நறுக்*
5:30 பிப இல் ஏப்ரல் 1, 2009 | அரசியல், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 5 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: ஃபேண்டா, அரசியல், நறுக்குகள், விமர்சனம்
திருமங்கலம் இடைத் தேர்தல் போல வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பணம் கொடுத்து யாரும் ஜெயிக்க முடியாது.
வை.கோ.
ஆமாங்க, திருமங்கலத்துல குடுத்த மாதிரி குடுத்தா ஜெயிக்க முடியுமா? அதவிட அதிகமா குடுத்துத்தான் ஜெயிக்கனும். வெலவாசி ஏறுதுல்ல…
இலங்கையை 200 ஆண்டுகள் ஆண்ட இங்கிலாந்து நாட்டுக்கு, இலங்கையில் நடக்கும் இனப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய தார்மீகக் கடமை உள்ளது.
பழ. நெடுமாறன்
எதுக்கெடுத்தாலும் தார்மிகம், தார்மிகம்னு சொல்றீங்களே, தார்மிக அடிப்படயில அதக் கொஞ்சம் நிறுத்தக் கூடாதா?
அதிமுக உட்பட எல்லா கட்சிகளுடனும் எங்களுக்கு நல்ல உறவு இருக்கிறது.
அன்புமணி ராமதாஸ்
கூட்டணி வெக்கிற அத்தன பேரும் இதத்தான சொல்றானுவ. வித்தியாசமா எவனாவது கள்ள ஒறவு இருக்குன்னா சொல்றான்?
தனியாகக் கட்சி நடத்த முடியாமல்தான் திமுகவில் இணைகிறோம். இதில் வெட்கப்பட எதுவுமில்லை!
எல். கனேசன்
எல்.ஜி. அண்ணே, பொய் சொல்லக் கூடாது. தனியா கட்சி நடத்த முடியாதாம்ல… கொஞ்ச நாள் பொறுங்க… நீங்க முடியலைன்னு சொன்ன வேலைய புரட்சிப் புயல் கில்லி மாதிரி செய்வாரு பாருங்க…
டாக்டரய்யா ஐந்து வருடங்கள் வேட்டி துவைப்பார், ஐந்து வருடங்கள் சேலை துவைப்பார்.
விஜயகாந்த்
கேப்10, இன்னும் ஹீரோவா நடிச்சு பொதுமக்களத் தொவைக்கிறீங்களே, அத நிறுத்திட்டு இதையெல்லாம் பேசக் கூடாதா… சரி… தேர்தலப் புறக்கணிக்கனும்னு சொன்னீங்களே… மொதோ ஆளா வேட்பாளர் பட்டியல் வெளியிட்டிருக்கீங்க… பல்ல வெளக்குங்க கேப்10… நாறுது…
சுயமரியாதை கொண்ட கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைப்பேன்!
நடிகர் கார்த்திக்
அப்போ நாமக்கட்சி… மன்னிக்கனும், நாடாளும் மக்கள் கட்சி யாரோடயும் கூட்டணி வைக்கப் போறதில்லையா! டேய் மணியா… போற போக்கப் பாத்தா ஊட்டிக்குத் தனியாத்தான் போகனும் போலருக்கே…
காங்கிரஸ் கட்சிக்குத் தொண்டர்கள் இருக்கிறார்கள். ஆனால், வாக்காளர்கள் இல்லை!
லாலு பிரசாத் யாதவ்
அப்புறம் எதுக்குண்ணே அந்த “மூணு சீட்டு” வெளையாட்டு விளையாண்டீங்க… அடுத்த ஸ்டேட்டப் பாருன்னு அப்பவே சொல்லிருக்கலாம்ல!
நாடளுமன்றத் தேர்தலில் தலைமை எந்தத் தொகுதியில் போட்டியிடச் சொல்லுகிறதோ, அந்தத் தொகுதியில் போட்டியிடுவேன்!
மு.க. அழகிரி
ஆக மொத்தம் தலைமை உங்களப் போட்டியிடச் சொல்லியே ஆகனும்னு சொல்றீங்க…
தங்கபாலு என்று யாராவது அரசியலில் இருக்கிறார்களா? எனக்கு அவரைத் தெரியாது!
வை.கோ.
டேய், இங்க வை.கோ., வை.கோ.ன்னு ஒரு மானஸ்தன் இருந்தாருடா… அவரத்தான்டா தேடிக்கிட்டிருக்கேன்…
*ஃபேண்டா ஆப்பிளுக்கும் இந்தப் பதிவுக்கும் யாதொரு தொடர்பும் கிடையாது.
5 பின்னூட்டங்கள் »
RSS feed for comments on this post. TrackBack URI
மறுமொழியொன்றை இடுங்கள்
Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.
நறுக்ஸ் விஜய்ன்னு பேர் மாத்திட வேண்டியதுதான்!
Comment by rajanatarajan— ஏப்ரல் 1, 2009 #
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதயுடன்)
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவன்
உலவு.காம்
Comment by ulavu.com— ஏப்ரல் 1, 2009 #
எப்பொருள் யார்யாருடையதாயினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதே நல்லறிவாகும்.
Comment by Kesava— ஏப்ரல் 2, 2009 #
superb comments
Comment by நித்தில்— ஏப்ரல் 2, 2009 #
Really good !!!
Comment by Mrithula— ஏப்ரல் 3, 2009 #