கை சின்னத்தை இல்லாதொழிப்போம்
5:51 பிப இல் ஜனவரி 31, 2009 | அரசியல், படங்கள் இல் பதிவிடப்பட்டது | 7 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: இலங்கைப் பிரச்சனை, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ், தங்கபாலு, பிரணாப் முகர்ஜி
ராஜபக்சே: தமிழ்நாட்டுல இன்னுமா உங்கள நம்புறாங்க…
பிரணாப்: அது அவனுங்க தல விதி பிரதர்…
வெக்கம், மானம், சூடு, சொரணை உள்ளிட்ட நீங்கள் எதிர்பார்க்கும் எதுவும் எங்களிடம் கிடையாது. காங்கிரசில் இணைந்த நாள் முதலாய் இவற்றுக்கான அர்த்தம் என்ன என்பது கூட தெரியாது என்பதை உண்மையான காங்கிரஸ்காரனாகப் பெருமையுடன் கூறிக்கொள்கிறேன். – தங்கபாலு
பெரியாரின் பேரன் என்பதற்காக பெரியாரிடமிருந்த சுயமரியாதை, தமிழுணர்வு, கொள்கைப்பற்று இவை அணைத்தும் என்னிடமும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகப்பெரிய மூடத்தனம். – ஈ.வெ.கி.ச. இளங்கோவன்
தமிழ்நாடு காங்கிரஸ் பதருகளா, இங்க சரக்க நம்பித்தான் ஆட்சியே நடத்திக்கிட்டிருக்கேன். இப்போ என்னத்துக்கு மதுவிலக்கு வேணும்னு போராடுறீங்க! கொஞ்சமாவது பகுத்தறிவோட இருந்துத் தொலைங்க. – வைத்தியலிங்கம்
ஆகவே வாக்காளப் பெருமக்களே, வருகிற தேர்தலில், தமிழகத்தில் காங்கிரசை இல்லாதொழிக்கும் மகத்தான திருப்பணியை சிரமேற்கொண்டு தவறாமல் செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
7 பின்னூட்டங்கள் »
RSS feed for comments on this post. TrackBack URI
மறுமொழியொன்றை இடுங்கள்
Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.
நிசயம் செய்யலாம் வாருங்கள்.. அதே நேரத்தில் தீவிரவாத இயக்கத்தின் கடைசி புலி வரை நசுக்கிவிட்டு , இலங்கை தமிழர் வாழ்வில் நிம்மதி ஏற்படுத்திவிட்டு , அதே கையோடு கையை அழித்தொழிக்கலா.. ரெடியா?
Comment by ammu— ஜனவரி 31, 2009 #
அது சரி, காங்கிரசை தாங்கி நிறுத்துகிறவர்களேல்லாம் ஏன் புலிகளை நசுக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என்று கூப்பாடு போடுகிறீர்கள். ராஜீவ்காந்தியைக் கொன்ற பிரபாகரனுக்குத் தூக்கு தண்டனை தரவேண்டும் என்று குதிக்கிறார் தங்கபாலு. அமைதிப்படை என்ற பெயரில் இங்கிருந்து அனுப்பட்ட படையினர் கட்டவிழ்த்த தமிழர்கள் மீதான படுகொலைகளுக்கும், பாலியல் வன்முறைகளுக்கும் எவன் பொறுப்பேற்பது, உங்கள் ராஜீவ்காந்தியைத் தவிர.
Comment by vijaygopalswami— ஜனவரி 31, 2009 #
காங்கிரஸ்காரனுக்கு தன் இனமான தமிழன் அழிவதைக்காட்டிலும் ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி போன்றவர்கள் தான் முக்கியம். அவர்கள் பேரைச்சொல்லிதான் இவன் என்றும் பிழைப்பு நடத்துவான். இவன்கள் செத்தாலும், இவன்கள் பிணங்களைக்கூட எந்த தமிழனும் தூக்கிச் செல்லக்கூடாது.
Comment by அழகன்— பிப்ரவரி 1, 2009 #
வடநாட்டான் காலை நக்கிர நாய்களுக்கு தமிழனின் தவிப்பு புரியாது தம்பி.
Comment by nara— பிப்ரவரி 1, 2009 #
அவனவன் டீவி சேனல், தனியார் கல்லூரின்னு நல்லா கல்லா கட்டிட்டானுங்க. சேத்த சொத்த காப்பாத்த இவனுங்களுக்கெல்ளாம் ஒரு அமைப்பு தேவைபடுது. மத்தபடி கொள்கை அதுன்னு இவனுங்கள்கிட்ட ஏதும் எதிர்பார்க்ககூடாது. ஓட்டுக்கு தமிழன்கிட்ட தான் வந்தாக வேண்டும். நரிகளின் கூட்டத்திற்கு பாடம் புகட்டுவோம்.
நித்தில்
Comment by Nithil— பிப்ரவரி 2, 2009 #
பதிவோடு ஒத்துப் போகிறேன். அப்படியே யாருக்கு ஓட்டுப் போடலாமென்று சொல்லுங்களேன். வேறு நல்ல ஆப்ஷன் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
Comment by கார்க்கி— பிப்ரவரி 2, 2009 #
///
பதிவோடு ஒத்துப் போகிறேன். அப்படியே யாருக்கு ஓட்டுப் போடலாமென்று சொல்லுங்களேன். வேறு நல்ல ஆப்ஷன் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
///
நீங்கள் ஆந்திராவைக் குறித்துக் கேட்கிறீர்களா அல்லது தமிழ்நாட்டைக் குறித்துக் கேட்கிறீர்களா. இதே காரணத்துக்காக ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆரைத் தோற்கடிக்கவேண்டும் என்று சொன்னால் அது முட்டாள்தனம். தமிழகத்தில் மாநில அரசின் சிண்டு மத்திய அரசின் கையிலிருப்பதாலும் மத்திய அரசின் சிண்டு மாநில அரசின் கையில் இருப்பதாலும் தான் இந்த அவலம். மாநிலத்திலே ஸ்திரமான ஆட்சி இருக்குமாயின் இப்போது நிகழ்ந்து வரும் பேரவலம் நிகழாமல் தவிர்த்திருக்கலாம்.
Comment by vijaygopalswami— பிப்ரவரி 7, 2009 #