பச்சை மனிதன் – நடந்தது என்ன?
3:03 பிப இல் பிப்ரவரி 8, 2009 | பகுக்கப்படாதது, விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 10 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: உதயமூர்த்தி, சேரன், பச்சை மனிதன், ஷரத் சூர்யா
ஹல்க் என்ற ஆங்கிலத் திரைப்படம் “பச்சை மனிதன்” என்ற பெயரில் தமிழில் வெளியாகியது. இப்பதிவு அதைப் பற்றியதல்ல. மக்களிடம் நிதி திரட்டி அதிலிருந்து “பச்சை மனிதன்” என்ற படத்தை எடுப்பதாக அறிவிக்கப்பட்ட படத்தைப் பற்றித்தான் இப்பதிவு பேச இருக்கிறது.
ஆண்டுதோறும் பூதாகரமாக உருவெடுக்கும் காவிரிப் பிரச்சினையை முன்னிறுத்தியே “பச்சை மனிதன்” என்ற படம் எடுக்கப்பட உள்ளதாக செய்திகள் வந்தன. இயக்குனர் சேரனிடம் உதவி-இயக்குனராக இருந்த ஷரத் சூர்யா என்பவர் இயக்குவதாக அறிவிக்கப்பட்டு, மக்களிடம் நிதி திரட்டுவதற்காக “பச்சை மனிதன் அறக்கட்டளை” என்ற அமைப்பும் தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளையில் இயக்குனர் சேரன், சமூக ஆர்வலர் எம்.எஸ். உதயமூர்த்தி, இயக்குனர் லிங்குசாமி மற்றும் பச்சை மனிதன் படத்தை இயக்க இருந்த ஷரத் சூர்யா (இவரது படம் கிடைக்கவில்லை) ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.
தமிழகத்தில் உள்ள கல்லூரிகளிலிருந்து தொண்டுள்ளம் கொண்ட 16,000 மாணவர்களிடம் நிதி திரட்டும் பொறுப்பு ஒப்படைக்கப்படும் என்றும், 110 டிக்கெட்டுகள் கொண்ட புத்தகம் ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்படும் என்றும், நூறு டிக்கெட்டுகான தொகையை அறக்கட்டளையினருக்கு வரைவோலையாக அனுப்பிவைக்கும் செலவுக்கு பத்து டிக்கெட்டுகளுக்கன ரூ.100ஐ பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அந்த டிக்கெட்டுகளில் படத்தைப் பார்ப்பதற்கான அனுமதிச்சீட்டுகளாகவும் பயன்படும் என்று அச்சிடப்பட்டிருந்தது.
படத்தின் இயக்குனர் ஷரத் சூர்யா “பச்சை மனிதன்” என்ற தலைப்பில் ரூபாய் ஐம்பது மதிப்புள்ள புத்தகத்தையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
படத்துக்கான நிதி வசூலை ஜூன் 2004க்குள் முடித்து படத்தை ஏப்ரல் 14 2005 அன்று வெளியிடத் திட்டமிட்டிருப்பதாக ஆறாம் திணை தளத்தில் வெளியாகிய இக்கட்டுரையில் (போராட்ட ஆயுதமாய் ஒரு தமிழ் சினிமா) கூறப்பட்டுள்ளது. இன்று வரை படமும் வெளிவரவில்லை, ஏறக்குறைய 16,000 பேர் திரட்டித் தந்த தொகை என்னவாயிற்று என்பதும் தெரியவில்லை.
துணை இயக்குனராகும் கனவுடனிருந்த நண்பன் (கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த மாணவன்) ஒருவனுக்காக அறுபது டிக்கெட்டுகளை என் அலுவலக நண்பர்களிடம் விற்றுத் தந்தேன். மேலும் என்னுடைய பங்களிப்பாக இருபது டிக்கெட்டுகளையும் வாங்கிக்கொண்டேன். இந்த முயற்சிக்கு என் பொறுப்பில் ரூ. 800 திரட்டித் தரப்பட்டுள்ளதாலேயே இப்பதிவை எழுதுகிறேன். ஒரு நல்ல முயற்சியை நான் கொச்சைப்படுத்துவதாக யாரேனும் பின்னூட்டம் எழுத எத்தனித்தால் கீழ்க்கண்ட முகவரியிலோ அல்லது தொலைபேசியிலோ விசாரித்து திரட்டப்பட்ட நிதி என்னவாயிற்று என்று கேட்டுச் சொல்லலாம்.
அறக்கட்டளை இயங்கும்/இயங்கிய முகவரி மற்றும் தொலைபேசி எண்:
பச்சை மனிதன் அறக்கட்டளை
பதிவு எண் : 370/4/03
9-A, சிவசைலம் தெரு, ஹபிபுல்லா ரோடு
தி.நகர், சென்னை 600 017
போன்: 2834 4946, செல்: 98403 44474
10 பின்னூட்டங்கள் »
RSS feed for comments on this post. TrackBack URI
மறுமொழியொன்றை இடுங்கள்
Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.
//இந்த முயற்சிக்கு என் பொறுப்பில் ரூ. 800 திரட்டித் தரப்பட்டுள்ளதாலேயே இப்பதிவை எழுதுகிறேன்.//
நிச்சயமாக நீங்கள் கேட்களாம்!
//முகவரியிலோ அல்லது தொலைபேசியிலோ விசாரித்து திரட்டப்பட்ட நிதி என்னவாயிற்று என்று கேட்டுச் சொல்லலாம்.//
அதையும் கேட்டுவிட்டு நீங்களே சொல்லி இருக்கலாமே! அப்படி கேட்டு இருந்தால் என்ன சொன்னார்கள் என்பதையும் சொல்லுங்கள்!
Comment by குசும்பன்— பிப்ரவரி 8, 2009 #
குசும்பரே, முயற்சிக்காமலா…
Comment by vijaygopalswami— பிப்ரவரி 8, 2009 #
போன வாரம் வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கும் போது பழைய பொருள்கள் உள்ள பெட்டியில் பழைய டைரியில் இந்த பழைய டிக்கெட் கிடைத்தது(எத்தன பழசு பாருங்க)
எப்படியாவது காவிரியை கொண்டு வாங்கன்னு ரெண்டு டிக்கெட் வாங்கினேன். ஆனா காவிரியும் வரல, பச்சைமனிதனும் வரல
இன்னொரு விசயத்தையும் நாம தெரிஞ்சுக்கனும்!
ஒரு படத்தின் தலைப்பை நாம் பதிவு செய்துவிட்டோமானால் அதை மற்றொருவர் வைக்கமுடியாது. அப்படியானால் பச்சைமனிதன் என்ற தலைப்பை அவர்கள் பதிவு செய்யவில்லை.
பணம் வசூல் செய்தது வேறு எதோ காரணத்திற்காக,
இப்படி சில மனிதர்களாலால் தான் நல்ல விசயங்களுக்கு கூட பணம் கொடுக்க தயக்கமாக இருக்கிறது
Comment by வால்பையன்— பிப்ரவரி 8, 2009 #
வாலுக்குட்டி, உங்க பகிரங்கக் கடிதத்துக்கு நல்ல பவர் இருக்கு. இதப்பத்தியும் ஒன்னு எழுதுங்களேன்.
Comment by vijaygopalswami— பிப்ரவரி 8, 2009 #
வாலுக்குட்டி, ஃபிலிம் சேம்பரில் பதிவு செய்யும் தலைப்புகளுக்கு ஆயுள் மூண்று வருடங்கள். அதன் பிறகு மீண்டும் கட்டணம் செலுத்தி புதுப்பிக்க வேண்டும். இல்லையெனில் கட்டணம் செலுத்துபவர்களுக்கு தலைப்பு வழங்கப்பட்டுவிடும் என்று கேள்வி…
Comment by vijaygopalswami— பிப்ரவரி 8, 2009 #
Hi
We have just added your blog link to Tamil Blogs Directory – http://www.valaipookkal.com.
Please check your blog post link here
If you haven’t registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.
Sincerely Yours
Valaipookkal Team
Comment by valaipookkal— பிப்ரவரி 8, 2009 #
நண்பர் விஜய் கோபால்சாமி அவர்களுக்கு,
திரு.சரத் சூர்யா என்னுடைய நண்பர் அவர் தஞ்சை மக்களுக்காக எடுக்க நினைத்த படம்தான் பச்சை மனிதன், போதுமான நிதி இல்லாமல் செலவினங்கள் கூடிபோனதால் எடுத்தவரை அப்படியே இருக்கிறது மேலும் , இதன் இதன் கணக்கு அனைத்தும் பச்சை மனிதன் அறக்கட்டளை வசம் இருக்கிறது.
இதில் பதிக்கப்பட்டது சரத் சூர்யா என்ற அப்பாவி மனிதன் மற்றும் அவர் குடும்பம், இன்றுவரை இந்தப்படத்தை எடுத்து முடித்தபின்தான் அடுத்த படம் எடுப்பேன் என வைராக்கியமாக வாழ்கிறார் , மேலும் திருவிழாக்களில் பொம்மை விற்றுத்தான் தன் குடும்பத்தை காப்பாற்றுகிறார் , நம்மைபோல் நண்பர்கள் கொடுத்த படம் எடுத்தவரை ஆனா செலவு போக மீதி அப்படியே இருக்கிறது ,
சேரன் , லிங்குசாமி எவ்வளவோ சொல்லியும் இந்த படத்திற்கு அப்புறம்தான் நான் சினிமாவிற்குள் வருவேன் என ஒரு சன்யாசி போல் வாழ்ந்துகொண்டிருக்கிறார் , தற்போது விஜய் டி.வி ஒரு மணி நேர படமாக கொடுத்தால் வெளியுடுவதாக சொன்னதால், படத்திற்கான இறுதி வடிவத்திற்காக சேலம் சென்றிருக்கிறார்.
மேலும் விபரங்களுக்கு என்னை தொடர்பு கொள்ளலாம், அவர் சேலத்திலிருந்து வந்ததும் உங்களிடம் பேச சொல்கிறேன், அவருடைய உண்மையான ஆதங்கமே யாருமே இன்னைக்கு வரைக்கும் கேள்விகேட்காம இருக்காங்க என்ற வருத்தம்தான்..
அன்புடன் ,
கே.ஆர்.பி.செந்தில்
Mobile:+91-9884267049
Comment by கே.ஆர்.பி.செந்தில்— பிப்ரவரி 8, 2009 #
நண்பர் விஜய் கோபால்சாமி அவர்களுக்கு,
திரு.சரத் சூர்யா என்னுடைய நண்பர் அவர் தஞ்சை மக்களுக்காக எடுக்க நினைத்த படம்தான் பச்சை மனிதன், போதுமான நிதி இல்லாமல் செலவினங்கள் கூடிபோனதால் எடுத்தவரை அப்படியே இருக்கிறது மேலும் , இதன் கணக்கு அனைத்தும் பச்சை மனிதன் அறக்கட்டளை வசம் இருக்கிறது.
இதில் பாதிக்கப்பட்டது சரத் சூர்யா என்ற அப்பாவி மனிதன் மற்றும் அவர் குடும்பம், இன்றுவரை இந்தப்படத்தை எடுத்து முடித்தபின்தான் அடுத்த படம் எடுப்பேன் என வைராக்கியமாக வாழ்கிறார் , மேலும் திருவிழாக்களில் பொம்மை விற்றுத்தான் தன் குடும்பத்தை காப்பாற்றுகிறார் , நம்மைபோல் நண்பர்கள் கொடுத்த பணம் படம் எடுத்தவரை ஆன செலவு போக மீதி அப்படியே இருக்கிறது ,
சேரன் , லிங்குசாமி எவ்வளவோ சொல்லியும் இந்த படத்திற்கு அப்புறம்தான் நான் சினிமாவிற்குள் வருவேன் என ஒரு சன்யாசி போல் வாழ்ந்துகொண்டிருக்கிறார் , தற்போது விஜய் டி.வி ஒரு மணி நேர படமாக கொடுத்தால் ஒளிபரப்புவதாக சொன்னதால், படத்திற்கான இறுதி வடிவத்திற்காக சேலம் சென்றிருக்கிறார்.
மேலும் விபரங்களுக்கு என்னை தொடர்பு கொள்ளலாம், அவர் சேலத்திலிருந்து வந்ததும் உங்களிடம் பேச சொல்கிறேன், அவருடைய உண்மையான ஆதங்கமே யாருமே இன்னைக்கு வரைக்கும் கேள்விகேட்காம இருக்காங்க என்ற வருத்தம்தான்..
அன்புடன் ,
கே.ஆர்.பி.செந்தில்
mobile:91-9884267049
Comment by கே.ஆர்.பி.செந்தில்— பிப்ரவரி 8, 2009 #
ஏறக்குறைய நான்காண்டுகளுக்கு முன்பு நடந்த விஷயம். தற்செயலாக நண்பர் ஒருவருடன் உரையாடிக்கொண்டிருந்த பொழுது இதைக் குறித்துக் கேட்டார். விபரம் எதுவும் தெரியாததால் வலையுலக நண்பர்கள் மூலமாகத் தகவல் அறியவே இப்பதிவை எழுதினேன். ஷரத் சூர்யாவின் தற்போதைய நிலையைக் கேள்விப்படும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இந்தப் பதிவு “பச்சை மனிதனை” அனைவருக்கும் நினைவுபடுத்துமாயின் அதுவே எனக்கு மனநிறைவை அளிப்பதாக இருக்கும். படம் இறுதி வடிவம் பெற உள்ளது ஆறுதலளிக்கிறது.
ஆறாம் திணையில் வந்த கட்டுரையில் அறக்கட்டளையின் முகவரியும் தொலைபேசி எண்ணும் கிடைத்தது. லேன்ட்லைன் நம்பருக்கு முயற்சி செய்தபோது நீண்ட நேரமாக தொலைபேசி எடுக்கப்படாமலே இருந்தது. அதன் பிறகே பதிவைப் பதிப்பித்தேன். சேரன், லிங்குசாமி ஆகிய வர்த்தக ரீதியிலான இயக்குனர்களும் அறக்கட்டளையில் இருந்தது அறக்கட்டளை மீதான நம்பிக்கையின்மைக்கு இட்டுச் சென்றது. மற்றபடி மிகவும் எதிர்பார்த்த ஒரு படம் வெளிவரவில்லையே என்ற ஏமாற்றமும் விரக்தியுமே இந்தப் பதிவு. அக்கறையுடன் தகவலைப் பகிர்ந்துகொண்டமைக்கு செந்தில் அவர்களுக்கு மிக்க நன்றி.
Comment by vijaygopalswami— பிப்ரவரி 8, 2009 #
இவ்ளோ மேட்டர் நடந்து போச்சா ??
Comment by சேவியர்— பிப்ரவரி 15, 2009 #