என்னமோ போடா மாதவா – 13/06/2009
12:11 முப இல் ஜூன் 14, 2009 | அங்கதம், அரசியல், நகைச்சுவை, விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 12 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: செய்தி ஊடகம், சோப்பு விளம்பரம், தமிழ்நாடு போலீஸ், மார்க்சிஸ்ட், மூட நம்பிக்கை
தமிழ்நாட்டுல ஏனய்யா காமெடி பண்றீங்க…
என்னமோப்பா, இந்த மார்க்சிஸ்ட் காரங்களுக்கு எதுக்கெடுத்தாலும் போராட்டம் நடத்தலைன்னா தூக்கமே வராது போல இருக்கு. நிலச் சிக்கல்னாலும் போராட்டம் நடத்துவாங்க, மலச்சிக்கல்னாலும் போராட்டம் நடத்துவாங்க. இன்னிக்கும் ஒரு போராட்டம் நடத்திருக்காங்க. கேரளா கவர்னர் கேரளா அமைச்சர் ஒருத்தர் மேல வழக்குத் தொடுக்கலாம்னு சிபிஐக்கு அனுமதி குடுத்தாராம். அது ஒரு குத்தமாம், தோழர்கள் குளத்துல… மன்னிக்கனும் களத்தில குதிச்சுட்டாங்க. ஏம்ப்பா, அவரு அனுமதிதானே குடுத்தாரு, தீர்ப்பா குடுத்துட்டாரு? நீ எப்படி அனுமதி குடுக்கலாம்னு இங்கேர்ந்தே போராடுனா, கேரளாவுல இருக்குற கவர்னருக்கு எப்படித் தெரியும், கேரளாவுலயே போய் போராடலாம்ல, அங்க உங்க கவர்மெண்ட்தானே நடக்குது. ஏன் தமிழ்நாட்டுல உக்காந்துக்கிட்டு காமெடி பண்றீங்க.
ஸ்ஸ்ஸப்பா… முடியலடா…
தமிழகத்தின் “நம்பர் ஒன்” தலைவலி சன் டிவியில உண்மைய அலசுற ஒரு நிகழ்ச்சியப் பாத்தேன். ஒரு கோயிலப் பத்தி விரிவா அலசிக்கிட்டிருந்தாங்க. அந்த கோயில்ல இருக்கற சாமி யார் கனவுலயாவது வந்து எனக்கு ஏகே-47 வச்சு பூசை பண்ணு, மண்ண வச்சு பூசை பண்ணு சாணிய வச்சு பூசை பண்ணுன்னு வித விதமா சொல்லுமாம். அதே மாதிரி அவுங்களும் வச்சு பூச பண்ணுவாங்களாம். அப்படிப் பண்ணுனா இந்திரா காந்தி கொலைலேந்து, சுனாமி வரைக்கும் ஹைலெவல்ல ஏதாவது முக்கியமான நிகழ்ச்சி நடக்குமாம். இந்தக் கோயில்ல ஏகே-47 வச்சு பூசை பண்ணுனதாலதான் இலங்கையில தமிழினம் பூண்டோடு அழிந்து வருகிறதாம். ஸ்ஸ்ஸப்பா… முடியலடா….
விட்டா வெளிக்குப் போறதக் கூடக் காட்டுவானுவ…
தொலைக்காட்சியில சென்னையில கடந்த வாரம் துண்டு துண்டா வெட்டப்பட்டு வெவ்வேற இடங்கள்ள வீசப்பட்டவரப் பத்திய செய்தி போயிக்கிட்டிருந்துச்சு. கேட்கும் போதே பகீர்னு இருக்கு. ஆனா தமிழ்நாட்டு செய்தி அலைவரிசை ஒன்னுல துண்டா வெட்டப்பட்ட அவருடைய கைகள காட்சியாவே காட்டினாங்க. இதல்லாம வாரமிருமுறை வற்ற புலணாய்வு ஏடு ஒன்றும் இடுப்புக்குக் கீழுள்ள அந்த சடலத்தின் பாககங்களைப் படமாக வெளியிட்டிருந்தது. இதுங்கள எல்லாம் என்ன சொல்லுறது.
டேய், நீ மயிருன்னா நான் ஆளு மயிரு
பயப்படாதீங்க. கடந்த வாரம் ஊர்ல இருந்தப்ப ஒன்வேல வந்த ஒருத்தரிடம் டிராபிக் கான்ஸ்டபிள் ஒருவர் சொன்ன பஞ்ச் டயலாக் இது. ஒன்வேல வந்தவர் வெளியூர் ஆள், வண்டி உறவினரிடம் இரவல் வாங்கியதாம். லைசென்சில் இருக்கிற தன்னுடைய முகவரியைக் காட்டியும் “ஆளு ம**” கேட்பதாக இல்லை. இத்தனைக்கும் அந்த வண்டி ஓட்டி செய்த தவறு வேறு ஒன்றுமில்லை. வண்டியை நிறுத்த சொன்னதும் நிறுத்தி சாவியை எடுத்துப் பையில் போட்டுக் கொண்டார். “ஆளு ம**” கையில் சாவி கிடைத்திருந்தால் ராத்திரி கட்டிங்கிற்கு துட்டு தேறியிருக்கும். அது கிடைக்காத வயித்தெறிச்சலோ என்னவோ. முக்கியமான விஷயம் என்னன்னா “டேய், உன்னால என்ன புடுங்க முடியும். என் பேரு கண்ணன், நம்பர் 181” என்றும் கர்ஜித்தார். சம்பவம் நடந்த இடம் குடந்தை டைமண்ட் தியேட்டர் இறக்கம். இதையெல்லாம் கவனித்த எனக்கு ஆ.ம.வுக்கு அனஸ்தீசியா இல்லமலே குடும்பக் கட்டுப்பாடு பண்ணலாமா என்னுமளவுக்குக் கொலை வெறியாகிவிட்டது. உடனிருந்த என் தம்பி சமாதானம் செய்ததால் ஆ.ம. பிழைத்தது.
எல்லாம் ஒரு வெளம்பரந்தான்
ஒரு சோப்பு வெளம்பரம். அம்மா மகளக் கூப்பிட்டு சோப்பு வாங்கியாரச் சொல்றா. மகளும் போறா. திடீர்னு அம்மா பதட்டமாகிடுறா, என்ன சோப்பு வாங்கனும்னு சொல்லி உடலியாம். தெருவெல்லாம் தேடி அலைஞ்சு வீட்டுக்குத் திரும்பி வந்து பாத்தா, பொன்னு பாத்ரூம்ல குளிச்சிக்கிட்டிருக்கறா. “பவித்திரா” ன்னு சத்தமா கூப்புடுறா. ஹமாம் சோப்போட பவித்திராவோட கையும் முகமும் மட்டும் பாத்ரூம் கதவுக்கு வெளிய தெரியுது. அப்பத்தான் அம்மாகாரி வயித்தில பால் வார்த்த மாதிரி இருக்குது. அந்த அம்மாகாரிய நான் பாக்கனும், ஒரு முக்கியமான விஷயம் கேக்கனும். “அடிங் கொய்யாலே, அந்தப் பவித்திரா கிட்ட குளிக்கிற சோப்பா தொவைக்கிற சோப்பான்னு மொதல்ல சொல்லி உட்டியா? அதையே சொல்லாம, உனக்கு எதுக்கு இந்த பில்டப்பு?”
12 பின்னூட்டங்கள் »
RSS feed for comments on this post. TrackBack URI
மறுமொழியொன்றை இடுங்கள்
Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.
சூப்பர்:-))))))))))))
Comment by துளசி கோபால்— ஜூன் 14, 2009 #
தந்தை பெரியாரைப் பற்றிப் படிக்கையில், பொது வாழ்க்கைல இருக்கும்போது நம்மள கைது பண்ண போலீசு வந்தா நாம அவங்களுக்கு எந்தவிதமான எதிர்ப்பும் காட்டாமல், மாறாக அவங்களோட ஒத்துழைக்கனும் சொல்லியிருந்தார். ஆனா இப்போ நடப்பதென்ன, ஒருத்தர், ஐயோ கொல பண்றாங்கன்னு ஊர கூட்டினார், நீதிமன்ற தீர்ப்ப காட்டி 3 மாணவிகள உயிரோடு கொளுத்தினாங்க, இப்ப விசாரன பண்ணலாம்னு அனுமதி கொடுத்ததுக்கே இங்க ஆர்ப்பாட்டம். எதுவும் கேக்காதீங்கப்பா நம்ம ஊரு உலகிலேயே பெரிய சனநாயகமாம்… காமெடி பண்றாங்க
விஞ்ஞானம் மற்றும் அதன் கண்டுபிடிப்புகள் வளர மக்களுக்கு ஆன்மிகத்தில் பற்றுதல் குறையும்னு நான் நினைச்சுக்கிட்டு இருந்தேங்க. ஏன்னா விஞ்ஞானத்தின் முடிவிலேதான் ஆன்மிகத்தின் ஆரம்பம்ன்னு படிச்ச ஞாபகம். இப்போ நம்மாளுக திருப்பதி லட்டு வாங்கறத்துக்கு இன்டர்நெட் பயன்படுத்துறாங்கப்பா… முடியலப்பா.. இன்னொரு பெரியார் வரனும்பா
என்ன பண்றது… ஊடகங்களுக்கு செய்தி வறட்சி, நம்ம ஊடகங்கள் நெகடிவ்வான விஷயங்களுக்கு கொடுக்கற முக்கியத்துவம் பாஸிடிவ்வான விஷயங்களுக்கு கொடுக்கறதில்ல…விட்டா என்ன அதான் விட்டாச்சே.. அவங்க காட்டறத தான் நாம பாக்கனும்….
டேய், நீ ம**ன்னா நான் ஆளு ம**, உள்ளூர்காரனாயிருந்தும் பஞ்ச் ஒன்னும் புரியல
இந்த வெளம்பரம் வரும்போது நாங்கூட டென்சனாயிடுவன். தொவைக்கற சோப்புன்னா அந்தம்மா சவுக்காரம் வாங்கியான்னு சொல்லியிருக்கும்ல…
Comment by நித்தில்— ஜூன் 14, 2009 #
//விஞ்ஞானத்தின் முடிவிலேதான் ஆன்மிகத்தின் ஆரம்பம்ன்னு படிச்ச ஞாபகம்//
விஞ்ஞானமும் ஆன்மீகமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல
Comment by rajavel— ஜூன் 14, 2009 #
//விஞ்ஞானம் மற்றும் அதன் கண்டுபிடிப்புகள் வளர மக்களுக்கு ஆன்மிகத்தில் பற்றுதல் குறையும்னு நான் நினைச்சுக்கிட்டு இருந்தேங்க. ஏன்னா விஞ்ஞானத்தின் முடிவிலேதான் ஆன்மிகத்தின் ஆரம்பம்ன்னு படிச்ச ஞாபகம். இப்போ நம்மாளுக திருப்பதி லட்டு வாங்கறத்துக்கு இன்டர்நெட் பயன்படுத்துறாங்கப்பா… முடியலப்பா.. இன்னொரு பெரியார் வரனும்பா…//
…repeat
Comment by Muthukumar— ஜூன் 14, 2009 #
அந்த டிராபிக் கான்ஸ்டபிள் மேட்டரை இன்னும் மறக்கலையா.. விஜய்..?
Comment by கேபிள் சஙக்ர்— ஜூன் 14, 2009 #
அன்பின் விஜய் கோபால்சாமி அவர்களுக்கு
wordpress இல் நிரலியை இணைப்பதில் உள்ள தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி .இது வரை நாங்கள் இந்த தவறை கண்டுபிடிக்கவில்லை .எனினும் வெகு விரைவில் இக்குறையை நீக்கி அனைவரும் பயன்படுத்தும் வகையில் நிரலியை வழங்குவோம் .தொடர்ந்து தமிழ்10 தளத்துடன் இணைந்திருங்கள் , எம் தளத்தில் உள்ள குறைகளை மறக்காமல் தெரிவியுங்கள்
நன்றி
தமிழ்10 சார்பாக
தமிழினி
Comment by tamilini— ஜூன் 15, 2009 #
“”இந்த மார்க்சிஸ்ட் காரங்களுக்கு எதுக்கெடுத்தாலும் போராட்டம் நடத்தலைன்னா தூக்கமே வராது போல இருக்கு. நிலச் சிக்கல்னாலும் போராட்டம் நடத்துவாங்க, மலச்சிக்கல்னாலும் போராட்டம் நடத்துவாங்க.””
அப்படியே இலங்கையில்ல நடக்கற விழயத்துக்கு நாம ஏன் இங்க போராட்டனும்? அதையும் எழுதுங்க சார்?
Comment by lightink— ஜூன் 15, 2009 #
//அப்படியே இலங்கையில்ல நடக்கற விழயத்துக்கு நாம ஏன் இங்க போராட்டனும்? அதையும் எழுதுங்க சார்?//
நாங்கள்ளாம் கொதிக்கிறத அடக்க எரியுறதப் புடுங்குவோம். நீங்க வேற எதையோ புடுங்கனும்னு சொல்றீங்களே சாமி. (உங்க கேள்விக்கு பதில் இதுதான்)
நீங்கள் மொட்டைத் தலையையும் முழங்காலையும் “க்விக் ஃபிக்ஸ்” போட்டு ஒட்டவைக்கிறவர். உங்களிடம் சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசுகிறீர்களே என்று கேட்கவும் முடியாது.
கேரள ஆளுனர் வழக்குப் போடத்தான் அனுமதி கொடுத்தார். பிணராயி குற்றவாளிதான் என்று தீர்ப்பு கொடுக்கவில்லை. அத்தனை யோக்கியர் என்றால் வழக்கைச் சந்திக்க ஏன் பயப்பட வேண்டும்?
தமிழ்நாட்டிலும் இதே போல சென்னா ரெட்டி என்கிற ஆளுனர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மீதே வழக்குத் தொடுக்க அனுமதி அளித்தார். ”ஆளுனர்கள் அமைச்சரவையின் வழிகாட்டுதலில்தான் செயல்பட வேண்டும்” என்று அப்போதே சென்னையில் போராட்டம் நடத்தியிருக்கலாமே!!!
கேள்வி கேக்க மட்டும் தான் தெரியும்னு சொல்றவரு நீங்க. உங்க கிட்ட பதிலை எதிர்பாக்க முடியுமா?
Comment by vijaygopalswami— ஜூன் 15, 2009 #
எனது விளக்கத்தை நிக்கியதன் மூலம் நீங்களும் ஒரு முதுகெலும்பு இல்லாதவர் என்பதை நிரூபித்து விட்டீர்கள் பிறகு எதற்கு என்னுடைய மற்று ஒரு பின்னுட்டாம் அதையும் நீக்குங்ககள்.
Comment by lightink— ஜூன் 18, 2009 #
//நீங்களும் ஒரு முதுகெலும்பு இல்லாதவர் என்பதை நிரூபித்து விட்டீர்கள்//
புதிய பாராட்டுக்கு நன்றி.
முந்தைய பின்னூட்டம் எனது கருத்துக்கான தங்களுடைய பதிலாக மட்டும் இருந்தால் பதிப்பிப்பதில் எந்த சிக்கலும் இல்லை. அதில் தங்களது பதிவு மொத்தத்தையும் வெட்டி ஒட்டியிருந்தீர்கள். சுட்டியை மட்டும் தந்திருந்தால் கூட வெளியிட்டிருப்பேன்.
தற்போது அப்பதிவுக்கான சுட்டியை இப்பின்னூட்டத்தில் இணைத்துள்ளேன். விமர்சனத்துக்கும் “பாராட்டுக்கும்” நன்றிகள் வணக்கங்கள்.
விஜயகோபால்சாமிக்கும் முரசோலிக்கும் விளக்கம்
Comment by vijaygopalswami— ஜூன் 18, 2009 #
விஜய்… “என்னமோ போடா மாதவா” தொடருக்கு நான் பரம ரசிகன்பா… பின்றே !
Comment by சேவியர்— ஜூலை 1, 2009 #
மிக மிக அருமை.
Comment by Kannan— செப்ரெம்பர் 22, 2009 #