கொலை வெறிக் கவிதைகள் 1754 – 5
1:18 முப இல் ஜூன் 17, 2009 | அங்கதம், கவிதை, கவிதையைப் போல், பகுக்கப்படாதது, படங்கள் இல் பதிவிடப்பட்டது | 9 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: ஆட்டோகிராப், கவிதை, மகளுக்குப் பெயர்
ஆட்டோகிராஃப்
மூண்றாம் வகுப்பில் அனிதா
நான்காம் வகுப்பில் சுமதி
ஐந்தாம் வகுப்பில் ரோசி
ஆறாம் வகுப்பில் தென்றல்
+1ல் திரிபுரசுந்தரி
கல்லூரியில் மாதங்கி
2003 ஜனவரி முதல் மே வரை வித்யா
மே முதல் நவம்பர்- பாரதி
பிறகு மணோன்மணி
மீண்டும் ஒரு அனிதா
அடுத்ததாய் மலர்விழி
பின்னர் 2007 மே முதல்
திருமணம் வரை அனுஷா!
இதில் யார் பெயரை வைப்பது
என் ஒரே மகளுக்கு!!!
[மகள் பிறந்த செய்தியை நண்பர்கள் அனைவருக்கும் தொலைபேசியில் தெரிவித்துக் கொண்டிருந்தேன். அப்போது நீண்ட நாள் தொடர்பில் இல்லாத ஒரு நண்பன் தனக்கும் மகள் பிறந்த செய்தியைத் தெரிவித்தான். அவனது ஆட்டோகிராஃபை நினைவுபடுத்தி என்ன பெயர் வைத்தாய் என்று கேட்டு கேலி செய்தேன். அதுதான் இக்கவிதைக்கான ஊக்கி. இக்கவிதையை நண்பனின் அனுமதியைப் பெற்றே வெளியிடுகிறேன். நண்பனின் வேண்டுகோளுக்கினங்கி அவனது பெயரை மட்டும் சொல்லவில்லை.]
9 பின்னூட்டங்கள் »
RSS feed for comments on this post. TrackBack URI
மறுமொழியொன்றை இடுங்கள்
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.
:))
Comment by சென்ஷி— ஜூன் 17, 2009 #
அனிதா தான் சரி, அறியா பருவத்தில் ஒருதடவையும், அறிந்த (?) பருவத்திலும் உங்கள cross பண்னாங்க பாருங்க, அதனால அனிதா தான் உங்கள் குழப்பத்திற்கு தீர்வு
Comment by நித்தில்— ஜூன் 17, 2009 #
வாழ்த்துக்கள்..தந்தைக்கு.வரவேற்க்கிறேன் எங்கள் உலகுக்கு பாப்பாவை.ஞாபகப்பெயர்களில் எது இன்னும் நினைவைத்துரத்துகிறதோ..அதை வைக்கலாம்.மனைவியின் அனுமதியுடன்.
Comment by uumm— ஜூன் 19, 2009 #
very good very good
Comment by bala— ஜூன் 19, 2009 #
வாழ்த்துக்கள் விஜய்.
குழந்தைக்கு பெயர் select பண்ணிவிட்டீர்களா?
Comment by kunthavai— ஜூன் 22, 2009 #
அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் நன்றி. இக்கவிதை என்னைப் பற்றியதல்ல. என் நண்பன் ஒருவனைப் பற்றியது என்று பதிவிலேயே குறிப்பிட்டுள்ளேன். வீண் குழப்பங்களைத் தவிர்க்கும் பொருட்டு இங்கே மீண்டும் பதிவு செய்கிறேன்.
மகளுக்குத் துவாரகா என்று பெயரிட்டிருக்கிறேன்.
Comment by vijaygopalswami— ஜூன் 25, 2009 #
கவிதை சுவாரஸ்யம்.
கவிதைக்கான பின் குறிப்பு உங்கள் மனைவியைச் சமாதானப் படுத்த எழுதப்பட்ட கட்டுக் கதை என்பதை என்னைப் போன்ற உங்களது இலட்சோப இலட்சம் ரசிகர்களும் புரிந்து கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை மாம்ஸ் !
Comment by சேவியர்— ஜூலை 1, 2009 #
//இலட்சோப இலட்சம் ரசிகர்களும் புரிந்து கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை மாம்ஸ்//
என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலியே.
Comment by vijaygopalswami— ஜூலை 1, 2009 #
Hai ! saras
Comment by k.saraswathi— ஜூலை 8, 2009 #