சொல்றா மணியா (முன்னாள் மாதவா) – 18/07/2009

12:04 முப இல் ஜூலை 19, 2009 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 4 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , , , , , , ,

 

தானே உக்காந்த தானைத் தலைவர் குலாம் நபி ஆசாத்… வாழ்க…

சமீபத்துல காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் ஒரு கூட்டத்துல பேசுனாருங்க. மக்கள் தொகை குறித்த அக்கறையோட யாரும் யோசிக்காத கோணத்துல போச்சுங்க அவரோட பேச்சு. கிராமப்புறங்கள்ள கரண்ட் வசதி இல்லாத காரணத்தால பொழுது சாஞ்ச ஒடனேயுமே அல்லாரும் மக்கள் தொகையைக் கூட்டக் கெளம்பிற்றாங்களாம். கரண்ட் வசதி இருந்தா ஜனங்க டிவிய பாத்துக்கிட்டு ஏதாவது ஒரு சேனலுக்கு டி.ஆர்.பி. ரேட்டிங்க ஏத்திவிடுவாங்க, அதனால கிராமப்புறங்கள்ள கரண்ட் வசதி கொண்டு வர எங்க அரசாங்கம் வேண்டியதை எல்லாம் செய்யும்னு சொல்லிருக்காருங்க அந்தக் கூட்டத்துல. ஆக அம்பது வருஷமா இவுரு கட்சி ஆட்சியில இருந்தும் எல்லா கிராமத்துக்கும் கரண்ட் வசதி குடுக்க முடியலைங்கறத இவரே ஒத்துக்கிட்டாருங்க. ரொம்பப் பெரிய மனசு. தானே ஒக்காந்தாருன்னு சொன்னேன், எங்கேன்னு சொன்னேனா? எத்தனையோ பேரு காங்கிரசுக்கு ஆப்பு வைக்கோனும்னு காத்திருக்கும்போது, தனக்கான ஆப்பத் தானே தரையில குத்தி வச்சிட்டு தானே போய் உக்காந்தாரு பாருங்க, அங்க நிக்கிறாரு… மன்னிச்சுக்குங்க உக்காறாருங்க நம்ம குலாம் நபி… பட்டைய கெளப்புங்க.

செல்லக் குரலுக்கான இம்சைத் தேடல்

மனைவியுடன் தொலைபேசிக் கொண்டிருந்த போது விஜய் டிவி வைங்க… விஜய் டிவி வைங்க… என்று அவசரப் படுத்தினாள். விஜய் டிவிக்கு மாற்றினால் அங்கே செல்லக் குரலுக்கான தேடல் நிகழ்ச்சி. சரியாகப் பேசக் கூடத் தெரியாத ஒரு குழந்தையை அதன் தாயார் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்திருந்தார். நடுவர் ஷாலினி குழந்தையின் பெயரை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதாகச் சொன்னதும் குழந்தைக்கு ஒரே அழுகை. தாயார், உண்டா இல்லையா என்று தெரிந்தால் நாங்கள் காத்திருக்கத் தேவையில்லை. இன்னுமொரு வாய்ப்புக் கொடுங்கள் என்றார். குழந்தை மீண்டும் பாடியது. அப்போதே நிராகரிக்கப்பட்டது. நிகழ்ச்சி நடத்துவோர் மீதான கோபத்தை விட இது போன்ற பெற்றோர்கள் மீதுதான் எனக்கு கோபம் அதிகம். தங்கள் குழந்தையின் நிலை நகைப்புக்கு இடமாகும் என்று தெரிந்தே அழைத்துவருகிற இவர்களை என்னவென்று சொல்வது?

அய்யய்யோ ஆடி மாசம்…

இவன் ஏண்டா ஆடி மாசத்துக்கு அலறுறான்னு யாரும் தப்பா நெனைக்க வேண்டாம். ஆடி மாசமானாலே அந்தக் காளிக்கு, இந்தக் காளிக்கு, தக்காளிக்கு, வக்காளிக்குன்னு கூழுத்த வசூலுக்குக் கெளம்பிருவானுங்க செல பேரு. பெரு நகரங்கள்ளயும் இந்த அடாவடிக்கு பஞ்சமில்ல. பெருநகரங்கள்ள ஆடி மாசத்த விட விநாயக சதுர்த்திக்குத்தான் இந்த அடாவடி அதிகம். வாடகை வீட்டில இருக்கவுங்களுக்கு ஒரு ரேட், சொந்த வீட்டுல இருக்கவுங்களுக்கு ஒரு ரேட்டுன்னு ரக ரகமா வசூல் நடக்கும். இங்க ஹைதராபாதிலையும் அப்படித்தான். கடந்த விநாயக சதுர்த்தியின் போது அறிய நேர்ந்த தகவல் சொந்த வீட்டுக்காரர்கள் ஐந்தாயிரமும் வாடகை வீட்டுக்காரர்கள் ஐந்நூறும் தந்தே ஆக வேண்டுமாம். இப்படி வசூலித்து என்னதான் செய்கிறார்கள் என்று பார்த்தால், தேவையற்ற அலங்காரங்களும், வீண் விரயங்களுமே காணக் கிடைக்கின்றன. ஒரே சந்தில் மூண்று விநாயகன் சிலைகள். ஏண்டா இப்படின்னு அங்கிருந்த நண்பனைக் கேட்டால் வசூல் ஜாஸ்தி, வேற என்ன பண்ணுவாங்க என்கிறான். இதைத்தான் எங்க ஊருல “சந்தனம் மிஞ்சுனா உக்காற்ற இடத்துல கூட பூசிக்குவாங்கன்னு”  சொல்லுவாங்க. பழமொழிய கொஞ்சம் லைட்ட சொல்லிருக்கேன், ராவா சொன்னா கண்டனப் பதிவு போடறதுக்குன்னே லேப்டாப்ப கைல புடிச்சிக்கிட்டு அலையுற கூட்டம் என்னையும் கிழிச்சுத் தொங்க விட்டுடும். இவுங்களுக்கெல்லாம் பீய பீன்னு சொல்லக் கூடாதாம், மலம்னு சொல்லனுமாம். எதிலையும் பொலிட்டிகல் கரெக்ட்னஸ் இருக்கனுமாம். கெரகம்…

 

4 பின்னூட்டங்கள் »

RSS feed for comments on this post. TrackBack URI

  1. என்னமோ போடா.. நல்லாத்தானிருக்கு..

  2. // கரண்ட் வசதி இல்லாத காரணத்தால பொழுது சாஞ்ச ஒடனேயுமே அல்லாரும் மக்கள் தொகையைக் கொறைக்கக் கெளம்பிற்றாங்களாம். //

    இதுல உள்ள லாஜிக் புரிபடல, கரண்ட் இல்லன்னா மக்கள் தொகை அதிகரிப்பதற்குதானே ஏற்றதா இருக்கும் ..மரம் வச்சவன் தண்ணி ஊத்துவான்னு அவனவன் தன்னோட மத நம்பிக்கைய இந்த விஷயத்ல காமிக்கறத்துக்கு பதிலா, எதிர் காலத்ல நம்மால நல்ல படியா வளர்க்க முடியுமான்னு சிந்தித்து செயல் பட்டா போதும்ங்க.

    //தங்கள் குழந்தையின் நிலை நகைப்புக்கு இடமாகும் என்று தெரிந்தே அழைத்துவருகிற இவர்களை என்னவென்று சொல்வது?//

    அதான… யாருங்க இந்த ஷாலினி ஏதோ 2 படத்ல பாட்டு பாடுன, பாக்கறத்துக்கு தர்பூசனி மாதிரி இருக்குமே அந்த பீப்பா ஸாரி பாப்பாவா…

    //ஆடி மாசமானாலே அந்தக் காளிக்கு, இந்தக் காளிக்கு, தக்காளிக்கு, வக்காளிக்குன்னு கூழுத்த //

    அது மட்டுமா… ஆடிக் கழிவுன்னு ஜவுளி கடக்காரன்க செய்ற விளம்பரங்க தாங்களடா மணியா… இதுல ‘சித்தி’, நான் ரெம்ப புத்திசாலி, நானே ஒரு கடைய பரிந்துரைக்கிறேன்னா பார்த்துக்குங்கன்னு ரேஞ்சுல விளம்பரத்துல பேசுறது … கோக் மற்றும் சென்னை சில்க்ஸ்காக நமக்கு புத்தி (காச வாங்கிட்டு விளம்பரத்லதான்)சொல்றத்துக்கு பதிலா புருஷனுக்கு நல்ல புத்தி சொல்லியிருந்தா அவரு சினிமாவுலனாவது ஒரு இடத்த தங்க வச்சிருந்துக்கலாம்…. வந்துட்டாங்க ….நம்ம தலயெழுத்துடா மணியா

  3. 😀 அருமை 😀

  4. நித்தில், மாற்றம் செய்யப்பட்டுவிட்டது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.

%d bloggers like this: