நான் தமிழன் – குமுதத்தின் கயமை
2:03 பிப இல் ஏப்ரல் 18, 2009 | அரசியல், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 5 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: குமுதம், சாதியம், நான் தமிழன்
நேற்றைய தினம் “குமுதம் – சாக்கடை நதிகளின் மகாசங்கமம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை விரைவில் பதிவிடுவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தேன். கட்டுரைக்கு ஆதாரமாகப் பெரிதும் பயன்பட்டவை மதிமாறன் அவர்களின் கட்டுரைகள். ஆகவே வரைவை எழுதி முடித்து தோழர் மதிமாறன் அவர்களின் கருத்தை அறிவதற்காக மின்னஞ்சலில் அனுப்பி வைத்தேன். அவருடைய தளத்திலேயே வெளியிட முடியுமா? என்று கேட்கும் எண்ணமும் இருந்தது. ஏற்கெனவே என்னுடைய ஒரு கட்டுரையை அவருடைய தளத்தில் வெளியிட்டிருக்கிறார். ஆகவே தொடர்ந்து இது போல் கோரிக்கை வைப்பது முறையாகாது என்ற காரணத்தால் இது குறித்து அவரிடம் கேட்கவில்லை.
இன்று காலை தொலைபேசியில் அழைத்து கட்டுரை சிறப்பாக வந்திருப்பதாகவும், இது பரவலாகப் பலபேரைச் சென்றடைய வேண்டுமென்றும் சொன்னார். தொடர்ந்து இக்கட்டுரையைத் தன்னுடைய தளத்தில் வெளியிடலாமா என்றும் கேட்டார். இருவரின் சிந்தனையும் ஒன்றுபோல் இருந்ததில் மிகவும் மகிழ்ந்தேன்.
மிகப் பொருத்தமான படத்துடன் கட்டுரையை இன்று காலையே பதிவேற்றமும் செய்திருக்கிறார். [குமுதத்தின் கயமை] இந்தத் தொடர்பைச் சொடுக்கினால் மதிமாறன் அவர்களின் தளத்திலுள்ள கட்டுரைக்குச் செல்லலாம். மீண்டும் ஒருமுறை தோழர் மதிமாறன் அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
5 பின்னூட்டங்கள் »
RSS feed for comments on this post. TrackBack URI
மறுமொழியொன்றை இடுங்கள்
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.
அருமையான கட்டுரை,பாராட்டுக்கள். மேலும் நிறைய எழுதுங்கள்.
நித்தில்
Comment by நித்தில்— ஏப்ரல் 18, 2009 #
Comment by tiger— ஏப்ரல் 19, 2009 #
thanks for the article. padippithalum kuttram. padipikkavittalum kuttram.
Comment by venkattan— ஏப்ரல் 19, 2009 #
எப்போது ஆரம்பித்ததோ!
அப்போதே வாங்குவதை நிறுத்திவிட்டேன் தல!
Comment by வால்பையன்— ஏப்ரல் 22, 2009 #
நச்சென்று இருந்தது ,நறுக்கென நாக்கை புடுங்கி கொள்ளும் அளவிற்கு வீரியமான கேள்விகள்
Comment by stalin— மே 1, 2009 #