நக்கீரன் vs. பதிவர்கள் – அட்டைப்பட சர்ச்சை
6:53 பிப இல் மே 24, 2009 | அரசியல், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 15 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: நக்கீரன், பதிவுலகம்
பதிவுலகின் மந்தை மனப்பான்மை தேர்தல் முடிவுகளைப் போலவே பிரபாகரன் கொல்லப்பட்டதாக வந்த பரப்புரையினாலும் அம்பலமாகியிருக்கிறது. இன்று என்ன பதிவு போடலாம் என்று தமிழ்மண முகப்பைப் பார்த்துத்தான் முடிவு செய்கிறார்களோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது.
பிரபாகரன் சடலத்தைக் காட்டுகிற தொலைக்காட்சி செய்தியை அவரே பார்த்து சிரிப்பது போன்ற அட்டைப் படம்தான் தற்போது பதிவர்களால் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. என்னைக் கேட்டால் இதில் நக்கீரனின் தவறு என்று சொல்ல எதுவுமில்லை. தமிழகத்தின் ஏனைய புலனாய்வுப் பத்திரிகைகள் பலவற்றிலும் கருணாநிதியோ அல்லது ஜெயலலிதாவோ போஸ் கொடுத்து சிரித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் நக்கீரன் பத்திரிகை உள்ளிருக்கக் கூடிய கட்டுரைக்குப் பொருத்தமான கருத்துப் படத்தையே அட்டைப் படமாக வெளியிட்டு வரும்.
உதாரனமாக 2004 நாடாளுமன்றத் தேர்தலின் போது ஜெயலலிதா ஹிட்லர் மீசையுடன் இருப்பது போன்ற அட்டைப் படமும், கருணாநிதி புலிகேசி உடையில் வில்லில் அம்பு பொருத்தி நிற்பது போலவும் அட்டைப் படங்கள் வந்திருந்தன. வெகு சமீபத்தில் ராஜபக்ஷே மண்டை ஓட்டு மாலையுடன் போஸ் கொடுப்பது போன்ற படமும் நக்கீரனில் அட்டைப் படமாக வந்திருக்கிறது. பகுத்தறிந்து சிந்திப்பவர்கள் அறிவார்கள், ஜெயலலிதா மீசை ஒட்டிக் கொண்டும், கருணாநிதி புலிகேசி உடையிலும், ராஜபக்ஷே மண்டை ஓட்டு மாலை அணிந்தும் போஸ்கொடுத்து அதை நக்கீரன் புகைப்படமாக எடுத்து வெளியிடவில்லை என்று.
இம்முறையும் அதே போன்று பிரபாகரன், அன்றன் பாலசிங்கத்துடன் உரையாடுகிற படத்தில் சில மாற்றங்களைச் செய்து அட்டைப் படமாக வெளியிட்டது. உணர்ச்சிவசப்பட்ட நிலையிலிருந்த பதிவர்கள் சிலர் இதை உண்மை என்று நம்பி பதிவு போட்டனர். இதில் நக்கீரன் செய்த பொறுக்கித்தனம் என்னவென்று எனக்குத் விளங்கவில்லை. மக்களின் உணர்ச்சியைக் காசாக்குகிறது நக்கீரன் என்று குற்றம் சாட்டுகின்றனர். கடந்த ஐந்து மாதங்களுக்குள் தமிழில் வரும் பெரும்பாலான சஞ்சிகைகளிலும் இலங்கை அல்லது பிரபாகரன் அல்லது புலிகள் குறித்த ஏதாவது ஒரு தொடர் வெளியாகி வருகிறது. இலங்கை என்ற தீவு கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கடலுக்குள்ளிருந்து முளைத்துவிடவில்லை, பிரபாகரனும் புலிகளும் இலங்கை அரசை எதிர்த்து முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். இதற்கு முன்பு இதன் தொடர்பில் தொடர் எழுதாத சஞ்சிகைகள் இப்போது எழுதிவருவது மக்களின் உணர்ச்சிகளைக் காசாக்குகிற கயமை அல்லவா?
தமிழ்ப் புலனாய்வு ஏடுகளில் ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பில் நக்கீரன் தொடர்ந்து துணிச்சலுடன் எழுதி வருகிறது. அந்த வகையில் நக்கீரனோடு ஒப்பிட்டால் விலை போன அல்லது இருட்டடிப்பு செய்கிற பத்திரிகைகளின் செயல்களில்தான் ஊடகப் பொறுக்கித்தனம் அப்பட்டமாகத் தெரிகிறது.
15 பின்னூட்டங்கள் »
RSS feed for comments on this post. TrackBack URI
மறுமொழியொன்றை இடுங்கள்
Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.
மிகவும் நல்ல ஒரு பதிவு!!
இங்கு இலங்கையில் நாம் படும் அல்லல்களை கேட்பார் யாருமில்லை
எமது துயரில் எத்டேனும் ஒரு தரப்பாவது பயன் பெறட்டுமே
Comment by Mal Rmanathan— மே 24, 2009 #
Its very sad…KP confirms VP death…I think it is yet to reach tamil community….Please post on this
http://english.aljazeera.net/news/asia/2009/05/2009524124042406562.html
Comment by Gokul— மே 24, 2009 #
உங்கள் வாதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்..
Comment by தீப்பெட்டி— மே 24, 2009 #
In that picture left side you can see “Gopal” signature. Its like a artist sign in Ad board.
Comment by ahhori— மே 24, 2009 #
மிக சரியாக சொன்னிங்க நான் அந்த பின்னூட்டத்தில் கூட சொன்னேன்..
Comment by suresh— மே 24, 2009 #
//
அந்த வகையில் நக்கீரனோடு ஒப்பிட்டால் விலை போன அல்லது இருட்டடிப்பு செய்கிற பத்திரிகைகளின் செயல்களில்தான் ஊடகப் பொறுக்கித்தனம் அப்பட்டமாகத் தெரிகிறது.
//
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி…இருக்கிற ஊடகங்களில் தேசிய வியாதிகளின் பொய் பரப்புரைகளையும், இனவெறி வாதங்களையும் எதிர்த்து எழுதுவது நக்கீரன் போன்ற சில ஊடகங்களே…
Comment by அதுசரி— மே 25, 2009 #
kayavalikal
Comment by buruhani— மே 25, 2009 #
Here also
http://news.yahoo.com/s/ap/20090524/ap_on_re_as/as_sri_lanka_immortal_rebel
Comment by rajan— மே 25, 2009 #
so u say nakeeran too ***** **** Ok?
did u read the news inside?
Comment by pirbathasan— மே 25, 2009 #
மிகச் சரியான பார்வை.
Comment by குளோபன்— மே 25, 2009 #
You Are Posting Really Great Articles… Keep It Up…
We recently have launched a website called “Nam Kural”… We want the links of your valuable articles to be posted in our website…
தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
http://www.namkural.com.
நன்றிகள் பல…
– நம் குரல்
Comment by Saran— மே 25, 2009 #
//மக்களின் உணர்ச்சியைக் காசாக்குகிறது நக்கீரன் என்று குற்றம் சாட்டுகின்றனர்//
மக்களின் உணர்ச்சியை வாக்குகளாக மாற்ற தமிழகத்தில் உள்ள ஏனைய அரசியல் கட்சிகளும் சென்ற வாரங்களில் முயற்சித்தபோது அவர்களை தாக்கி பதிவுகளை இட்டவர்களைவிட நக்கீரனை குற்றம் சாட்டியவர்களே அதிகம். இதில் விஷயம் என்னவென்றால் பதிவர்களில் பலர் software professionals. Computer graphics மூலம் இப்படம் வரையப்பட்டுள்ளது என்று நிரூபிப்பதால் தங்களுடைய திறமையை தம்பட்டம் அடிக்க ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டுவிட்டனர். computers பொருத்தவரை அவர்கள்தான் authorityயாம்.
Comment by நித்தில்— மே 25, 2009 #
//இலங்கை என்ற தீவு கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கடலுக்குள்ளிருந்து முளைத்துவிடவில்லை//
நச் பதிவு.
இருந்தாலும் நக்கீரனுக்கு இவ்ளோ பெரிய விளம்பரம் தேவையில்லை என்பது (நக்கீரனின் உள் விவகாரங்களை நன்கு அறிந்த ) எனது கருத்து 🙂
Comment by சேவியர்— மே 25, 2009 #
தொழில் ரீதியாக என் தந்தை நக்கீரன் நிருபர்களின் மிரட்டலை நேரடியாகச் சந்தித்தவர் என்ற வகையில் நக்கீரனைக் குறித்த எதிர்க் கருத்துக்கள் எனக்கும் உண்டு. ஆனால் ஈழப் பிரச்சனையில் விலை போகமல் எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் தொடர்ந்து எழுதிவருகிற செயலுக்காகத்தான் இந்த வக்காலத்து. இந்த பதிலை எழுதலாமா வேண்டாமா என்று நீண்ட நேரம் யோசித்தேன். கேட்பது சேவியர் அண்ணன் என்பதால் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்பதற்காகவே இதை எழுதுகிறேன். தங்களைக் காயப்படுத்தாமல் பதில் சொல்லியிருக்கிறேன் என்று நம்புகிறேன். நன்றி
Comment by vijaygopalswami— மே 25, 2009 #
ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்.. நீங்கள் சொல்வது முற்றிலும் சரி
Comment by உழவன்— மே 26, 2009 #