என்னமோ போடா மாதவா – 14/2/2009
10:09 பிப இல் பிப்ரவரி 14, 2009 | அரசியல், பகுக்கப்படாதது, படங்கள், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 6 பின்னூட்டங்கள்பதிமூணு வயசுப் பையனும் பதினைஞ்சு வயசு பொண்ணும் அப்பா அம்மாவா ஆகிட்டாங்களாம். அத ஒரு செய்தீன்னு குதியோ குதின்னு குதிக்கிறாங்க. பதினேழு வயசுல எங்க தாத்தா பதிமூணு வயசு இருந்த எங்க பாட்டிய கல்யாணம் பண்ணாரு. பாட்டிக்குப் பதினாலு வயசு (1956) இருந்தப்போ எங்க அப்பா பொறந்தாரு. இவனுங்க சொல்றாப்ல பாத்தா மிகக் குறைந்த வயசுல தாயாகி சாதனை படைச்சவங்க என் பாட்டி. இந்த ஒலக சாதனையப் பத்தி அப்போ இருந்த சுதேசமித்திரன், தினமணி உள்ளிட்ட எந்த பேப்பர்லயும் செய்தி போடல. வெள்ளத் தோல் இருக்கறவனுங்களுக்கு நடக்கறது தான் வரலாறுன்னு நெனச்சுட்டானுங்க போல இருக்கு.
இன்னிக்கு மத்தியான செய்தியப் பாத்தா கேள்விப் படாத புதுப் புதுப் பேரா சொல்றாங்க. அனுமன் சேனாவாம், துர்கா சேனாவாம், தமிழ் மாநில சிவசேனாவாம், புதுசு புதுசா சொல்றானுங்க. போற போக்கப் பாத்தா போன பதிவுல அர டிக்கெட்டு போட்ட பின்னூட்டம் பொய்யாயிரும் போல இருக்கே. எல்லாத்துக்கும் மேல ரெண்டு நாய்களுக்கு கல்யாணம் வேற பண்ணி வச்சிருக்கானுங்க. “யாயும் யாயும் யாராகியரோன்னு” ரொம்ப வருஷத்துக்கு முன்னயே ஒரு தமிழன் எழுதி வச்சுட்டுப் போயிட்டான் காதலப்பத்தி. இவனுவ இப்பத்தான் நாயும் நாயும் கூடிக் குடும்பம் நடத்த ஏற்பாடு பண்றானுங்க. மாமா வேலையவே ஹைடெக்கா பண்றானுங்களோ!
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் ஐந்தாவது ரயில்வே பட்ஜெட் நேற்று சமர்பிக்கப்பட்டது. இந்த அரசு தேர்ந்தெடுக்கப்பட்ட போது நிதித்துறையில் ஒரு தமிழர் அமைச்சராக வந்ததை எண்ணி அனைவரும் மகிழ்ந்தோம். ஆனால் அவருடைய நிலைமை கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டது. ஆனால் அனைவராலும் கேலி செய்யப்பட்ட லாலு பிரசாத் யாதவ் இந்த ஐந்தாண்டுகளில் சிறந்த நிர்வாகியாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார். ரயில்வேயில் சரக்குப் போக்குவரத்து அதிகரிக்கச் செய்தமை, ஐந்து ஆண்டுகளில் ஒரு முறை கூட ரயில் கட்டணத்தை உயர்த்தாமை, என்று ரயில்வே துறையை முழுமையாகப் பயன்படுத்தியதன் மூலம் ரயில்வேயை லாபகரமான துறையாக மாற்றியுள்ளார் லாலு. மீண்டும் பல ரயில்வே பட்ஜெட்களை சமர்ப்பிக்க லாலுவுக்கு வாழ்த்துக்கள்.
இந்தியாவில் இந்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய குளிர்பானம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. பால் உற்பத்தியின் போது கிடைக்கக் கூடிய ஒரு உபபொருளிலிருந்து அந்தக் குளிர்பானம் தயாரிக்கப்பட உள்ளது. ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தான் அதனை நாடு முழுவதும் விநியோகிக்க இருக்கிறது. அப்படி ஒரு பானம் எதுன்னு கேக்குறீங்களா! பசு மூத்திரம். இதை எதிர்த்து எருமை மாடுகளும், காளை மாடுகளும் சேந்து போராட்டம் நடத்தப் போகுதாம். வேற எதுக்கு, அதுங்க மூத்திரத்தையும் சேக்கச் சொல்லிதான்.
சென்னை செம்பரம் பாக்கத்தைச் சேர்ந்த எழுபது வயது முதியவர் ஒருவர் பீடி நெருப்பு தாடியில் பற்றி பரிதாபமாக உயிரை விட்டிருக்கிறார். அதாவது தனக்கான கொள்ளியைத் தானே வைத்துக் கொண்டுள்ளார். இதிலிருந்து அறியவரும் நீதி: மொகத்த சுத்தமா செரைச்சுக்கோங்கப்பா!!!
6 பின்னூட்டங்கள் »
RSS feed for comments on this post. TrackBack URI
மறுமொழியொன்றை இடுங்கள்
Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.
A Girl becoming a mother at 13 is not a ‘big deal’ (still news) but a boy becoming a father at 13 is. moreover, in this era of having their first kid at very late 20s or early 30s or not having kids at all, this is a big news for WESTERNERS.
may be for we, indians, it is no big deal as we see/hear about many child marriages around here. westerners never take us into consideration nor give a ‘damn’ about things happening in india. at the same time they never expect us to give a ‘shit’ about their news either. rather than asking ” is this a big news?”, we should condemn indian media for that, if that does not amuse you .
yes, for them it is a big news and its THEIR history. (its something unusual)
if we want in record book or something, we should document the record and submit it. you may be the most beautiful guy in the world, but if you don’t participate, you don’t win.
btw indian media is disgusting, i hate them.
Comment by guru— பிப்ரவரி 15, 2009 #
என்னமோ போங்க சாமி
Comment by rajkanss— பிப்ரவரி 15, 2009 #
பின்னிப் பெடலெடுக்கிறே மாதவா… இன்னும் கொஞ்சம் நாட்களில் தமிழகத்தின் தலை சிறந்த எழுத்தாளனாய் வருவதற்குரிய அத்தனை அறிகுறியும் தெரிகிறது 🙂
அருமை.
Comment by சேவியர்— பிப்ரவரி 15, 2009 #
சேவியர் போட்ட பின்னூட்டத்தால்
இந்த நிமிஷம் நான் ரொம்ப குஷி;
மிகையில்லை மிகையில்லை இந்த வாழ்த்து
வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி!
வாலி எஃபெக்ட் தெரியுதா சேவி அண்ணே!!!
Comment by vijaygopalswami— பிப்ரவரி 15, 2009 #
undoubtedly Lalu is a brillant administrator,the english media is relucnantly agreeing it now, bcoz they made mockery against his style of functioning.You wish lalu to present next railway budget too? you want yet another term of UPA ?or do you still beleive about that 3rd front?
Comment by rabiya— பிப்ரவரி 16, 2009 #
ஹா..ஹா… சந்தடி சாக்குல நம்ள ஒரு ஓட்டு ஓட்டிட்டியேப்பா 🙂
Comment by சேவியர்— பிப்ரவரி 17, 2009 #