“ஏன் பிறந்தாய் மகனே…” அல்லது “நான் என்னாத்த சொல்வேனுங்கோ”
2:37 பிப இல் பிப்ரவரி 21, 2009 | அரசியல், படங்கள் இல் பதிவிடப்பட்டது | 2 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: உயர் நீதிமன்றம், சுப்ரமணியசாமி, முட்டையடி, வழக்கறிஞர்கள்
அலுவலகத்தில் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக உணவருந்தும் வாய்ப்பு அடிக்கடி கிடைக்காது. அந்த வாய்ப்பு நேற்று கிடைத்தது. நேற்று இரவு 9:00 மணிக்குப் பக்கமாக நானும் வேறு சில நண்பர்களும் ஒன்றாக உணவருந்தச் சென்றோம்.
உணவுக்கூடத்தில் (கெஃபெட்டீரியா) உள்ள தொலைக்காட்சியில் சென்னை உயர்நீதிமன்றக் கலவரக் காட்சிகள் வந்தன. ஆந்திர நண்பர் ஒருவர் “என்ன நடந்தது சென்னை உயர்நீதிமன்றத்தில்” என்று ஆர்வமாகக் கேட்டார்.
ஏறக்குறைய பதினைஞ்சு நிமிஷம் என்ன நடந்துச்சு, ஏன் நடந்துச்சு, இதுக்கு யாரு காரணம், அவருக்கு எதால அடி விழுந்துச்சு, அதுக்கப்புறம் எங்க போய் ஒளிஞ்சுக்கிட்டாரு, வெளிய வந்து என்ன பேசுனாரு, போலீஸ் ஏன் வந்துச்சு, யாரு தூண்டுதல்ல வந்துச்சு, இதையெல்லாம் வெளக்கி சொன்னேன்.
ஆர்வமா கேட்டவரு கடைசிய ஒரு கேள்வி கேட்டாரு. அதக் கேட்ட ஒடனே எனக்கு முகமே சுண்டிப் போச்சு. “ஹூ இஸ் திஸ் சுப்ரமணியம் சாமி? நீ கடைசி வரைக்கும் அவரு யாருன்னே சொல்லலியே”.
2 பின்னூட்டங்கள் »
RSS feed for comments on this post. TrackBack URI
மறுமொழியொன்றை இடுங்கள்
Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.
same Question ஆனா என்னிடம் கேட்டது தமிழ் நண்பர்!!!!!!!!
Comment by bashakavithaigal— பிப்ரவரி 22, 2009 #
நானும் சொன்னன். இவரு அமெரிக்காவில பெரிய படிப்பாளி. உள்ளூரில கோமளி வேலை பாத்துத் தான் பிழைப்ப ஓட்டுறாருன்னு. அந்தச் சண்டை நீதி மன்றத்தில தான் நடந்தது என்று சத்தியம் பண்ணியும் நம்ப மாட்டேங்குறாங்க. படம் பார்க்கும் போது அவங்கலூம் வந்திட்டாங்க.
Comment by pukalini— பிப்ரவரி 23, 2009 #