ஈழம்…

7:30 பிப இல் ஒக்ரோபர் 18, 2008 | அரசியல் இல் பதிவிடப்பட்டது | 6 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , ,

ஒருவர் இந்தியாவில் எங்கே பிறந்திருந்தாலும் எந்த ஒரு தொகுதியிலும் மக்களின் ஆதரவோடு மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்துக்கும் பாராளுமன்றத்துக்கும் போக முடியும். அப்படித்தான் திருவாரூரில் பிறந்த மு. கருணாநிதி சைதாப்பேட்டையிலும் தமிழகத்தின் வேறு பல தொகுதிகளிலும் வென்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார் முதல்வரும் ஆனார். கர்நாடகத்தில் பிறந்த ஜெயலலிதா (அவர் தமிழரா இல்லையா என்ற விவாதத்துக்குள் நான் போகவில்லை) தமிழகத்தில் பர்கூர், காங்கேயம், ஆண்டிப்பட்டி போன்ற தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினராகி தமிழகத்தின் முதலமைச்சராகவும் ஆனார். லாகூரில் பிறந்த மணிசங்கர ஐயர் மயிலாடுதுறையின் பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். அதே லாகூரில் பிறந்த அத்வானி இந்தியாவின் துணைப் பிரதமராக இருந்துள்ளார். இத்தாலியில் பிறந்தபோதும் திருமண உறவின் வழியாக இந்தியாவின் மருமகளான சோனியாகாந்தி உத்திரப்பிரதேசத்தில் ரேபரேலியில் வென்று பிரதமர் பதவி வரை நெருங்கி வந்தார். புதுக்கோட்டையில் பிறந்த திருநாவுக்கரசர் கர்நாட மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

வேறு ஊரைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஏன்… வேறு நாட்டைச் சேர்ந்தவர்களாகவே இருந்தாலும் இந்தியாவில் ஊராட்சி உறுப்பினர் பதவியிலிருந்து குடியரசுத் தலைவர் பதவி வரை எவரும் எதற்கும் போட்டியிடலாம், வெல்லலாம். வெற்றிக்கு உத்திரவாதம் இருக்கிறதோ இல்லையோ, சென்னையில் திருவல்லிக்கேணியில் பிறந்த நான் நினைத்தாலும் இந்தியாவின் மிக உயர்ந்த பதவியான குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வாய்ப்பு இங்கே இருக்கிறது. உதாரணமாக பட்டுக்கோட்டையில் பிறந்த ஆர்.வி.யும், ராமேஸ்வரத்தில் பிறந்த அப்துல்கலாமும் இந்நாட்டின் குடியரசுத் தலைவர் பதவியை வகித்தவர்கள்.

ஒருவர் இந்நாட்டிலுள்ள முற்பட்ட சமூகம் ஒன்றிலும், இன்னொருவர் சிறுபாண்மை மதம் ஒன்றிலும் பிறந்தவர்கள். இருவருமே நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பத்து சதத்துக்கும் குறைவான மக்களைக் கொண்ட மாநிலத்திலிருந்து, முதல் குடிமக்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்களும், மற்ற மதத்தினரும் கூட இவர்களை தங்கள் முதல் குடிமகனாக ஏற்றுக் கொண்டனர். எந்தப் பாகுபாடும் காட்டப்படவில்லை.

இதை மனதில் வைத்தபடி இலங்கையைப் பற்றி யோசிப்போம். சிங்களர்கள் மட்டுமே நாட்டின் உச்சபட்ச பதவிகளான பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்துள்ளனர். இலங்கையிலேயே பிறந்த ஒரு தமிழன் சட்டமன்ற அல்லது பாராளுமன்ற உறுப்பினராக வர முடிந்தாலும் கூட அந்நாட்டின் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் பதவிக்கு வருகிற வாய்ப்பு அறவே கிடையாது. “வேண்டுமானால் பிரபாகரன் வடக்கு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்து விட்டுப் போகட்டும்” என்று அந்நாட்டின் குடியரசு முன்னாள் தலைவர் சந்திரிகா கூறினார். தமிழன் எங்கிருந்தாலும் தனக்குக் கீழே இருக்க வேண்டும் என்ற வல்லாதிக்க மனப்பாண்மை இது. நான் பிச்சை போட்டால் தான் உனக்கு சாப்பாடு என்று சொல்லுகிற பாசிசம்.

ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தில் வரும் மாதவன் போன்ற தமிழர்கள் இருந்தாலும், அதே படத்தில் வரும் பிரகாஷ்ராஜைப் போல ஒரு சிங்களன் கூட இருக்க மாட்டன் என்று தான் சொல்ல வேண்டும். ஒருவேளை தமிழர்கள் மீதான காழ்ப்பை ஒவ்வொரு சிங்களக் குழந்தைக்கும் தாய்ப்பாலோடு கலந்து ஊட்டுகிறார்களோ?

தனி ஈழம் என்ற வாதத்தை எவர் முன்னெடுத்தாலும், தமிழர் சுயநிர்ணயம் என்ற எதிர்வாதமும் கூடவே கிளம்பிவிடுகிறது. சரி, சுயநிர்ணயத்தால் இலங்கைத் தமிழர்கள் அடையப் போகிற அதிகபட்ச அதிகாரம் என்ன? தமிழர் வசிக்கும் பகுதியில் தமிழர்களே மக்கள் பிரதிநிதி ஆவது, அதிகபட்சம் வடக்கு மாநிலத்தின் முதலமைச்சர் பதவி. சுயநிர்ணயம் இலங்கையில் உள்ள தமிழனுக்கு இந்தியாவில் உள்ள தமிழனுக்கு இருப்பதைப் போன்ற நாட்டின் முதல் குடிமகனாவதற்கான சமவாய்ப்பைக் கொடுக்குமா? அப்புறம் என்னடா சுயநிர்ணயம்… __ __ ருக்கு உதவாத சுயநிர்ணயம்…

இங்க நான் தண்ணி ஊத்தி லைட்டா சொன்னத அங்க ஒருத்தர் ராவா சொல்லிருக்கறாரு. போய் படிச்சுப் பாருங்க.

Advertisements

6 பின்னூட்டங்கள் »

RSS feed for comments on this post. TrackBack URI

 1. 1. Suppose you get Ezham, what happens to the millions of SL Tamils, Muslims & Indian Tamils who live outside North East? Some people say these people can come and live in the North East as well. But why should we leave our homeland to go and live in a place most of us have never seen in our lives?

  2. No Tamil has ever become a President or PM so far because no one has even tried it so far. Can you name single Tamil politician who has said he is there for the whole nation? All Tamil politicians so far have only been ethnical. UNP or SLFP may not be national parties but at least they pretent to be like that! So far no Tamil politician has atleast pretented to be a national politician.

  3. 70% of Colombo’s population are Tamil speaking people, but have they ever voted for Tamil party or Tamil politician? Most Tamils in Colombo vote for Sinhala politicians. If Tamil people can’t even vote for Tamil politicians what else can you expect?

 2. திரைப் படங்களை உதாரணத்துக்கு எடுக்க வேண்டாம். அப்ப தெனாலியில் கமல் உளறியது தான் இலங்கைத் தமிழா?

  சேர் வைத்தியலிங்கம் துரைச்சாமி என்னவாக இருந்தார்?

  பல விடயங்களில் எனக்கு உடன்பாடு இல்லை.
  தான் வெளி நாட்டுக்காரி என்பதால் தனக்கு பதவி இல்லை. அப்ப சிங்க வச்சுக்கொங்கோ பார்க்கலாம் என்பது சொனியாவின் எண்ணம். சரியா? அவரும் வெளி நாட்டவர் தானே?

 3. ஆட்காட்டி மற்றும் யாரோ, இருவரது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  புன்னகை மன்னனாகட்டும் தெனாலியாகட்டும், அனைத்துத் தமிழ்த் திரைப்படங்களுக்குமே ஈழத் தமிழர்கள் ஊறுகாயாவே பயன்படுத்தப்பட்டுள்ளனர். அதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

  வைத்தியலிங்கம் துரைசாமி அவைத்தலைவராக இருந்தவர். அவைத்தலைவர் பதவிக்குரிய அதிகாரம் என்பது அவைக்குள் மட்டும் தான். நான் கேட்பது சர்வ அதிகாரங்களும் பொருந்திய அதிபர் மற்றும் பிரதமர் பதவிகளில் தமிழர்களுக்கு சமவாய்ப்பு இருக்கிறதா என்பதே.

  வேண்டுமானால் பிரபாகரன் வடக்கு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்துவிட்டுப் போகட்டும் என்று சொன்ன சந்திரிகா ஏன் அடுத்த ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ இருந்துவிட்டுப் போகட்டும் என்று சொல்லவில்லை. தமிழனை அதிகாரம் மிகுந்த பதவியில் கற்பனை செய்து பார்ப்பதைக் கூட விரும்பாத சிங்களவர்களிடம் பெறும் சுய நிர்ணயம் எதைச் சாதித்துவிடும். (தமிழர்கள் ஏன் அந்தப் பதவிக்குப் போட்டியிடவில்லை என்று கேட்டிருக்கும் யாரோவுடைய இரண்டு மற்றும் மூண்றாவது கேள்விகளுக்கு பதிலும் இது தான்)

  மன்மோகன் சிங் பிறந்த ஊர் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானில் இருக்கிறது. அது வேறு விஷயம். ஒரு வாதத்துக்காக வெளிநாட்டவராகவே வைத்துக் கொண்டாலும் அவர்கள் அமைச்சர்களாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், துணைப் பிரதமராகவும், இந்தியர்கள் ஏற்றுக்கொள்கிற போது, ஏன் சொந்த நாட்டில் பிறந்த தமிழர்களுக்கு அதிபர் மற்றும் பிரதமர் பதவிக்குப் போட்டிடும் சம வாய்ப்பு இல்லை என்பது தான் எனது கேள்வி.

  இப்போது யாரோவின் முதல் கேள்விக்கு பதில்: இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு இந்தியாவில் ஒரு முஸ்லீம் கூட மிச்சமில்லாமல் அனைவரும் பாகிஸ்தானுக்குப் போய்விடவில்லை. அது போல ஈழப் பிரிவினைக்குப் பிறகும் தாங்கள் பிறந்த சிங்களப் பகுதியில் வாழவேண்டும் என்று தமிழர்கள் விரும்பினால் அது அவர்களது விருப்பம். ஆனால் அது நிறைவேறுவது சிங்களர்கள் கையில். பாகிஸ்தானுக்குப் போக விரும்பாத இஸ்லாமியர்களை இந்தியர்கள் ஏற்றுக்கொண்டதைப் போல தமிழர்களை ஏற்றுக்கொள்ளும் மனம் சிங்களர்களுக்கு இருக்குமா என்பது தான் கேள்வி.

 4. ஈழம் பற்றி அதிகமாய் பேசப்படுவதே ஆரோக்கியமான மாற்றம் எனக் கருதுகிறேன் நான். நன்றி விஜய்.

 5. குணமே..இல்லாதவ்ர்களிடம்…மனதையா..எதிர்பார்ப்பது…பேசத்தொடங்கியதை…பேசிமுடித்ததற்க்கு…நன்றி..தம்பி…..அப்புறம்…கோவத்தை..விட்டு..விட்டு..சினிமா..சினிமாவிற்…க்கு எழுதுங்க..தம்பி..

 6. நல்ல பதிவு. ஆனால் சினிமாவோடு ஒப்பிடுவது சரியல்ல.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.

%d bloggers like this: