என்னமோ போடா மாதவா – 10/07/2009
9:38 பிப இல் ஜூலை 9, 2009 | அங்கதம், அனுபவங்கள், அரசியல், சோதனை, பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 9 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: ஆண்மைக் குறைவு, ஓரினச் சேர்க்கை, சானியா மிர்சா, சோதனை முயற்சி, தமிழ்மணம், லாலுபிரசாத்
தமிழ்மணக் கருவிப்பட்டை | ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
லபூப்-ஈ-சகீர்
தமிழக அரசு நிறுவனமான டாம்ப்கால் ஆண்மைக் குறைவுக்கான மருந்து ஒன்றைத் தயாரித்து விற்பனைக்கு விட்டுள்ளது. அரைக் கிலோ மருந்துக்கு நூற்றைம்பது ரூபாய்க்கும் குறைவாக விலை நிர்ணயம் செய்துள்ளார்கள். சட்டமன்றக் கூட்டத் தொடர் நடப்பதால் அங்கே செய்தி சேகரிக்க வருகிற நிருபர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுகளில் லபூப்-ஈ-சாகரும் அடக்கம். யுனானி முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தாம். ஒரு அரசாங்கம் இது மாதிரி மருந்துகளைத் தயாரித்து விற்கலாமா என்றும் கேள்விகளும் எழுந்துள்ளன. அரசாங்கம் சாராயம் விற்பதைவிட மக்கள் ஏமாறாமல் இருப்பதற்காக ஆண்மைக் குறைவு மருந்து விற்பதில் தவறு ஒன்றும் இல்லை. தொன்னூறு வகையான பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்கிற டாம்ப்கால் நிறுவனத்தின் லாபம் இந்த ஒரு பொருளால் இருமடங்காகப் பெருகியிருப்பது குறிப்பிடத் தக்கது. இனிமேலாவது ஒரு மாத மருந்து மூவாயிரம், மூண்று மாத மருந்து பத்தாயிரம் என்று பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கிற மருத்துவர்கள் எல்லாத்தையும் மூடிக் கொண்டு சும்மா இருப்பார்களா பார்ப்போம்.
லாலுவின் பரந்த மனது
ரயில்வே பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய லாலு ஒரு மிகப்பெரிய உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார். அமைச்சர்கள் யாராலும் சொன்னதைச் செய்ய முடியாது என்பதுதான் அந்த உண்மை. “கடந்த முறை நான் ரயில்வே அமைச்சராக இருந்த போது பாட்னா ரயில் நிலையத்தை முன்மாதிரி ரயில்நிலையமாக மாற்றுவேன் என்று சொல்லியிருந்தேன். ஆனால் அமைச்சராக இருந்த ஐந்து ஆண்டுகளில் அதை என்னால் செய்ய முடியவில்லை. ஆகவே அரசு வெளியிடுகிற எந்த அறிவிப்பையும் மக்கள் நம்ப வேண்டிய கட்டாயம் இல்லை” என்று தனது பேச்சின் போது குறிப்பிட்டுள்ளார். இந்த உண்மையை மக்களுக்குக் கூறிய காரணத்துக்காகவே லாலுவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
சானியா நிச்சயதார்த்த வைபோகமே
எனக்காகப் பிறந்த சானியா இன்னொருவரை மணப்பதை என்னால் அனுமதிக்க முடியாது என்று சானியாவின் வீட்டுக்குள் புகுந்த பெங்களூர் இளைஞர் சமீபத்தில்தான் கைது செய்யப்பட்டார். இந்த லிஸ்ட்டில் இன்னொரு இளைஞரும் உண்டு, ஆனால் அவரைக் குறித்த தகவல்கள் தெரியவில்லை. இதனிடையே இன்று சானியாவின் திருமண நிச்சயம் ஹைதராபாத் “தாஜ் கிருஷ்னா” ஹோட்டலில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சானியாவின் உடை நிறமென்ன, முக்கியஸ்தர்கள் யார் யார் இந்த விழாவுக்கு வருகிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. காரணம் அழைப்பு உள்ளவர்கள் மட்டுமே ஹோட்டலுக்குள் நுழைய முடியும். பத்திரிகையாளர்களுக்குக் கூட அனுமதி இல்லையாம். மிகுந்த சிரமத்துக்குப் பிறகு “சானியா இவ்விழாவில் பச்சை நிற ஷரோரா அணிந்து வருவார்” என்று சாக்ஷி டிவியின் பெண் நிருபர் ப்ளாட்பாரத்தில் நின்றபடியே தொலைகாட்சியில் லைவாகப் சொல்லிக் கொண்டிருந்தார். நூற்றைம்பது உணவு வகைகள் பறிமாறப்பட உள்ளன. இவற்றுள் பிரியாணி மட்டும் பதினைந்து வகை. மாப்பிள்ளை ஹைதராபாதின் பிரபல ஹோட்டல் நிறுவன முதலாளியின் மகனாம்.
ஓரினச் சேர்க்கை
ஓரினச் சேர்க்கையைத் தண்டனைக்குறிய குற்றம் என்று கூறுகிற சட்டப்பிரிவை நீக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கிடையே குஜராத் அமைச்சர் ஒருவர் இந்தியா முழுவது ஓரினச் சேர்க்கை அங்கீகரிக்கப்பட்டாலும் குஜராத்தில் அதை அனுமதிக்க மாட்டோம் என்று கூறியிருக்கிறார். புரியாமல் பேசியிருக்கிறார் என்றே தோன்றுகிறது. ஓரினச் சேர்க்கை சரியா தவறா என்பதல்ல இப்போதைய விவாதம். அது தண்டனைக்குரிய குற்றமா இல்லையா என்பது மட்டுமே அலசப்பட்டு வருகிறது. அதற்குள் கலாச்சாரக் குண்டர்களுக்கும் ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்களுக்கும் முட்டல் ஆரம்பித்துவிட்டது. ஒரு முடிவு தெரியும் வரை நமக்குப் பொழுதுபோக்கிற்குப் பஞ்சமிருக்காது. ஸ்டார்ட் ம்யூஜிக்… டிஞ்சக்கு டிஞ்சக்கு டிஞ்சக்கு டிங் டிங்…
சோதனை முயற்சி
ஒரு சோதனை முயற்சியாக இந்தப் பதிவுடன் தமிழ்மணத்துக்கான கருவிப்பட்டை ஒன்றைத் தயாரித்து இணைத்திருக்கிறேன். இங்கே தமிழ்மணத்தின் முத்திரையுடன் தமிழ்மணம் வழங்கும் பதிவு சார்ந்த பிற சேவைகளுக்கான சுட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளது. இவற்றுள் மென்நூல், வாசகர்கள் தேர்ந்தெடுக்கும் பதிவுகள் ஆகியவற்றுக்கு உங்கள் வலைப்பதிவு முகவரியே போதும். பதிவைத் தமிழ்மணத்தில் இணைக்க உங்கள் இடுகையின் முகவரியை ஹைப்பர்லிங்க் ஆகக் கொடுக்க வேண்டும். ஆதரவு மற்றும் எதிர் வாக்குகளுக்கு பதிவைத் தமிழ்மணத்தில் இணைத்த பிறகு அங்கே வழங்கப்படும் போஸ்ட் ஐடி எண்ணை அதற்குரிய இடத்தில் வழங்கவேண்டும். இருந்தும் ஒரே ஒரு குறை, உங்களுக்கு எத்தனை வாக்குகள் விழுந்தது என்பதை இந்தக் கருவிப்பட்டையைக் கொண்டு தெரிந்துகொள்ள முடியாது. உங்கள் இடுகைகள் சூடான இடுகையானால் தமிழ்மண முகப்பில் பார்த்துத் தெரிந்து கொள்ள இயலும்.
தமிழ்மணக் கருவிப்பட்டை | ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
9 பின்னூட்டங்கள் »
RSS feed for comments on this post. TrackBack URI
மறுமொழியொன்றை இடுங்கள்
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.
சானியா மேட்டரை சொல்லி என் மூடை அவுட் பண்ணிட்டீங்க.. விஜய்..
Comment by கேபிள் சங்கர்— ஜூலை 11, 2009 #
nice post thanks
Comment by kuppan_yahoo— ஜூலை 11, 2009 #
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
Comment by rameshvaidya— ஜூலை 11, 2009 #
super…
Comment by maruthu— ஜூலை 11, 2009 #
Intha Madhava appadeengarathu Mathavaraj illai thaane?
Comment by labakkudas— ஜூலை 11, 2009 #
லல்லு மேட்ர் சூப்பர் தலை, நல்ல காக்டெயில் மேட்டர்…சானிய இனிமே பந்து அடிக்க மாட்டாங்களா? அப்ப அவுங்க புருசன்…………………….
இனி விளையாட அனுமதிப்பாரான்னு? கேட்டேன்
Comment by ஜாக்கிசேகர்— ஜூலை 11, 2009 #
@ கேபிள் சங்கர்: கேபிளண்ணே, இந்த நிச்சயதார்த்த நிகழ்வை முன்னிட்டு ஏகப்பட்ட அளப்பறையக் குடுத்துட்டானுங்க. எப்படியிருந்தாலும் துக்கத்த உள்ளயே வச்சிக்கக் கூடாது. உடம்புக்கு ஆகாது. முடிஞ்சா குளிக்கும்போது பாத்ரூமுக்குள்ளயே ஒரு கதறலப் போடுங்க. இல்லைன்னா நான் சென்னை வரும்போது எல்லாருமா சேந்து ஒரு கூட்டுக் கதறலப் போடுவோம். எப்படி இருந்தாலும் நம்ம ஊர் பெண் இல்லையா! எங்கிருந்தாலும் வாழ்கன்னு ஒரு பிட்டையும் போட்டு வைப்போம். 🙂
@ குப்பன் யாஹூ: என்னங்க, தேங்ஸ் எல்லாம் சொல்லிக்கிட்டு. தேங்ஸ் சொல்றது உங்கள சானியா நிச்சயதார்த்தத்துக்குக் கூட்டிட்டுப் போயிட்டேனா என்ன? 🙂
@ மருது: இந்த ”என்னமோ போடா மாதவா” தொடர்ல வெறுமே “சூப்பர்” “அப்பாரம்” “பின்னிட்டீங்க” அப்படீன்னு யாராவது கமெண்ட் எழுதுனா எனக்குக் கொஞ்சம் குழப்பமாவே இருக்கும். நான் எழுதிருக்கற நாலைஞ்சு விஷயத்துல இவுங்களுக்கு எது பிடிச்சிருக்கும்ங்கற குழப்பம் தான்! மறுபடியும் கமெண்ட் எழுதுனா எதை நீங்க ரொம்ப ரசிச்சீங்கன்னு சொன்னா நான் குழம்ப வேண்டிய தேவையிருக்காது.
@ லபக்குதாஸ்: அண்ணே, ”அண்ணா நகர் முதல் தெரு” படத்துல ஜனகராஜ் அடிக்கடி சொல்ற டயலாக் தான் “என்னமோ போடா மாதவா”. அவ்வளவு பெரிய மனிதர வாடா போடான்னு சொல்ல எனக்கு எப்படிங்க மனசு வரும். அவர கிண்டலடிக்கனும்னோ வம்பிழுக்கனும்னோ எனக்கு ஆசை கிடையாது. சமீப காலமா அவருடைய பதிவுகளைப் படிக்க ஆரம்பிச்ச பிறகு இந்தத் தலைப்ப மாத்திரலாமான்னு கூடத் தோணுது. நீங்க எழுதியே கேட்டுட்டீங்க. நல்லது, அடுத்த வாரத்துலேந்து இந்தத் தொடர் “சொல்றா மணியா” ங்கற தலைப்புல வரும். [அமைதிப்படை படத்துல மணிவண்ணன சத்தியராஜ் மணியா மணியான்னுதான் கூப்பிடுவாரு. அதிலேந்து உருவுனதுதான் இந்தத் தலைப்பு. மணிங்கற பேருள்ள பதிவருங்க யாராவது இருந்தா இது அவுங்களைக் குறிக்கிறதா நெனைக்க வேண்டாம். மறுபடி தலைப்பு தேடுறது ரொம்ப கஷ்டங்க… ப்ளீஸ்]
@ ஜாக்கிசேகர்: அண்ணே, வெளையாட அனுமதிக்கிறதெல்லாம் வேற விஷயம். சானியாவால வெளையாட முடியுமா முடியாதாங்கறதே சந்தேகமா இருக்கறதாலதான் கேரியர் கிராப் உச்சத்தில் இருக்கும்போதே திருமணம் செய்து வைக்கிறார்கள். மத்தபடி உங்க பின்னூட்டுல இருக்கற சிலேடைய ரொம்ப ரசிச்சேன்…. [ஸ்ஸப்பாஆஆஆ… கோத்து உடுறதுக்கு இவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கே!!! யாராவது அண்ணனுக்கு கண்டனப் பதிவு போட்டு ஜாக்கியவே ஜாக்கி போட்டு தூக்குங்களேம்ப்பா… கொஞ்ச நாளைக்குப் பொழுதாவது போகும். 🙂 🙂 இது என்ன கண்டனப் பதிவு வாஆஆரமா…]
Comment by vijaygopalswami— ஜூலை 11, 2009 #
லாலுவின் பரந்த மனது
பரந்த மனதுமட்டுமல்ல லாலுவிற்கு குசும்பு கூடுதான் போல. இராமநாதபுரம் தொகுதி மக்களின் குறைகளை களைவதற்காக டில்லியின் தகிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது கோட்டு சூட்டு கூலிங்கிளாஸ் சகிதம் பார்லிமென்ட்க்கு போன நாயகன் ரித்தீஸை வராண்டாவில் மடக்கிய லாலு நம்மவரின் கூலிஙுகிளாசில் தன் சிகை அலங்காரத்தை செய்து கொண்டாராமே…
Comment by நித்தில்— ஜூலை 12, 2009 #
//னக்காகப் பிறந்த சானியா இன்னொருவரை மணப்பதை என்னால் அனுமதிக்க முடியாது என்று சானியாவின் வீட்டுக்குள் புகுந்த பெங்களூர் இளைஞர் சமீபத்தில்தான் கைது செய்யப்பட்டார்//
இல்லியா பின்ன சானியா மிர்சா என் ஆள் ஆச்சே
Comment by jaisankarj— ஓகஸ்ட் 22, 2009 #