அம்சா
10:43 பிப இல் பிப்ரவரி 15, 2009 | அரசியல், பகுக்கப்படாதது, விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 3 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: இலங்கைத் தூதர், கோபால், நக்கீரன்
இங்கே ஏன் விசித்ரா படம் என்று தமிழ் கூறும் வலையுலகம் ஐயுறலாம். நடிகை விசித்திரா அறிமுகமான காலத்தில் நமிதாவுக்கு தற்போதுள்ள வரவேற்பு அவருக்கு இருந்தது. விசித்ரா என்ற அவருடைய நிஜப் பெயரே இரண்டொரு படங்களுக்குப் பிறகு தான் அனைவராலும் அறியப்பட்டது. “மடிப்பு அம்சா” என்ற பெயரில்தான் அவர் தமிழர்களுக்கு அறிமுகமானார். தற்சமயம் விசித்ரா என்ற பெயரை கூகுளில் தேடினால் இந்த ஒரு படம் மட்டுமே தென்படுகிறது.
இப்போது விசித்ராவை நினைவுகூர வேண்டிய அவசியம் என்ன? ஏன் இந்தப் படமும் பதிவும் என்று பலரும் ஐயுறலாம். ஐயன்மீர் பொறுமை காப்பீராக. இந்த அம்சாவை இன்னொரு அம்சா நினைவுபடுத்திவிட்டார். அவர்தான் இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் அம்சா. இலங்கையில் நிகழ்ந்து வரும் படுகொலைகளைத் தடுக்க இந்தியா தலையிட வேண்டும், காலிட வேண்டும் என்ற குரல்கள் மட்டும்தான் இதுவரை எழுப்பப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் அதிருப்தியை வெளிக்காட்ட குறைந்தபட்சம் தூதரக உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தை இனிமேலாவது முன்னெடுக்க வேண்டாமா? தூதருக்கான பணிகளைக் கடந்து “நக்கீரன் பத்திரிகை மன்னிப்பு கேட்கவில்லையென்றால் வழக்குத் தொடருவேன்” என்று ராஜபக்ஷே கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் போல உறுமியிருக்கிறார். இந்த வேளையிலாவது இலங்கைத் தூதரை இந்தியாவிலிருந்து வெளியேற உத்தரவிட வேண்டும்.
இவ்வளவும் ஆரம்பமானது ராஜபக்ஷே தலை ஓட்டு மாலை அணிந்திருப்பது போன்ற படத்துடனும் “ராஜபக்ஷே நாசமா போவான்” என்ற சாப வாசகத்துடனும் வந்த அட்டைப் படம் காரணமாகத்தான். இந்த அட்டைப் படமும் சாப வாசகமும் இலங்கை அதிபரின் மாட்சிமையைக் குலைக்கிறதாம். இலங்கையின் அதிபர் எந்தத் தமிழினத்தை அழித்துவிடத் துடிக்கிறாரோ, எந்தத் தமிழினத்தின் மீது வன்மத்தோடு இருக்கிறாரோ அந்தத் தமிழினம் அவருடைய மாட்சிமையைக் குலைக்கக் கூடாதாம். அந்த மாட்சிமை குலையும் போது அதை தமிழர்களின் மண்ணிலே தன்னுடைய கைத்தடியை வைத்துத் தட்டிக் கேட்பாராம். என்ன கொடுமை சார்…
இதற்குப் பிறகாவது இந்தியா இலங்கையுடனான தூதரக உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என்ற தீர்மாணம் முன்னெடுக்கப்படுமா? வலைப்பதிவு சமூகமே, சிந்திப்பீர்…
பின் குறிப்பு: நக்கீரன் பத்திரிகையும் கோபாலும் யோக்கியமா என்று கேட்க இருப்பவர்களே, இதே மாதிரி வேறு எங்காவது கவர்ச்சிப்படம் போட்டிருந்தால் பார்த்துவிட்டு பின்னூட்டிவிட்டு போய்க்கொண்டே இருங்கள். இது உங்களுக்கான இடம் அல்ல. இலங்கையில் இருக்கிற தமிழர்களைத் தான் ஆதரிக்கவில்லை, குறைந்தது இங்கிருக்கும் கோபாலையாவது ஆதரித்துத் தொலையுங்கள் (எனக்கும் நக்கீரனுடன் பல கருத்து முரண்கள் உண்டு. நக்கீரனையும் கோபாலையும் கேள்விகேட்க ஒவ்வொரு தமிழனுக்கும் உரிமை உண்டெனினும் ஒரு சிங்களன் தமிழ் மண்ணில் இருந்துகொண்டு தமிழனை மன்னிப்புக் கேட்கச் சொல்வதை ஏற்பதற்கில்லை).
3 பின்னூட்டங்கள் »
RSS feed for comments on this post. TrackBack URI
மறுமொழியொன்றை இடுங்கள்
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.
என்ன விஜய்.. ஏன் இவ்வளவு கோவம்..? இப்ப என்ன தூதரக உறவை துண்டிச்சிகணும் அவ்வளவு தானே.. நான் உங்கள் பக்கம் ..
Comment by கேபிள் சங்கர்— பிப்ரவரி 15, 2009 #
நம்ம ப்ளாகையெல்லாம் படிக்கறதில்லையா… விஜய்.. உஙக்ளின் கருத்துக்களை, என்னுடய் நிதர்சன கதைகளுக்கு எதிர்பார்கிறேன். நன்றி
Comment by கேபிள் சங்கர்— பிப்ரவரி 16, 2009 #
அப்போ இதுக்கு யார்மேலங்க கேஸ் போடரது?
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28375
Comment by yam— பிப்ரவரி 16, 2009 #