எச்சரிக்கை: வலையுலகில் ஒரு கொடூர மனநோயாளி

1:52 முப இல் பிப்ரவரி 4, 2009 | விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 11 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , , ,

image

மிகக் கடுமையான மனச்சிதைவுக்கு ஆளான ஒரு மனநோயாளியின் வலைப்பதிவை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. வேர்ட்பிரஸ்சை ரோஜாத் தோட்டம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் இந்த சைக்கோ தன் வீட்டு நடைபாதையிலேயே கழிந்து வைத்திருக்கிறது. இது போன்றவர்களுக்கு மற்றவர்கள் நம்மைக் கவனிக்க வேண்டும் என்ற குறுகுறுப்பு இருந்து கொண்டே இருக்கும். மற்றவர்களின் கவனிப்பு இவர்கள் மேல் விழுகிற வரை பிரச்சனை இல்லை. அந்த சமயங்களில் வெகு இயல்பாகவே இருப்பர்.

ஒலிப்புத்தகங்களுக்கு விமர்சனம் எழுதுவார்கள், திவாலாகிற அமெரிக்க வங்கிகளைக் குறித்து பதிவு எழுதுவார்கள், வால்மார்ட்டைப் பற்றியும் இன்வெஸ்ட்மெண்ட் பேங்க்கர்களைப் பற்றியும் கூட எழுதுவார்கள். மற்றவர்கள் பார்த்தால் “ச்சே ச்சே, இவராவது சைக்கோவாவது” என்று சொல்லுமளவுக்கு இயல்பாக இருப்பார்கள். மேலே குறிப்பிட்ட சைக்கோ வாரனம் ஆயிரம் படத்துக்குத் திரை விமர்சனம் கூட எழுதியிருந்தது. அது வெள்ளைத் தாளில் கரும்புள்ளி வந்த ரிஷிமூலத்தைக் கூட தேடிக் கொண்டிருக்கிறதாம் (தன்னுடைய மூலம் பௌத்திரமாகி ரத்தமும் சீழும் வடிவது கூடத் தெரியாமல்).

மற்றவர்களின் கவனிப்பு வேறு பக்கம் திரும்புவது போல் தெரிந்தால் (அதாவது வலைபூவில் ஹிட்ஸ் குறைந்தால்) அப்போது தான் விபரீதம் ஆரம்பமாகும். பிறரை கவன ஈர்ப்பு செய்ய எதை வேண்டுமானாலும் செய்வார்கள். தானாக சுவற்றில் மோதிக் கொள்வார்கள், கையை அறுத்துக் கொண்டு ரத்தம் சொட்டச் சொட்ட ஜனத்திரளான இடத்தில் தோன்றி பயமுறுத்துவார்கள். வழக்கமாகக் கத்தி, அரிவாள், பெட்ரோல், டீசல், தீப்பெட்டி, தீப்பந்தம், வாகனங்களின் சாவி, உருட்டுக்கட்டை, கம்புகள் போன்றவற்றைத் தான் இவர்களது பார்வையில் படாமல் ஒளித்து வைப்பார்கள்.

இனிமேல் வலைப்பதிவுகளின் பயனர் கணக்குகளையும் கடவுச் சொற்களையும் கூட இவைகளின் பார்வையில் படாத இடத்தில் ரகசியமாக வைக்க வேண்டும் போலிருக்கிறது. இவைகள் கணிணியில் ஸ்பைடர் சாலிட்டேரும், மைன் ஸ்வீப்பரும் விளையாடுவதோடு நிறுத்திக் கொள்வது நலம்.

பின்குறிப்பு: அதிமுக்கியமான இந்த விஷயத்தைப் பதிவின் தொடக்கத்தில் பெரிய எழுத்துக்களில் போட்டிருக்க வேண்டும். மறந்துவிட்டேன். விஷயம் முக்கியமானதென்றால் எங்கே இருந்தாலும் படிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் பின்குறிப்பாகத் தருகிறேன்.

அந்த மனநோயாளியின் வலைப்பூவுக்கு இப்பதிவில் தொடுப்பு கொடுக்கவில்லை (உங்களது மனநலம் பாதிக்காமல் இருக்கும் பொருட்டு). “இல்லை, நான் அந்தப் பதிவைப் படித்தே ஆகவேண்டும்” என்று அடம் பிடிப்பவர்கள் மட்டும், தோழர் மதிமாறனுடைய இந்தப் பதிவுக்குச் சென்று பாருங்கள். சைக்கோவின் வலைத்தள முகவரி அங்கே கிடைக்கும். சைக்கோவின் வலைப்பதிவுக்குச் சென்று உங்கள் மனநிலையும் பாதிக்கப்பட்டு நீங்களும் சைக்கோ ஆகிவிட்டால் அதற்கு நான் பொறுப்பில்லை.

11 பின்னூட்டங்கள் »

RSS feed for comments on this post. TrackBack URI

  1. என்னங்க, லிங்க கிளிக் பண்ணுனா, ஒரு பெரிய கட்டுரையே இருக்கு. படிக்கும் அளவுக்கு பொறுமை இல்லை. ஏதோ பெரிய பாலிடிக்ஸ் போய்க்கிட்டு இருக்கு அப்படின்னு மட்டும் புரியுது. ஹும்ம்ம்

  2. என்னவோ சொல்றீங்க.. அப்ப்புறம அங்க போயிட்டு வந்து சொல்றேன்

  3. பிராபகரன் கூட தமிழ்னே கிடையாதாம். அவர் ஜிம்பாவே நாட்டை சேர்ந்தவராம். பூட்டான் நாட்டு உளவுதுறையிடம் பணம் வாங்கி கொண்டு இந்தியாவிக்கு எதிராக போர் தொடுப்பது தான் இவர் திட்டமாம். தெரியுமா உங்களுக்கு?

  4. மண்ணிக்கவும் http://sathirir.blogspot.com/2009/02/blog-post_03.html பின்னூட்டம் இடுவதற்கு பதில் தவறுதலாக இங்கே பின்னூட்டமிட்டுவிட்டேன்

  5. வலை பதிவர் சண்டை எல்லாம் போர் மேட்டர் சாமி, லிங்க் போனேன், வரலாறு பரீட்சை பேப்பர் மாதிரி இருந்துசு, மூடிட்டு ஓடி வந்துட்டேன்.

    இனிமேல் இந்த மாதிரி பதிவுகளை தவர்க்கவும் நண்பரே.

    குப்பன்_யாஹூ

  6. குப்பன் அவர்களே,
    இது ஒன்றும் பின்னூட்டங்களைக் குறிவைத்து எழுதிய மொக்கைக் கும்மிப் பதிவு இல்லை. வழக்கமான பதிவர் சண்டையும் கிடையாது. நிற்க. உங்களை யார் சுட்டியில் இருந்த பதிவை படிக்கச் சொன்னது? அந்தப் பதிவில் இருக்கிற சுட்டியைப் பிடித்து சைக்கோவின் தளத்துக்குப் போகலாம் என்று தானே சொல்லியிருந்தேன்.

  7. உங்கள் வசதிக்காக அந்தப் பதிவின் தொடுப்பு.

    இந்தப் பக்கத்தில் தெரியும் முதல் தொடுப்பை சொடுக்கினால் சம்பந்தப்பட்ட பதிவைப் படிக்கலாம்.

  8. விஜய்.. உங்கள் புது டெம்ப்ளேட் அழகாய் உள்ளது.. அது சரி அது என்ன புதுசா ஓரு பஞ்சாயத்து ஓடுகிறது. ஒண்ணுமே புரியல விஜய்..

  9. this has been going on for quite some time. i did try to discuss/argue once in that blog, but since it was not going anywhere i stopped. i hope you focus on writing on these issues instead of following those blogs. best wishes

  10. வணக்கம் ருத்ரன் சார். இந்தப் பதிவு தங்களின் கவனத்தையும் பெற்றது குறித்து நிரம்ப மகிழ்ச்சி. இது போன்ற கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை நான் எப்போதும் விரும்புவதில்லை. ஆனால் அவரைக் குறித்து எழுத இதை விட சரியான வார்த்தைகள் இல்லை என்றே கருதுகிறேன். அவருடைய மனநிலைப் பிறழ்வைக் குறித்து அறிவிப்பது மட்டுமே என்னுடைய வேலை. அதை நிரூபிக்கிற பணியை அவர் முன்னமே ஆரம்பித்துவிட்டார்.

  11. கொஞ்ச நாள் நான் இந்த பக்கம் வரலெ.. அதுக்குள்ள என்னென்னவோ நடந்து போச்சே தம்பி !


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.

%d bloggers like this: