கதை விவாதம்…

11:48 முப இல் திசெம்பர் 7, 2008 | கதைகள், நகைச்சுவை இல் பதிவிடப்பட்டது | 9 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , ,

image.png

இயக்குநர் பரிசல் அவர்களின் அடுத்த படத்துக்கான டிஸ்கஷன் சீரியசாகப் போய்க்கொண்டிருக்கிறது. இயக்குநருக்கு ஆக்‌ஷன் ஸ்டோரி எடுக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும், தயாரிப்பாளர் வெயிலானின் விருப்பமோ லவ் சப்ஜெக்ட். கடைசியில் இயக்குநர் தயாரிப்பாளரின் வழிக்கு வருகிறார். லவ் சப்ஜெக்டை ஒரு ரொமேண்டிக்கான இடத்தில் காட்டவேண்டும் என்று படத்தின் மக்கள் தொடர்புப் பணிகளை கவனிக்க உள்ள லக்கிலுக் கருத்துத் தெரிவிக்கிறார். உதகமண்டலம் சரியான ஸ்பாட் என்றும் சாங் மட்டும் ஸ்விட்சர்லாந்திலும், ஃப்ரான்சிலும் எடுக்கலாம் என்று ஒளிப்பதிவாளராகப் புதிய அவதாரம் எடுத்திருக்கும் கேபிள்ஷங்கர் தன் அபிப்ராயத்தைக் கூற, லேசாக ஜெர்க் ஆகிறார் தயாரிப்பாளர்.

லவ்வு சுவிஜர்லாந்துலயும், ஃப்ரான்சுலயும் தான் வருமா? ஏன், விருதுநகர்லயும், கோவில்பட்டிலயும் வராதா? என்று பட்ஜெட்டை நினைத்தபடி புதிய பாரதிராஜாவாகக் கர்ஜிக்கிறார் தயாரிப்பளர், அண்ணன் வெயிலான். இடையில் இயக்குனர் தலையிட்டு “ஓக்கே, கூல்… ஸ்டோரி ஊட்டில நடக்குது… சாங்ஸ் எல்லாம் பொள்ளாச்சிலயும், டாப் ஸ்லிப்புலயும்… நடுவுல ஒரு ப்ளாஷ்பேக் சீன் மட்டும் கோயமுத்தூர்ல” என்று கச்சிதமாக அனைவரையும் ஸ்டோரிக்குள் கொண்டு வருகிறார் இயக்குனர் பரிசல். என்ன இருந்தாலும் gap10 ஆஃப் த ஷிப் அல்லவா.

“சரி ஹீரோ ஹீரோயின் யாருன்னு சொல்லவே இல்லையே,” நானும் இருக்கிறேன் என்று காட்டிக்கொள்ள விரும்பிய ஃபைனான்சியர் நந்து (நிலாவின் தகப்பனார்) அப்போது தான் ஆட்டைக்குள் வருகிறார். “என் மனசுல ஒரு ஹீரோ இருக்காரு… அவரு நடிக்க ஒத்துக்கிட்டா கிட்டத்தட்ட படம் 200 நாள் கியாரண்டியா ஓடும். நியூ ஃபேஸ் தான். ஆனாலும் அவரோட கண்ல ஒரு ஃபயர் தெரியுது,” என்று தொடர்ந்த இயக்குனரை மறித்து “ஹீரோயின் யாரு, அத மொதல்ல சொல்லுங்கப்பா…. தமண்ணாவ ஹீரோயினா போட்டா மினிமம் கியாரண்டில எல்லா ஏரியாவும் வித்துரும், தமண்ணா டேட்ஸ் கெடைக்கலேன்னா தெலுங்குல சோனியான்னு ஒரு புதுப் பொண்ணு வந்துருக்கு “ஆமே சூசி சூசி சச்சு போத்துன்னே உன்னானு, தெலுசா மீக்கு,” என்று எமோஷனலாக ஜோதியில் ஐக்கியமாகிறார் ஒளிப்பதிவாளர் கேபிள்.

“எவ்வளவு செலவு பண்ணி டிஸ்கஷனுக்கு ஏற்பாடு பண்ணிருக்கோம், சுச்சு வந்தா பாத்ரூமுக்கு போகவேண்டியது தானே சார்” என்று கேபிள் தெலுங்கில் சொன்னதன் மீனிங் தெரியாமல் வெயிலான் அக்கறையாக அட்வைஸ் பண்ணுகிறார். “சார், அது சுச்சு இல்ல சார், சச்சு, சச்சு, சொல்லுங்க சச்சு” என்று கேபிள் வெயிலானுக்கு தெலுங்கு வகுப்பெடுக்க, அது புரியாத வெயிலான் “வேணும்னா, சச்சுவ ஹீரோயினுக்கு பாட்டியா போட்டுக்கலாம், டைரக்டர் சார், இவரு ரொம்ப ஆசப்படுறாரு. ஹீரோயினுக்கு ஒரு பாட்டி கேரக்டர் வச்சுருங்க” என்று சொல்ல “அய்யோ” என்று ஹை டெசிபலில் அலறுகிறார் கேபிள்.

“ப்ளீஸ், எல்லாரும் கொஞ்சம் சீரியசா கவனிங்களேன். லவ் ஸ்டோரின்னாலும், இது முதல் மரியாதை மாதிரியான ஒரு சப்ஜெக்ட். அதுக்குத் தகுந்த மாதிரி நான் ஒரு ஹீரோவ யோசிச்சு வச்சுருக்கென் என்கிறார் இயக்குனர். “மனுஷன் அல்ட்ரா மார்டன் யூத் மாதிரியே இருப்பாரு,” தொடர்ந்து பரிசல் சொன்னதைக் கேட்ட வெயிலான் லேசாக ஜெர்க்காகிறார் “யூத்து மாதிரியா… அப்ப யூத்து இல்லியா?” “தப்பு தப்பு, கன்னத்துல போட்டுக்குங்க. நீங்க இப்படி சொன்னது தெரிஞ்சா அவரு நடிக்கவே ஒத்துக்க மாட்டாரு.” என்று மம்மியைக் கனவில் கண்ட ர.ர. மாதிரி அலறுகிறார் இயக்குநர்.

“சார், மொதல்ல சாங்சப் பத்தி டிசைட் பண்ணுங்க. அது தான் படத்தோட கேச்சியான போர்ஷன்,” ஒளிப்பதிவாளரின் ஐடியாவைக் கேட்டு குஜால் ஆகிறார் தயாரிப்பாளர். “பா. கஜய், கா. குத்துக்குமார், பூமறை இப்படி வழக்கமான ஆளுங்களையே போட்டு பாட்டெழுத வைக்கிறது எனக்கு இஷ்டமில்லை. நியூ பேஸ் யாரையாவது யூஸ் பண்ணனும். எனக்குத் தெரிஞ்சு ஒருத்தர், “அலசல்”னு ஒரு ப்ளாக் நடத்துறாரு, அவர பாட்டெழுத வைக்கலாம்னு யோசிக்கிறேன்” என்கிறார் இயக்குனர். இங்கே தான் மீண்டும் சீனுக்கு வருகிறார் லக்கி, “யப்பா, அவரு கவியரங்க ரேஞ்சுக்கு கவித எழுதுறவரு. அவரப் போயி படத்துக்கு பாட்டெழுத சொன்னா சரிவருமா? அதுவுமில்லாம அவராண்ட ஏற்கெனவே எவனோ ஒரு டுபாகூரு சினிமால பாட்டெழுதுறீங்களான்னு கேட்டு கலாசிட்டான். இனி நெஜமாவே யாராவது பாட்டெழுத வற்றீங்களான்னு கேட்டாலும், பாட்டில ஒடச்சு வவுத்துல சொருவிருவாரு ஜாக்கிரத,” என்கிறார்.

“இந்த மாதிரி வேலைக்கெல்லாம் ரிஷான் ஷெரிஃப்னு கத்தார்ல ஒருத்தர் இருக்காருபா, அவருதான் கரெக்ட். அவரு வேற ஏற்கெனவே ஒரு கும்பல் சேத்துக்கிட்டு “கொலை வெறிக் கவுஜைகள்”ன்ற பேர்ல கவிதை எழுதிக்கிட்டிருந்தாரு, என்ற நந்துவை (நிலாவின் தகப்பனார்) தடுத்தாட்கொள்கிறார் லக்கிலுக். “கத்தார்லாம் வேண்டாம், ஃப்ளைட் டிக்கெட்லாம் எடுக்க வேண்டியிருக்கும், நமக்குத் தெரிஞ்சு “விஜய் கோபால்சாமி”ன்னு ஒரு தம்பி ஹைதராபாத்ல இருக்காரு. ரீமிக்ஸ் ஸ்பெஷலிஸ்ட்டு. கேசினேனில (கேசினேனி பஸ்) நான் ஏசி டிக்கெட் எடுத்துக் குடுத்தா போதும், நீங்க இருக்கற எடத்துக்கே வந்து வேலைய முடிச்சுக் குடுத்துடுவாரு,” என்று சொல்ல காஸ்ட் எஃபெக்டிவாக இருப்பதால் தயாரிப்பாளர் தரப்பிலும் ஏற்கப்படுகிறது.

முதல் கட்டமாக தொலைபேசியில் கான்பெரன்ஸ் கால் போட்டு ஒரு பாடலுக்கான சூழல் விளக்கப்படுகிறது. இசையமைப்பாளர் என்று ஒருவரை போடுவதற்கு பட்ஜெட் அனுமதிக்காததால் தற்சமயம் பாப்புலராக இருக்கிற பாடல்களையே ரீமிக்ஸ் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது. சூழல் இது தான், புகைப்படக் கலையில் (படம் எடுத்துக்கொள்கிற கலை) மிகுந்த ஈடுபாடு கொண்ட நாயகனுக்கு லவ் அட் ஃபாட்டிஎய்ட்த் சைட். அந்த சூழலில் ஒரு டூயட். இதற்கு சுப்ரமணியபுரம் கண்கள் இரண்டால் பாடலின் ட்யூன் வழங்கப்படுகிறது.

சி டிரைவ் மொத்தத்தையும் சல்லடை போட்டுத் தேடியும் விஜய் கோபால்சாமிக்குக் கண்கள் இரண்டால் பாடல் கிடைக்கவில்லை. ஒருவெப்சைட் டாட் காமிலிருந்து பாடலை பதிவிறக்கம் செய்து டெஸ்க் டாப்பில் சேவ் பண்ணுகிறார் வி.கோ. பின்னர் ஹெட்போனை மாட்டிக்கொண்டு பாடலை வின் ஏம்ப் இல் ஓப்பன் செய்கிறார். பாடலைக் கேட்டபடியே அவர் எழுதியெ ரீமிக்ஸ் இதோ உங்கள் பார்வைக்கு. பாடலை எழுதிக்கொண்டிருந்தபோதே வி.கோ.வின் செல்லுக்கு ஒரு மெசேஜ் வருகிறது. அனுப்பியவர் இயக்குனர். “சந்திப்பிழையோடு எழுதினால் ஹீரோ ஜமுக்காளத்தைப் போத்தி அடிப்பார். ஜாக்கிரதை” என்று இருந்தது. ஜமுக்காளத்தைப் போத்தி அடிப்பார் என்று இருந்ததே தவிற யாரை அடிப்பார் என்று சொல்லவில்லை. எதற்கும் இருக்கட்டுமே என்று சந்திப்பிழை இல்லாமல் எழுத முடிவு செய்கிறார் பாடலாசிரியர். சந்திப்பிழை என்றால் என்ன என்று தெரியாத வி.கோ. பல இடத்திலும் தேடிச் சலித்துப் போய் கடைசியில் சந்திப் பிழை பதிவு பார்த்துத் தெரிந்து கொள்கிறார்.

ஆண்:

கண்கள் இரண்டால் என் கண்கள் இரண்டால்

பல ஃபிகர் மடித்தேன், மடித்தேன் போதாதென

கூட நிறுத்தி, தோளை தோளில் பொருத்தி

நூத்துக் கணக்கில் வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்தேன்… (2)

பெண்:

கவுக்க எண்ணி சில நாள்… அருகில்… வருவேன்…

உந்தன் பர்சு போது என நான்… நினைத்தே… நகர்ந்தேனே -வளைச்சு

போட்டோ எடுத்தாய் பல போட்டோ எடுத்தாய்

கேமெரா கதறக் கதறக் கதறக் கதற போட்டோ எடுத்தாய்….

ஆண்:

சரக்கும் இல்லாது உறக்கம் வராத

பொழுதுகள் உன்னோடு கழியுமா…

டாப் சிலிப் போவோமா, உதகைக்குப் போவோமா

அதுக்குன்னு கொஞ்ச நேரம் ஒழியுமா…

பெண்:

மணிப்பர்சின் தடிமனைப் பார்க்கிறேன்…

கொஞ்சம் கணமாய் இருந்தால் வருகிறேன்…

இதுவரை பல பேரை…

நான் போட்ட ஆட்டை…

ஆண்:

கண்கள் இரண்டால் என் கண்கள் இரண்டால்

பல ஃபிகர் மடித்தேன், மடித்தேன் போதாதென

கூட நிறுத்தி, தோளை தோளில் பொருத்தி

நூத்துக் கணக்கில் வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்தேன்…

பெண்:

என் புருஷன் அறியாத உன் மனைவி தெரியாத

தூரத்துக்கு நாம் சென்று பழகுவோம்…

நமக்குள் இப்போது இருக்கிற கசமுசா

வெளிய தெரிஞ்சிருச்சுன்னா வெலகுவோம்….

ஆண்:

இதைப்போல் பெஸ்ட்டு ஐடியா இல்லை

அருகினில் என்னோட மனைவி இல்லை

தடை இல்லை சேர்ந்திடவே… உன்னோடு – தினம்

கண்கள் இரண்டால் என் கண்கள் இரண்டால்

பல ஃபிகர் மடித்தேன், மடித்தேன் போதாதென

கூட நிறுத்தி, தோளை தோளில் பொருத்தி

நூத்துக் கணக்கில் வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்தேன்… (2)

அறிமுக பாடலாசிரியர் என்பதால் டைட்டில் கார்டில் மட்டும் பெயர் போடுவதாகவும், வேறு ரெமுனரேஷன் எதுவும் கிடையாது என்றும் தயாரிப்பாளர் தரப்பில் போடப்பட்ட கண்டிஷனையும் ஏற்றுக்கொண்டு விஜய் கோபால்சாமி எழுதிய பாடல் இது.

பாடலால் பெரிதும் கவரப்பட்ட இயக்குநர், தயாரிப்பாளர், ஃபைனான்சியர், ஒளிப்பதிவாளர் அண்டு கம்பெனி அடுத்து கதாநாயகனைத் தொடர்புகொள்ளலாம் என்று முடிவெடுக்கிறது. இம்முறை இயக்குனர் தனது செல்லில் கதாநாயகனின் எண்ணை பயபக்தியுடன் ஒத்தி, கால் பட்டனை அழுத்துகிறார். மறுமுனையில் போன் எடுக்கப்பட்ட உடன், விஷயத்தை சொல்லுகிறார். கொஞ்சம் நேரம் கழித்து ஐந்து விநாடிக்கு ஒரு முறை “சரிங்…” “சரிங்…” என்று பத்து இருபது முறையாவது சொல்லியிருப்பார்.

போனை வைத்துவிட்டு வந்த இயக்குநரிடம் அனைவரும் கோரசாக “ஹீரோ என்ன சொன்னாரு” என்று கேட்கிறார்கள். குரலில் இருந்த பக்தி விலகாமல் “சினேகாள ஹீரோயினா போட சொல்றாரு” என்றார் பரிசல்.

image.png

9 பின்னூட்டங்கள் »

RSS feed for comments on this post. TrackBack URI

  1. :))…. நல்லா இருக்கு…

  2. :)))))

  3. ரகளையான நையாண்டி.

  4. Hi thanks for your support.. this support will encourage us to go one step forwared and serve something better this society..thanks once again

    thamizhstudio.com

  5. suuuuuuuuuuuuuuuuuperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

  6. //“ஆமே சூசி சூசி சச்சு போத்துன்னே உன்னானு, தெலுசா மீக்கு//

    //“எவ்வளவு செலவு பண்ணி டிஸ்கஷனுக்கு ஏற்பாடு பண்ணிருக்கோம், சுச்சு வந்தா பாத்ரூமுக்கு போகவேண்டியது தானே சார்” என்று கேபிள் தெலுங்கில் சொன்னதன் மீனிங் தெரியாமல் வெயிலான் அக்கறையாக அட்வைஸ் பண்ணுகிறார். “சார், அது சுச்சு இல்ல சார், சச்சு, சச்சு, சொல்லுங்க சச்சு” என்று கேபிள் வெயிலானுக்கு தெலுங்கு வகுப்பெடுக்க, அது புரியாத வெயிலான் “வேணும்னா, சச்சுவ ஹீரோயினுக்கு பாட்டியா போட்டுக்கலாம், டைரக்டர் சார், இவரு ரொம்ப ஆசப்படுறாரு. ஹீரோயினுக்கு ஒரு பாட்டி கேரக்டர் வச்சுருங்க” என்று சொல்ல “அய்யோ” என்று ஹை டெசிபலில் அலறுகிறார் கேபிள்.//

    ஹா..ஹா..ஹா.. நல்ல நகைச்சுவை..

    சூப்பர்.. விஜய்.. நல்ல கற்பனை கொஞ்சம் சுருக்கியிருந்தால் இன்னமும் நன்றாய் இருந்திருக்கும்…

    எனக்கு அனானி பின்னூட்டமிட்டது நீங்கன்னு கண்டுபிடிச்சிட்டேன்..

  7. விஜய் என்னுடய இன்னொரு ப்ளாகிலிருந்து உங்கள் தளத்துக்கு இணைப்பு கொடுத்துள்ளேன்.

  8. ///
    சூப்பர்.. விஜய்.. நல்ல கற்பனை கொஞ்சம் சுருக்கியிருந்தால் இன்னமும் நன்றாய் இருந்திருக்கும்…
    ///

    எனக்கும் இதே தான் தோன்றியது… கொஞ்சம் சோம்பேறித்தனம்…

    ///
    எனக்கு அனானி பின்னூட்டமிட்டது நீங்கன்னு கண்டுபிடிச்சிட்டேன்..
    ///

    நானாத்தான் மாட்டிக்கிட்டேனா… 😦

    ///
    விஜய் என்னுடய இன்னொரு ப்ளாகிலிருந்து உங்கள் தளத்துக்கு இணைப்பு கொடுத்துள்ளேன்.
    ///

    சென்றேன்… கண்டேன்… பின்னூட்டினேன்… வந்தேன்…
    கண்கள் ஜொலித்தது, நெஞ்சம் களித்தது… (தலைவர் எஃபெக்ட்டு)

  9. கண்கள் இரண்டால் பாடல் ரீமிக்ஸ் சூப்பர்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.

%d bloggers like this: