கொடுமை கொடுமைன்னு கும்பகோணத்துக்குப் போனா…

6:01 பிப இல் ஜூன் 11, 2009 | அங்கதம், அரசியல், படங்கள், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 7 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , ,

கொடுமை நடந்த இடம் கும்பகோணம்

[படத்தின் மேல் அழுத்தித் தனிச் சாளரத்தில் பெரிதாகப் பார்க்கலாம்]

கடல்வழிப் போக்குவரத்துத் துறையை காங்கிரசே வைத்துக் கொள்ள முடிவு செய்திருப்பதிலிருந்து ஒரு விஷயம் நன்றாகத் தெரிகிறது. சேது சமுத்திரத் திட்டத்தை கிடப்பில் போடுகிற முயற்சி ஆரம்பமாகிவிட்டது. பாரதிய ஜனதாவுக்கும் காங்கிரசுக்கும் எந்த வேறுபாடுமில்லை என்பதை இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். இது இந்துத்துவ அமைப்புகளை சாந்தப்படுத்தும் முயற்சியாகவே தெரிகிறது.

புள்ளியியல் துறையைக் கொடுத்த போது ஜி.கே. வாசன் என்ன செய்தார் என்று தெரியவில்லை. அந்தத் துறையைக் கையில் வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் என்று அவருக்கே தெரிந்திருக்குமோ தெரியாதோ, யானறியேன். மீண்டும் சேது சமுத்திரத் திட்டத்திற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டால் இவர் டி.ஆர். பாலு அளவுக்கு துணிச்சலாகப் பேசுவாரா என்பதும் சந்தேகமே.

அவர் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவியேற்று டெல்லியிலிருந்து சொந்த ஊருக்கு வந்திருந்த போதுதான் இத்தனை கூத்துக்களும் அரங்கேறியது. பூர்வீக வீடு கபிஸ்தலத்தில் இருந்தாலும் குடந்தை நகரில் அவருக்கு ஒரு கெஸ்ட் ஹவுசும் இருக்கிறது. அந்த வீட்டிற்கு எதிரில்தான் காங்கிரஸ் காரர்கள் கைங்கரியத்தில் இந்த ஃப்ளெக்ஸ் போர்டு எழுந்து நிற்கிறது. இதல்லாமல் குடந்தையிலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலை நெடுகிலும் இவரை வாழ்த்திப் பல்வேறு சுவரொட்டிகள். மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்ட மணிசங்கர ஐயருக்கு எதிராக தமிழமைப்புகளால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளும் காணக் கிடைத்தது. ஓடுகிற பேருந்திலிருந்து அவற்றைப் படமெடுக்க முடியவில்லை.

மந்திரியாகப் பொறுப்பேற்று கோப்புகளைக் கூடப் பார்க்கவில்லை, அதற்குள் “சேது சமுத்திர நாயகனே”, “கப்பலோட்டிய தமிழனே” என்றெல்லாம் சுவரொட்டிகள் முளைக்கத் தொடங்கியிருக்கிறது. இவரது மாநிலங்களவைப் பதவி முடிய இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகள் மட்டுமே உள்ளது. கொடுத்த அசைன்மெண்ட்டை சரியாக முடித்துவிடுவாரோ என்பதுதான் நமக்கிருக்கிற பயமெல்லாம்.

தமிழ்மணத்தில் ஆதரவு வாக்கு

தமிழ்மணத்தில் எதிர் வாக்கு

தமிழீஷ் வாக்கு

7 பின்னூட்டங்கள் »

RSS feed for comments on this post. TrackBack URI

 1. போஸ்டர்ல உங்க பேர்தான் சூப்பரா இருக்கு.
  🙂

 2. டக்ளசண்ணே, இணையத்தில தேடி எடுத்த படம்னா எடுத்த தளத்தோட பேரப் போடுவேன். இது நானே எடுத்த படம்ங்கறதால எம் பேரப் போட்டுக்கிட்டேன்.

 3. என்ன கொடுமை இது..

 4. அதானே? என்ன கொடுமை இது..

 5. கடைசில சேது – சீயான் ஆகாம இருந்தா சரி !

 6. படத்த பார்த்தோன்ன என்னடா வி.கோ நேவில சேந்துட்டார் போல இனி பதிவு எழுதமாட்டாரோன்னு ஒரு நொடி பயந்துட்டேங்க… பதிவ படிக்கும்போதுதான் தெரிஞ்சுது அட நம்ம வாசன் ஐயாவதான் இந்த கெட்டப்ல போட்டி ருக்காங்கன்னு.

  புள்ளியியல் துறையில் கலக்கியவர் இந்த துறையிலும் கலக்கிடுவார் பாருங்க

 7. SETHU CANAL : தமிழகம், மற்றும் இந்தியாவின் முன்னேற்றத்திற்கான எந்த ஒரு திட்டத்தையும், நல்ல மனம் படைத்த பண்பாளர்கள் வரவேற்கவே செய்வார்கள்! ஆனால் உண்மையிலேயே இந்த சேது கால்வாயினால் பலன் இருக்கிறதா?

  How the Canals are useful for Freight transportation: இரண்டு பெரிய கடல் பகுதிகள் ஒரு சிறிய நிலப்பரப்பினால் பிரிந்து இருந்தால், கால்வாயினை வெட்டி அவற்றை ஒன்று சேர்த்து, கப்பல் போக்குவரத்துக்கு வழி செய்வது மற்ற இடங்களிலும் நடை பெற்று உள்ளது!

  உதாரணமாக கி. பி. 1914 வரை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து சான் பிரான்ஸ்சிஸ்கொ நகரை அடைய கப்பல்கள் முழு தென் அமெரிக்கா கண்டத்தையும் சுற்றி கேப் ஹோர்ன் முனை வழியாக 22,500 கி. மீ. வரை சுற்றி செல்ல வேண்டியிருந்தது! வட அமெரிக்க மற்றும் தென் அமெரிக்க கண்டங்களுக்கு நடுவில் பநாமா கால்வாய் வெட்டப் பட்டதால், பயண தூரம் 13,000 கி.மீ. குறைந்தது! இப்போது கப்பல்கள் 9,500 கி.மீ. பயணம் செய்தால் நியூயார்க் நகரில் இருந்து சான் பிரான்ஸ்சிஸ்கொ நகரை அடையலாம்!

  அதைப் போல, மத்திய தரை கடலையும், செங்கடலையும் இணைக்கும் ஸூயெஸ் கால்வாய் கட்டப் பட்டதால் 20,000 கிலோ மீடர் கால் பயணம் மீட்சம் ஆனது- இல்லையெனில் ஐரோப்பியாவிலிருந்து ஆசியா வர முழு ஆப்ரிக்க கண்டத்தையும் சுற்றி வர வேண்டும்- வாஸ்கொடகாமவைப் போல! இந்த பின்னணியில் நம்முடைய சேது கால்வாய் திட்டத்தின் சாதகங்களை ஆறாய்வோமா?

  மற்ற கால்வாய்கள் எல்லாம் 13,000 கி.மீ பயண மிச்சம் தரும் போது, சேது கால்வாய் வெறும் 650 கி.மீ. மட்டுமே பயண தூரத்தைக் குறைக்கிறது! மேலும் கால்வாய் வழியே பயணம் செய்வது, பெருங் கடலில் பயணம் செய்வதை விட அதிக ரிஸ்க் ஆனதும், கடினம் ஆனதும் ஆகும்!

  எனவே மாலுமிகள் வெறும் 650 கி. மீ. மிச்சம் செய்ய, ஆழ்கடலில் பயணம் செய்வதை விடுத்து, குறுகிய சந்து போன்ற கால்வாய் வழியாக செல்ல விரும்புவார்களா? இது சம்பந்தமாக சர்வதேச மாலுமிகளிடம் கருத்து கேட்டுப் பெறப்பட்டதா? வெறுமனே கால்வாயை வெட்டி விட்டு உட்கார்ந்தால் போதுமா?

  ஒரு நாளில் எத்தனை கப்பல்கள் இந்த கால்வாய் வழியே செல்லப் போகின்றன? 4000 கோடி செலவு என்றால், ஒரு வருடத்திற்கு குறைந்த பட்சம் 360 கோடி வருமானம் ஆவது வர வேண்டாமா? அதாவது ஒரு நாளைக்கு 1 கோடி ரூபாய் வர வேண்டும்! அதற்க்கு ஒரு நாளைக்கு 50க்கும் மேற்ப்பட்ட கப்பல்கள் செல்ல வேண்டும்! ஒரு மாதத்திற்காவது, 50 கப்பல்கள் செல்லுமா?

  Does the proposed Sethu Canal situated in any Major Sea Route ?

  சர்வதேச போக்குவரத்தை ஆராய்ந்தால், இன்றைய தினம் உலகின் முக்கிய கப்பல் போக்குவரத்து எங்கே நடக்கிறது?

  உலகின் முன்னணி உற்ப்பத்தி கேந்திரங்கலான, ஷாங்காய், தாய்வான், சிங்கப்போர், மலேசியா, கொரியா இந்த நாடுகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் மேற்கு திசையில் உள்ள ஐரோப்பிய நாடுகள், வளைகுடா நாடுகள், ஆப்ரிக்கா, இவற்றுக்கு செல்ல வேண்டும்! இதற்கான கடல் வழி என்ன?

  சீனா மலேசியா, கொரியா போன்ற நாடுகளில் இருந்து ஆப்பிரிக்க, மத்திய கிழக்கு, மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் கப்பல்களுக்கு, இந்த சந்து கால்வாய்க்குல், புகுந்து செல்ல வேண்டிய அளவுக்கு பயண நேரமும், தூரமும் வித்தியாசம் இல்லை!

  ஷாங்காய், தாய்வான், சிங்கப்போர், மலேசியா, கொரியா நாடுகளில் இருந்து புறப்படும் கப்பல்கள், நிகொபார் தீவுகளுக்கும், இந்தோணேசியவிற்க்கும் இடையே உள்ள கடல் பகுதி வழியே இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு வருகின்றன! அங்கிருந்து அரபி கடல் பகுதி செல்ல, ஸ்ரீலங்காவின் தென் முனை வழி யாக செல்வது கிட்டத்தட்ட ஒரு கிடை மட்ட நேர்கோடு (Horizontal straight line)வழியாகும்! அதை விட்டு விட்டு, கப்பல் தலைவர்கள், மேல் நோக்கி வங்காள விரிகுடா வந்து, யாழ்ப்பாண தீபகற்பத்தை சுற்றிக் கொண்டு, சேது கால்வாயில் நுழைந்து, இந்திய தீபகற்பத்தின் தென் முனை ஐயும் சுற்றி கொண்டு அரபிக் கடலில் நுழையும் வழியில் (circutous and inconvenient route) வர வேண்டிய அவசியம் என்ன? இலவசமாக பயணம் செய்ய அனுமதித்தால் கூட சேது கால்வாய் அவர்களுக்கு உபயோகப் படுமா?

  எனவே மிக முக்கியமாக மாலுமிகளிடம் கருத்து கேட்காமல், பூகோள காரணங்களை நோக்காமல், நமக்கு பெயர் வர வேண்டும் என செயலில் ஈடுபடலாமா? 4000 கோடி கொட்டி, வெட்டியாக கால்வாய் வெட்ட வேண்டுமா?

  What is the effect of this canal in freight movement within India :

  Even if we consider the ship traffic within India:

  இந்தியாவின் கிழக்கு மற்றூம் மேற்கு கரைகளுக்கு இடையே பெரிய கப்பல் போக்குவரத்து ஓன்றும் கிடையாது!இந்தியாவின் மேற்க்கு கரையில் இருந்து, கிழக்கு கரைக்கு கப்பல் மூலம் சரக்குப் போக்குவரத்து செய்ய வேண்டிய அவசியமே இல்லை. இந்தியா மக்கள் தொகையில், பெரிய நாடாக இருந்தாலும், சிறிய நிலப் பரப்பு உடையது! Russia , USA , CHINA போன்ற நாடுகளுடன் ஒப்பிட்டால், இந்தியாவின் நிலப் பரப்பு மிகவும் சிறியது! சாலை மற்றூம் இருப்புப் பாதை போக்குவரத்தே, சாலச் சிறந்தது!

  ஒரு நாள் காலையில் சரக்கு யெற்றி அனுப்பினால், அடுத்த நாள் காலையில் போய் சேர்ந்து விடும்! சரக்குப் போக்குவரத்து துறையில் இருப்பவர்களுக்கு இது நன்றாக தெரியும். மக்களுக்கு , தொலில் செய்பவருக்கு, வியாபாரிகளுக்கு, சரக்குப் போக்குவரத்து துறையில் இருப்பவர்களுக்கு எந்தப் பயனும் இல்லாதபோது, எதற்க்கு அரசாங்கப் பணத்தை வீணடிக்க வேண்டும்?

  மும்பை துறைமுகத்தில் 2005ம் ஆண்டு, உள்நாட்டுப் கப்பல் சரக்குப் போக்குவரத்து 35% ஆக இருந்தது- 2007ல் 27% ஆக குறைந்து விட்டது!

  முக்கிய நகரங்கள் டில்லி, பங்களூரு, ஐதராபாத் இவை சாலை மற்றும், இருப்பு பாதைகளையே உபயாகப் படுத்த முடியும்! மேலும் மும்பை போன்ற நகரங்களில் இருந்து வைசாக், கல்கட்டா போன்ற கிழக்கு நகரங்களுக்கும் சாலை மற்றும் இருப்பு பாதையே அதிகம் உபயோகப் படுகிறது! மும்பையில் இருந்து சரக்குகள் வைசாக் செல்ல – ஆலையில் இருந்து ஒரே நாளில் சாலை வழியே சென்று விடலாம்!
  ஆனால் கப்பலை உபயோகப் படுத்தினால்,
  1)முதலில் ஆலையில் சரக்கை லாரியில் ஏற்ற வேண்டும்
  2) சரக்கு வூர்தி வழியாக மும்பை துறை முகம் கொன்டு சென்று, அங்கே இறக்க வேண்டும்!
  3)பிறகு மும்பை துறைமுகத்தில் கப்பலில் ஏற்ற வேண்டும்.

  4) பிறகு வைசாக் துறைமுகத்தில் திரும்பி சரக்கை இறக்க வேண்டும்.
  5) வைசாக் துறைமுகத்தில் லாரியில் யெற்ற வேண்டும்!
  6) இறுதியில் சரக்கை லாரியில் இருந்து சேரும் இடத்தில் இறக்க வேண்டும்

  இதுக்கே தலை ஸுத்தூதே!

  Is there any scope of economic prosperity for Tutucorin, southern Tamil nadu or India due to this canal?

  ஐயா, தயவு செய்து தென் மாவட்டங்களிலும், தூத்துக்குடியிலும் தொழில் வளர்சி உண்டாக வழியைப் பாருங்கள்! இப்போது இந்தக் கால்வாயை வெட்டியதால் தூத்துக்குடிக்கும், தென் மாவட்டங்களுக்கும் எப்படி வளார்ச்சி உண்டாகும்? நாங்கள் இங்கே இருந்து எந்தப் பொருளை யெற்றுமதி செய்யப் போகிரோம்? ஏற்றுமதி செய்யப் படுவது எல்லாம் மேற்கு திசை நாடுகளுக்கு தான்! அந்த கடல் வழிக்கும், இந்தக் கால்வாய்க்கும் என்ன சமபந்தம்? தூத்துக்குடி துறைமுகத்தில் 75% இறக்குமதி தான்! அதிலும் பெரும்பங்கு அனல் மின் நிளயத்துக்கான நிலக்கரிதான்! அந்த நிலக்கரியை கொண்டு வரும் கப்பல்கள், ஏறத் தாள 600km பயண மீட்ச்ம் அடையும்! இதைத் தவிர ஒரு பயனும் இல்லை! ஏற்கனவே வரும் நிலக்கரி தான்! இதனால் எங்களுக்கு எப்படி வேலை வாய்ப்பு பெருகும்? எப்படி வள்ர்சி அடையப் போகிரோம்!

  NOIDA,டில்லி, பங்களூரு,ஐதராபாத், COIMBATORE , TIRUPPUR போன்ற நகரங்கள் துறைமுகம் கூட இல்லாமல் உள்ளன! ஆனால் இந்த நகரங்கள் பெரிய தொழில் வளர்ச்சி அடைந்தது எப்படி? அதே நேரத்தில் கொச்சின், VIZAG, பாரதீப் போன்ற, மிகப் பெரிய துறை முகங்களை உடைய நகரங்கள், தொழில் வளர்ச்சி இல்லாமல் உள்ளன!!!!!! எனவே தொழில் வளர்ச்சிக்கு, மக்கள் வூக்கம், திறமை, ஆக்கம் இவைதான் முக்கியமே தவிர வெறும் கால்வாய் வெட்டுவதால் என்ன பயன் ? இப்போது இந்த காள்வாயினை வெட்டி முடித்த பின் தூத்துக்குடியலிரிந்து, ஸிஂங்கபுர், மலேசியா, ஷங்காய் போன்ற நாடுகளுக்கு கார், டி.வி இவற்றை யெற்றுமதி செய்யப் போகிரோமா? யெதற்கு மக்களை ஏமாற்ற வேண்டும்? தூத்துக்குடிக்கு முதல் தேவை தொழில் வளம்! அதற்க்கு தேவை டைடாநீயம் போன்ற ஆலைகள்! அதில், நிலத்தை அடி மாட்டு விலைக்கு விற்க தரகு வேலை பார்த்ததால், மக்கள் விரட்டி விட்டனர்!

  ஐரோப்பிய நாடுகளை எடுத்துக் கொண்டால், நான்கு பகுதியிலும் நிலத்தால் சூழப்பட்டுள்ள ஜெர்மனியின் கடல் பகுதி மிகவும் சிறியது. ஆனால், போர்ச்சுகல், ஸ்பெயின் நாடுகள் மிகப் பெரிய கடற்கரையை வைத்து இருந்தும் என்ன உபயோகம்? உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தி, ஐரோப்பாவின் மிகப் பெரிய பொருளாதார சக்தியாக ஜெர்மனி திகழ்கிறது.

  இப்படி தேவை இல்லாத, மக்களுக்கு உபயோகம் இல்லாத திட்டங்களில் பெரும் பணத்தை முதலீடு செய்ததால்தான் இன்றைக்கு உலகமே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது

  இந்த பாலத்தை மேடுருட்டி வீதி சமைத்தால், பாக் ஜலசந்திக்கு இரண்டு பக்கமும் உள்ள தமிழர்கள் வாழ்வில் வளம் கொழிக்கும். 20 நிமிடத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து சரக்கு லாரிகள் யாழ்ப்பாணம் சென்று விடலாம். ஈழத் தமிழருக்கும் நல்லது- இந்தியத் தமிழருக்கும் நல்லது.

  பாலத்தை தமிழர் வாழ்வில் வளம் கொழிக்க மேடுபடுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது.

  SETHU CANAL : தமிழகம், மற்றும் இந்தியாவின் முன்னேற்றத்திற்கான எந்த ஒரு திட்டத்தையும், நல்ல மனம் படைத்த பண்பாளர்கள் வரவேற்கவே செய்வார்கள்! ஆனால் உண்மையிலேயே இந்த சேது கால்வாயினால் பலன் இருக்கிறதா?

  How the Canals are useful for Freight transportation: இரண்டு பெரிய கடல் பகுதிகள் ஒரு சிறிய நிலப்பரப்பினால் பிரிந்து இருந்தால், கால்வாயினை வெட்டி அவற்றை ஒன்று சேர்த்து, கப்பல் போக்குவரத்துக்கு வழி செய்வது மற்ற இடங்களிலும் நடை பெற்று உள்ளது!

  உதாரணமாக கி. பி. 1914 வரை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து சான் பிரான்ஸ்சிஸ்கொ நகரை அடைய கப்பல்கள் முழு தென் அமெரிக்கா கண்டத்தையும் சுற்றி கேப் ஹோர்ன் முனை வழியாக 22,500 கி. மீ. வரை சுற்றி செல்ல வேண்டியிருந்தது! வட அமெரிக்க மற்றும் தென் அமெரிக்க கண்டங்களுக்கு நடுவில் பநாமா கால்வாய் வெட்டப் பட்டதால், பயண தூரம் 13,000 கி.மீ. குறைந்தது! இப்போது கப்பல்கள் 9,500 கி.மீ. பயணம் செய்தால் நியூயார்க் நகரில் இருந்து சான் பிரான்ஸ்சிஸ்கொ நகரை அடையலாம்!

  அதைப் போல, மத்திய தரை கடலையும், செங்கடலையும் இணைக்கும் ஸூயெஸ் கால்வாய் கட்டப் பட்டதால் 20,000 கிலோ மீடர் கால் பயணம் மீட்சம் ஆனது- இல்லையெனில் ஐரோப்பியாவிலிருந்து ஆசியா வர முழு ஆப்ரிக்க கண்டத்தையும் சுற்றி வர வேண்டும்- வாஸ்கொடகாமவைப் போல! இந்த பின்னணியில் நம்முடைய சேது கால்வாய் திட்டத்தின் சாதகங்களை ஆறாய்வோமா?

  மற்ற கால்வாய்கள் எல்லாம் 13,000 கி.மீ பயண மிச்சம் தரும் போது, சேது கால்வாய் வெறும் 650 கி.மீ. மட்டுமே பயண தூரத்தைக் குறைக்கிறது! மேலும் கால்வாய் வழியே பயணம் செய்வது, பெருங் கடலில் பயணம் செய்வதை விட அதிக ரிஸ்க் ஆனதும், கடினம் ஆனதும் ஆகும்!

  எனவே மாலுமிகள் வெறும் 650 கி. மீ. மிச்சம் செய்ய, ஆழ்கடலில் பயணம் செய்வதை விடுத்து, குறுகிய சந்து போன்ற கால்வாய் வழியாக செல்ல விரும்புவார்களா? இது சம்பந்தமாக சர்வதேச மாலுமிகளிடம் கருத்து கேட்டுப் பெறப்பட்டதா? வெறுமனே கால்வாயை வெட்டி விட்டு உட்கார்ந்தால் போதுமா?

  ஒரு நாளில் எத்தனை கப்பல்கள் இந்த கால்வாய் வழியே செல்லப் போகின்றன? 4000 கோடி செலவு என்றால், ஒரு வருடத்திற்கு குறைந்த பட்சம் 360 கோடி வருமானம் ஆவது வர வேண்டாமா? அதாவது ஒரு நாளைக்கு 1 கோடி ரூபாய் வர வேண்டும்! அதற்க்கு ஒரு நாளைக்கு 50க்கும் மேற்ப்பட்ட கப்பல்கள் செல்ல வேண்டும்! ஒரு மாதத்திற்காவது, 50 கப்பல்கள் செல்லுமா?

  Does the proposed Sethu Canal situated in any Major Sea Route ?

  சர்வதேச போக்குவரத்தை ஆராய்ந்தால், இன்றைய தினம் உலகின் முக்கிய கப்பல் போக்குவரத்து எங்கே நடக்கிறது?

  உலகின் முன்னணி உற்ப்பத்தி கேந்திரங்கலான, ஷாங்காய், தாய்வான், சிங்கப்போர், மலேசியா, கொரியா இந்த நாடுகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் மேற்கு திசையில் உள்ள ஐரோப்பிய நாடுகள், வளைகுடா நாடுகள், ஆப்ரிக்ா, இவற்றுக்கு செல்ல வேண்டும்! இதற்கான கடல் வழி என்ன?

  சீனா மலேசியா, கொரியா போன்ற நாடுகளில் இருந்து ஆப்பிரிக்க, மத்திய கிழக்கு, மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் கப்பல்களுக்கு, இந்த சந்து கால்வாய்க்குல், புகுந்து செல்ல வேண்டிய அளவுக்கு பயண நேரமும், தூரமும் வித்தியாசம் இல்லை!

  ஷாங்காய், தாய்வான், சிங்கப்போர், மலேசியா, கொரியா நாடுகளில் இருந்து புறப்படும் கப்பல்கள், நிகொபார் தீவுகளுக்கும், இந்தோணேசியவிற்க்கும் இடையே உள்ள கடல் பகுதி வழியே இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு வருகின்றன! அங்கிருந்து அரபி கடல் பகுதி செல்ல, ஸ்ரீலங்காவின் தென் முனை வழி யாக செல்வது கிட்டத்தட்ட ஒரு கிடை மட்ட நேர்கோடு (Horizontal straight line)வழியாகும்! அதை விட்டு விட்டு, கப்பல் தலைவர்கள், மேல் நோக்கி வங்காள விரிகுடா வந்து, யாழ்ப்பாண தீபகற்பத்தை சுற்றிக் கொண்டு, சேது கால்வாயில் நுழைந்து, இந்திய தீபகற்பத்தின் தென் முனை ஐயும் சுற்றி கொண்டு அரபிக் கடலில் நுழையும் வழியில் (circutous and inconvenient route) வர வேண்டிய அவசியம் என்ன? இலவசமாக பயணம் செய்ய அனுமதித்தால் கூட சேது கால்வாய் அவர்களுக்கு உபயோகப் படுமா?

  எனவே மிக முக்கியமாக மாலுமிகளிடம் கருத்து கேட்காமல், பூகோள காரணங்களை நோக்காமல், நமக்கு பெயர் வர வேண்டும் என செயலில் ஈடுபடலாமா? 4000 கோடி கொட்டி, வெட்டியாக கால்வாய் வெட்ட வேண்டுமா?

  What is the effect of this canal in freight movement within India :

  Even if we consider the ship traffic within India:

  இந்தியாவின் கிழக்கு மற்றூம் மேற்கு கரைகளுக்கு இடையே பெரிய கப்பல் போக்குவரத்து ஓன்றும் கிடையாது!இந்தியாவின் மேற்க்கு கரையில் இருந்து, கிழக்கு கரைக்கு கப்பல் மூலம் சரக்குப் போக்குவரத்து செய்ய வேண்டிய அவசியமே இல்லை. இந்தியா மக்கள் தொகையில், பெரிய நாடாக இருந்தாலும், சிறிய நிலப் பரப்பு உடையது! Russia , USA , CHINA போன்ற நாடுகளுடன் ஒப்பிட்டால், இந்தியாவின் நிலப் பரப்பு மிகவும் சிறியது! சாலை மற்றூம் இருப்புப் பாதை போக்குவரத்தே, சாலச் சிறந்தது!

  ஒரு நாள் காலையில் சரக்கு யெற்றி அனுப்பினால், அடுத்த நாள் காலையில் போய் சேர்ந்து விடும்! சரக்குப் போக்குவரத்து துறையில் இருப்பவர்களுக்கு இது நன்றாக தெரியும். மக்களுக்கு , தொலில் செய்பவருக்கு, வியாபாரிகளுக்கு, சரக்குப் போக்குவரத்து துறையில் இருப்பவர்களுக்கு எந்தப் பயனும் இல்லாதபோது, எதற்க்கு அரசாங்கப் பணத்தை வீணடிக்க வேண்டும்?

  முக்கிய நகரங்கள் டில்லி, பங்களூரு, ஐதராபாத் இவை சாலை மற்றும், இருப்பு பாதைகளையே உபயாகப் படுத்த முடியும்! மேலும் மும்பை போன்ற நகரங்களில் இருந்து வைசாக், கல்கட்டா போன்ற கிழக்கு நகரங்களுக்கும் சாலை மற்றும் இருப்பு பாதையே அதிகம் உபயோகப் படுகிறது! மும்பையில் இருந்து சரக்குகள் வைசாக் செல்ல – ஆலையில் இருந்து ஒரே நாளில் சாலை வழியே சென்று விடலாம்! ஆனால் கப்பலை உபயோகப் படுத்தினால், முதலில் சரக்கு வூர்தி வழியாக துறை முகம் கொன்டு சென்று, அங்கே இறக்க வேண்டும்! பிறகு கப்பலில் ஏற்ற வேண்டும்.

  பிறகு துறைமுகத்தில் திரும்பி இறக்க வேண்டும். திரும்பி Lorry இல் யெற்ற வேண்டும்! இதுக்கே தலை ஸுத்தூதே! இந்த கால்வாய் தண்டம்! உபயோகம் இல்லை!!!

  Is there any scope of economic prosperity for Tutucorin, southern Tamil nadu or India due to this canal?

  ஐயா, தயவு செய்து தென் மாவட்டங்களிலும், தூத்துக்குடியிலும் தொழில் வளர்சி உண்டாக வழியைப் பாருங்கள்! இப்போது இந்தக் கால்வாயை வெட்டியதால் தூத்துக்குடிக்கும், தென் மாவட்டங்களுக்கும் எப்படி வளார்ச்சி உண்டாகும்? நாங்கள் இங்கே இருந்து எந்தப் பொருளை யெற்றுமதி செய்யப் போகிரோம்? ஏற்றுமதி செய்யப் படுவது எல்லாம் மேற்கு திசை நாடுகளுக்கு தான்! அந்த கடல் வழிக்கும், இந்தக் கால்வாய்க்கும் என்ன சமபந்தம்? தூத்துக்குடி துறைமுகத்தில் 75% இறக்குமதி தான்! அதிலும் பெரும்பங்கு அனல் மின் நிளயத்துக்கான நிலக்கரிதான்! அந்த நிலக்கரியை கொண்டு வரும் கப்பல்கள், ஏறத் தாள 600km பயண மீட்ச்ம் அடையும்! இதைத் தவிர ஒரு பயனும் இல்லை! ஏற்கனவே வரும் நிலக்கரி தான்! இதனால் எங்களுக்கு எப்படி வேலை வாய்ப்பு பெருகும்? எப்படி வள்ர்சி அடையப் போகிரோம்!

  NOIDA,டில்லி, பங்களூரு,ஐதராபாத், COIMBATORE , TIRUPPUR போன்ற நகரங்கள் துறைமுகம் கூட இல்லாமல் உள்ளன! ஆனால் இந்த நகரங்கள் பெரிய தொழில் வளர்ச்சி அடைந்தது எப்படி? அதே நேரத்தில் கொச்சின், VIZAG, பாரதீப் போன்ற, மிகப் பெரிய துறை முகங்களை உடைய நகரங்கள், தொழில் வளர்ச்சி இல்லாமல் உள்ளன!! எனவே தொழில் வளர்ச்சிக்கு, மக்கள் வூக்கம், திறமை, ஆக்கம் இவைதான் முக்கியமே தவிர வெறும் கால்வாய் வெட்டுவதால் என்ன பயன் ?

  இப்போது இந்த காள்வாயினை வெட்டி முடித்த பின் தூத்துக்குடியலிரிந்து, ஸிஂங்கபுர், மலேசியா, ஷங்காய் போன்ற நாடுகளுக்கு கார், டி.வி இவற்றை யெற்றுமதி செய்யப் போகிரோமா? யெதற்கு மக்களை ஏமாற்ற வேண்டும்? தூத்துக்குடிக்கு முதல் தேவை தொழில் வளம்! அதற்க்கு தேவை டைடாநீயம் போன்ற ஆலைகள்! அதில், நிலத்தை அடி மாட்டு விலைக்கு விற்க தரகு வேலை பார்த்ததால், மக்கள் விரட்டி விட்டனர்!

  ஐரோப்பிய நாடுகளை எடுத்துக் கொண்டால், நான்கு பகுதியிலும் நிலத்தால் சூழப்பட்டுள்ள ஜெர்மனியின் கடல் பகுதி மிகவும் சிறியது. ஆனால், போர்ச்சுகல், ஸ்பெயின் நாடுகள் மிகப் பெரிய கடற்கரையை வைத்து இருந்தும் என்ன உபயோகம்? உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தி, ஐரோப்பாவின் மிகப் பெரிய பொருளாதார சக்தியாக ஜெர்மனி திகழ்கிறது.

  இப்படி தேவை இல்லாத, மக்களுக்கு உபயோகம் இல்லாத திட்டங்களில் பெரும் பணத்தை முதலீடு செய்ததால்தான் இன்றைக்கு உலகமே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது

  இந்த பாலத்தை மேடுருட்டி வீதி சமைத்தால், பாக் ஜலசந்திக்கு இரண்டு பக்கமும் உள்ள தமிழர்கள் வாழ்வில் வளம் கொழிக்கும். 20 நிமிடத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து சரக்கு லாரிகள் யாழ்ப்பாணம் சென்று விடலாம். ஈழத் தமிழருக்கும் நல்லது- இந்தியத் தமிழருக்கும் நல்லது.

  பாலத்தை தமிழர் வாழ்வில் வளம் கொழிக்க மேடுபடுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.

%d bloggers like this: