காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு

5:05 பிப இல் மார்ச் 1, 2009 | அரசியல், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 15 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , ,

1. ஆதிகேசவன்: வெறும் ஆதிகேசவன்னு சொன்னா தெரியாது, ஆல் இன் ஆல் ஆதிகேசவன்னு சொன்னாத்தான் எல்லாருக்கும் தெரியும். அய்யா அழுக்கு வேட்டியவே ஆகாயவிமானத்துல அனுப்பி டெல்லியில சலைவைக்குப் போடுவாராம். ஒரு தரவுக்காக கூகுள்ல இவரோட படத்தத் தேடின். ஒன்னு கூடக் கெடைக்கல. இவரு எங்க இருக்காரு, இவரு மேல இருந்த வழக்குகளின் நிலைமை என்ன, எதுவும் தெரியல. தெரிஞ்சவங்க தாராளமா சொல்லுங்க.

2. முத்துக்கருப்பன்: வராற்றுச் சிறப்பு மிக்க கலைஞர் கைதில் பங்கேற்ற அதே முத்துக்கருப்பன்தான். கொஞ்ச நாள் திருச்சி காவலர் பயிற்சிக் கல்லூரியின் தலைவரா இருந்தார். ஒரு முறை தற்கொலை முயற்சி செய்ததாகக் கூட சொல்லிக்கிட்டாங்க. தற்சமயம் என்ன செய்கிறாருன்னு தெரியவில்லை. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு முதல்வரை நேர்ல சந்திச்சு கோரிக்கை வைச்சதா பத்திரிகை செய்திகள் கூட வந்துச்சு. ஒன்னும் வேலைக்காகல.

3. ஸ்ரீ ஹரி பரணிதர ஸ்வாமிகள்: சேலத்துல, ஸ்கூல்ல படிச்சிட்டிருந்த பையன் அவனா சாமியாரானானோ, இல்லை வேற யாராவது ஆக்குனாங்களோ தெரியாது! கொஞ்ச நாள் காவித்துணியும் தண்டமுமா (தண்டமா) திரிஞ்ச பையன், இப்போ மறுபடியும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிட்டதா கேள்வி. கொஞ்ச நாள் மதுரை ஆதினம் கூட இந்தப் பையன இளைய ஆதினமா நியமிக்கப் போறதா நம்மள வச்சு காமெடி பண்ணுனாரு. அதுக்காக ஏற்கெனவே அப்பாயிண்ட் பண்ண இளைய ஆதினத்த டிஸ்மிஸ் பண்ணி போஸ்ட்ட வேக்கெண்ட்டா வச்சிருந்தாரு. ஆனா பாருங்க எல்லாம் புஸ்வானமாயிருச்சு.

4. சிவகாசி ஜெயலட்சுமி: பல காக்கிங்க இந்த அம்மாவப் பாத்து ஒரு காலத்துல “சிவகாசி ரதியே” ன்னு பாடிக்கிட்டிருந்தாங்க. மாட்டினதும் சிவகாசி ரதி சிவகாசி வெடியாகிருச்சு. இவங்க பேரக் கேட்டால காக்கிப் பேண்ட் எல்லாம் ஈரப் பேண்ட் ஆனதெல்லாம் ஒரு காலம். இப்போ இவங்க எங்க இருக்காங்கன்னு தெரியல. அரெஸ்ட் ஆகறதுக்கு முன்னாடி மல்ட்டி லெவெல் மார்க்கெட்டிங்ல இவங்க பெரிய தில்லாலங்கடியாம்.

5. இவர் பேரு எனக்கு ஞாபகத்துலயே இல்லை. ஆனா இப்படி ஒரு மனுஷன் இருந்தாரே, போலீஸ்ல மாட்டுனாரே, தியாகராயநகர் தொழிலதிபர் ஒருத்தரோட மனைவியையும் மகளையும் தன்னோட கஸ்டடீல வச்சிருந்ததா கூட குற்றம் சாட்டுனாங்களேன்னு பல விஷயம் ஞாபகத்துக்கு வருதே ஒழிய இவரு பேரு ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது. கடைசியா காலைக் கடன செட்டில்பண்ணிக்கிட்டிருந்தப்போ இவரோட பேரு ஞாபகத்துக்கு வந்துச்சு. சதுர்வேதி சாமியார்.

6. ஜீவஜோதி: சரவணபவன் அண்ணாச்சிக்கு இந்தம்மா கனவுல வந்தா கூட பிரஷர் ஏறிக்கிட்டிருந்துச்சு. தஞ்சாவூர்ல “ஜீவ்ஸ்” டெய்லரிங்ன்னு ஒரு தையல்கூடம் வச்சிருந்தாங்க. அப்புறமா அதே தஞ்சாவூர்ல கந்தசரஸ் மஹால் திருமண மண்டபத்துல உறவுக்காரர் ஒருவரையே மறுமணம் செஞ்சுக்கிட்டாங்க. கல்யாணத்துல செய்தி சேகரிக்க வந்த பத்திரிகைக்காரங்க வாசல்லயே தடுத்துத் திருப்பி அனுப்பப்பட்டாங்க. அதனால அன்னைக்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையே ரொம்ப கலவரமா இருந்துச்சு. ஜீவஜோதி இப்போ வெளிநாட்டுல இருக்கறதா கேள்வி. இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்னா, நானும் அதே தஞ்சாவூர்க்காரன்தான்.

7.  ஜோஷ்வா ஸ்ரீதர்: “காதல்” படத்துக்கு இசை அமைச்ச இவரோட நிஜவாழ்வுக் காதலில் என்ன சிக்கலோ தெரியலை, கைது கஸ்டடீன்னு பல விதமா செய்திகள் வந்துகிட்டிருந்துச்சு. மீண்டும் கீபோர்டு ப்ளேயரா ஆகிட்டதா கேள்வி. இவரப்பத்தியும் ரொம்ப நாளா எந்த தகவலும் இல்ல.

8. ஜெயமாலா: சோழிய உருட்டிப் பாத்து ஐயப்பன் கோபமா இருக்காருன்னு உன்னிகிருஷ்ன பணிக்கர் சொன்னாரு, உடனே கொஞ்ச நாள் கழிச்சு இந்த அம்மா “ஆமாஞ்சாமி, நாந்தான் ஐயப்பன் செலையத் தொட்டுக் கும்புட்டேன்னு” சொன்னாங்க. விஷயம் கொஞ்ச நாள் எரிஞ்சுச்சு, கொஞ்ச நாள் பொகைஞ்சுச்சு. அதுக்கப்புறம் இந்த அம்மாவப் பத்தியும் ஒரு செய்தியும் இல்ல.

9. கிரகலக்‌ஷ்மி: நடிகர் ப்ரஷாந்தின் மனைவி. கருத்து வேறுபாடுகளால் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தார்கள். இடையே கிரகலக்‌ஷ்மிக்கும் இன்னொருவருக்கும் ஏற்கெனவே திருமணமாகிவிட்டது என்று ப்ரஷாந்த் தரப்பிலிருந்து கூறப்பட்டது. தற்சமயம் விவாகரத்து வழக்கு என்ன நிலையில் இருக்குன்னு தெரியல. இவங்களுக்கு ஒரு குழந்தையும் இருக்குது.

10. சிவசங்கர் பாபா: பத்துப் பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இவரப்பத்தி யாருக்கும் தெரியாம இருந்துச்சு. என்னைக்கு இவரு யாகவா முனிவர் கையால துண்டடி வாங்குனாரோ அன்னைக்கு ஆரம்பிச்சுது இவருக்கு சுக்கிர தெசை. “சம்ரஷனா” அப்படீன்னு ஒரு அமைப்ப நடத்திக்கிட்டிருக்கறதா கேள்வி. முன்னையெல்லாம் அடிக்கடி டிவி சேனல்கள்ள பேட்டி குடுப்பார். இப்ப இவரு குடுக்கறதில்லையா இல்லை யாரும் இவர் கிட்ட பேட்டி கேக்கறதில்லையான்னு தெரியல.

11. ராமர் பிள்ளை: மூலிகைப் பெட்ரோல் ராமர் பிள்ளைன்னு கொஞ்சம் வருஷத்துக்கு முன்னாடி ஒரு பரபரப்பான பேச்சிருந்துச்சு. ஆனா இவருடைய தயாரிப்பு ஆய்வுக்கூட சோதனையில தோல்வியடைஞ்சிருச்சு. “தமிழ் தேவி” மூலிகை எரிபொருள்ங்கற பேருல இவருடைய கண்டுபிடிப்பு சில காலம் விற்பனை செய்யப்பட்டது. இவருடைய கண்டுபிடிப்புக்கு சீனக் காப்புரிமை கோரி வின்னப்பித்திருந்தார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இவருடைய தயாரிப்பை விநியோகம் செய்யப் போவதாகவும் சொன்னது. இவர் தனது மனைவியையும் மகளையும் பிரிந்திருப்பதாக வந்த செய்தியே பத்திரிகைகளில் கடைசியாக இவரைப்பற்றி வந்த செய்தி.

12. ___________________________.

பின்குறிப்பு: 12 ஆவது ஆள் யாருன்னு தெரிஞ்சுக்க நீங்க ரொம்ப ஆவலா காத்திருப்பீங்க. ஆனாலும் என்னால அவர இந்தப் பட்டியல்ல சேக்க முடியாது. இந்தப் பதிவைப் பத்தொன்பதாம் தேதிக்கு முன்பு எழுதியிருந்தால் அவரையும் இப்படியலில் சேர்த்திருப்பேன். ஆனால் அன்று தான் அவருக்கு ஹைக்கோர்ட்டில் முட்டையடி வைபவம் நடந்தது.

15 பின்னூட்டங்கள் »

RSS feed for comments on this post. TrackBack URI

 1. அன்பின் விஜயகோபால்

  கானாமல் போனவர்களைப் பற்றிய சிறு குறிப்பு அருமை. பரபரப்புடன் பேசப்படுபவர்கள் திடீரெனக் காணாமல் போய் விடுவார்கள். நாமும் எல்லாவற்றையும் மறந்து அடுத்த ப்ரச்னையில் மூழ்கி விடுவோம். இது தான் இயல்பு வாழ்க்கை. என்ன செய்வது …….

 2. அக்மார்க் தஞ்ஜை குசும்பு:-))

 3. உங்க ஊர் ஆளுங்களை எல்லாம் சொல்லிட்டு எங்க ஊர் “மாயா”வெங்கடேசன் பத்தி சொல்லலையே. ஆர்.வெங்கியை வச்சு சிமெண்ட் பேக்டர் எல்லாம் அஸ்திவாரம் போட்டவரை விட்டுட்டீங்களே! இது நியாமமா? தார்மமா? அடுக்குமா? :-))

 4. 13. வைகுண்டராஜன்:
  மணற்கொள்ளை மாபியா, ஜெயலலிதாவின் பினாமி, ஜெயா தொலைக்காட்சி அதிபர் அப்படி இப்படினு இவரைப் பத்தி செய்தி பட்டையைக் கெளப்புச்சு. கண்டதும் சுட உத்தரவுனெல்லாம் சொன்னாங்க.. இப்போ அவரு எங்கங்க..?

 5. 12 ஆவது ஆள் யாருன்னு தெரிஞ்சுக்க நீங்க ரொம்ப ஆவலா காத்திருப்பீங்க. ஆனாலும் என்னால அவர இந்தப் பட்டியல்ல சேக்க முடியாது. இந்தப் பதிவைப் பத்தொன்பதாம் தேதிக்கு முன்பு எழுதியிருந்தால் அவரையும் இப்படியலில் சேர்த்திருப்பேன். ஆனால் அன்று தான் அவருக்கு ஹைக்கோர்ட்டில் முட்டையடி வைபவம் நடந்தது.
  ///super///

 6. சுப்ரமணிய சாமி பற்றிய கடைசி கமெண்ட் அருமை.. எல்லா செய்திகளிலுமே ஹீரோவும், வில்லனும் சீக்கிரம் மறக்கடிக்கப் பட்டு விடுகிறார்கள்..

  இதேமாதிரி சினிமா துறையிலும் காணாமல் பற்றியவர்கள் பற்றி ஒரு பதிவு போடுங்களேன் 🙂

 7. அடுத்த வாரம் வரவிருக்கும் பட்டியலில்…

  1. செரீனா

  2. டி.டி.வி. தினகரன்

  3. குமரிஅனந்தன்

  4. ஜெயசித்ரா

  5. கார்த்திக் ராஜா

  6. வழக்கறிஞர் ஜோதி

  7. பாடகர் மனோ

  8. எல். கனேசன்

  9. பேராயர் எஸ்றா சற்குணம்

  10. தீப்பொறி ஆறுமுகம்

  11. நடிகை மும்தாஜ்

  12. ஆனந்த கீதன்

  13. சுரேஷ் சகரவர்த்தி

  15. எம்.ஜே. ரெகோ

 8. பழூர் கார்த்தி, கானாமல் போன ஹீரோயின்கள் பற்றித் தனியாக எழுதும் ஐடியா இல்லை. கடந்த பின்னூட்டத்திலேயே ஆங்காங்கே நடிகைகளும் இருப்பார்கள்.

  ஒரு சந்தேகம், நீங்கள் பழூர்காரரா? பழுவேட்டரையர்கள் ஆண்ட அதே பழூரா? அந்த ஊர் இல்லை என்றாலும் பெரிய பழுவேட்டரையரின் பெயர் தெரியுமா?

 9. super

 10. Very Important Name to be added.. in the list.. is SERENA (Ex-Girl friend of Mr. Natarajan)…

 11. nice way of pointing at the past. we need to remember all this. keep writing

 12. சார்..அப்படியே நடிகை வினிதா, சந்திராசாமி,ப்ரேமானந்தாசாமி இவர்கள்லெல்லாம் இப்ப என்னவாச்சுனு எழுதுங்க.

 13. […] காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு […]

 14. //பின்குறிப்பு: 12 ஆவது ஆள் யாருன்னு தெரிஞ்சுக்க நீங்க ரொம்ப ஆவலா காத்திருப்பீங்க. ஆனாலும் என்னால அவர இந்தப் பட்டியல்ல சேக்க முடியாது. இந்தப் பதிவைப் பத்தொன்பதாம் தேதிக்கு முன்பு எழுதியிருந்தால் அவரையும் இப்படியலில் சேர்த்திருப்பேன். ஆனால் அன்று தான் அவருக்கு ஹைக்கோர்ட்டில் முட்டையடி வைபவம் நடந்தது.//

  :))

 15. ஜெயமாலா:

  she is the current chairman of karnataka film chambers association. she has handled so many complicated issues for the last one year including kuselan movie release in bangalore.

  ofcourse she is quite famous last week her photo came in all the news papers with kamalhasan and rajinikanth in the 75th year celebration of kannada movie industry,


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.

%d bloggers like this: