பத்திரிகா தர்மம்…
7:03 பிப இல் ஜனவரி 31, 2009 | அரசியல், படங்கள், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 3 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: தீக்குளிப்பு, நாகேஷ், முத்துக்குமார், மும்பை தாக்குதல், வி.பி. சிங்
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான கொந்தளிப்பு தமிழகத்தில் உச்சத்தை அடைந்துள்ளது. ஏற்கெனவே ஒருவர் தீக்குளித்துள்ள நிலையில், இன்னொருவரும் இதே காரணத்துக்காக தீக்குளித்ததாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. நடிகர் நாகேஷின் மறைவும் இதனுடன் சேர்ந்துள்ளது.
சரியாக இரண்டு மாதங்களுக்கு முன்பும் அகில இந்திய அளவில் இதே போன்றதொரு சூழல். இந்தியாவின் வர்த்தகத் தலைநகரம் தீவிரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகிறது. அதே நேரத்தில் முன்னாள் பிரதமரான வி.பி. சிங் அவர்களும் இயற்கை எய்துகிறார்.
முத்துக்குமாரின் தீக்குளிப்பு தமிழகத்தில் ஏற்படுத்திய அதிர்வுகளும், அதனையொட்டி மாநிலம் முழுவதும் நிகழ்ந்து வரும் போராட்டங்களும் ஊடகங்களால் செய்தியாக்கப்படும்போது, நாகேஷின் மரணமும் விடுபடாமல் பார்த்துக் கொள்கிற பொறுப்பு, ஒரு முன்னாள் பிரதமரின் மரணத்தின்போது எங்கே போயிற்று. நாகேஷ் ஒரு சிறந்த நடிகர் தான். இல்லை என்று சொல்வதற்கில்லை. ஆனால், இடஒதுக்கீட்டு வரலாற்றில் நீங்கா இடம் பெற்ற வி.பி. சிங் அவர்களை இழந்தது ஒரு நடிகரின் மரணத்தை விட முக்கியத்துவமற்ற செய்தியா? சொல்லித் தொலையுங்கள் தமிழக ஊடகங்களே…
3 பின்னூட்டங்கள் »
RSS feed for comments on this post. TrackBack URI
மறுமொழியொன்றை இடுங்கள்
Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.
/இடஒதுக்கீட்டு வரலாற்றில் நீங்கா இடம் பெற்ற வி.பி. சிங் அவர்களை இழந்தது ஒரு நடிகரின் மரணத்தை விட முக்கியத்துவமற்ற செய்தியா?/
/இடஒதுக்கீடிற்கு பின் மக்கள் அவரை மறந்து விட்டனர். ஏதேனும் ஒரு தமிழ் சனெலில் நாகேஷை தினமும் பார்த்துக்கொண்டே இருக்கறோம் அல்லவா அதனால் தான் அவருக்கு முக்கியத்துவும்.
தங்கள் பதிவை http://www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். http://www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.
http://www.newspaanai.com/easylink.php
Comment by Viji— பிப்ரவரி 1, 2009 #
நீங்கள் கேட்கும் கேள்வி சரியானதே, ஆனால் இப்படி பட்ட ஊடங்களின் ஆதிக்கம் தான் நமது திராவிட நாட்டில் வேரூன்றி இருக்கிறது, எடுத்துகாட்டாக தினமலர் மற்றும் ஹிந்து நாளேடுகளின் விற்பனை ஏதேனும் குறைந்துள்ளதா நண்பரே, மக்கள் தான் இதற்கு தீர்வு தர வேண்டும், நாளேடுகளை திரிவான செய்தியை தான் மக்கள் நம்புகிறார்கள்.
Comment by tamil— பிப்ரவரி 1, 2009 #
முத்துக்குமார் இறந்த செய்தி வெளியானது ஜனவரி 30. அன்றைய தினம் மகாத்மா மறைந்த தினம். அன்று தியாகிகள் தினம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு தினமாக அனுசரிக்கிறோம். தீண்டாமை ஒழிப்பு குறித்து எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழி பற்றி அறிய கூகுளில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. மத்திய மாநில அரசின் இணைய தளங்களிலும் காணவில்லை. அதைவிட கொடுமை, காந்தியின் புகைப்படமோ செய்தியோ அன்றைய ஹிண்டு நாளிதழில் இல்லை. இந்த நாட்டிற்கு விடுதலை பெற்றுத் தந்தவரையே மறைத்து விட்டனர் பத்திரிகையாளர்கள். குடித்துவிட்டு குறைந்த ஆடைகளில் நள்ளிரவில் கும்மாளமிடும் பெண்களுக்கு வக்காலத்து வாங்கும் ஊடகங்கள் நாம் விரும்பாத விஷயங்களை நம் மீது திணித்துக் கொண்டு மிகப்பெரிய சமூகுகக் கேட்டிற்கு வழி வகுக்கிறது.
Comment by tsr— பிப்ரவரி 2, 2009 #