகிவிட்டது.
இதே போன்ற சிக்கலில் ”ஆவணித் திங்கள்”, “காற்றுக்கென்ன வேலி” உள்ளிட்ட திரைப்படங்களும் பாதிக்கப்பட்ட போது எங்கே போனார்கள் இந்தத் தலைவர்கள். அப்படியே இவர்கள் கண்டித்திருந்தாலும் அதையெல்லாம் நடுநிலையோடு ஒளிபரப்பியதா இந்த சன் டிவி?
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், என். வரதராஜன், விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட தலைவர்களின் உயிர் போகும் பிரச்சனையாக காதலில் விழுந்தேன் பட விவகாரம் உருவெடுத்திருக்கிறது. ”சோற்றுக்கு சிங்கியடிக்கும் சன் பிக்சர்சுக்கு” உதவ விரும்பினால் இவர்களேல்லாம் தங்களது கட்சித் தொன்டர்களுக்கு இத்திரைப்படத்தின் டிக்கெட்டுகளை (காசு கொடுத்து) வாங்கி விநியோகிக்கலாம்.
மதுரையில் ஏற்பட்ட நஷ்டத்தைத் தமிழ்நாடு முழுவதும் படத்தை வெற்றிகரமாக ஓடவைத்து ஈடுகட்ட இவர்களேல்லாம் சன் பிக்சர்சுக்கு உதவினால் ஒரு வேளை ப்ரைம் டைமில் இவர்களுக்கு நிகழ்ச்சி நடத்த ஸ்லாட் கிடைத்தாலும் கிடைக்கலாம் (சன் குழுமத்தின் குழந்தைகளுக்கான சேனலான சுட்டி டிவியில் கொடுப்பார்கள்… அய்யய்யோ அப்போ ஜாக்கிசான் அட்வென்ச்சர்ஸ் பாக்க முடியாதா? அழகிரி அங்கிள் இவுங்கள கொஞ்சம் என்னன்னு கேளுங்களேன்…).
இந்தத் தலைவர்களாலும் எதுவும் செய்ய முடியவில்லை என்றால் சன் பிக்சர்சுக்கு இருக்கவே இருக்கிறது “இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக….”
சமீபத்தில் எனக்கு வந்த ஆர்குட் ஸ்கிராப் இது. படத்தின் மேல் அழுத்திப் பெரியதாகப் பாருங்கள். 🙂
4 பின்னூட்டங்கள் »
RSS feed for comments on this post. TrackBack URI
மறுமொழியொன்றை இடுங்கள்
Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.
Hi
If u have really got Married.. All d best!
Hope u remember me.Once i have commented on ur post on communism a month b4.
I visited ur site so many times to find Brindha karath’s face again and again.
Kindly do reply to my mail about whether u have posted ur views on Srillankan tamils.I’ll be obliged if u could send me the link.
If not.. try to write about your stance… n i do expect that will have a big follow up n heated debates n arguements!
m sorry for dis small n irrelevant comment, as i hav to leave now.
Love and regards
Mahendran
Comment by Mahendran A— ஒக்ரோபர் 6, 2008 #
நன்றி மகேந்திரன், தங்களை நன்றாக நினைவிருக்கிறது. தமிழக முதல்வரவர்கள் நேற்றைய தினம் ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டும் என்று பிரதமருக்கு லட்சக் கணக்கில் தந்தி அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. விரைவில் ஒரு பதிவின் வழியாக எனது கருத்துக்களையும் பதிவு செய்கிறேன். விடுத்த அழைப்புக்கு மிக்க நன்றி. இப்பின்னூட்டத்தின் வாயிலாக வலைப் பதியும் நண்பர்கள் அனைவரையும் பிரதமருக்குத் தந்தி அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
Comment by vijaygopalswami— ஒக்ரோபர் 6, 2008 #
ஏன் தடை செய்தார்கள்… படம் அவ்வளோ மோசமா?
Comment by விக்னேஸ்வரன்— ஒக்ரோபர் 13, 2008 #
Your Topics are So nice…….
Comment by Viji— திசெம்பர் 8, 2008 #