கொலை வெறிக் கவிதைகள் – 6
6:32 பிப இல் ஓகஸ்ட் 2, 2009 | அனுபவங்கள், கவிதை, கவிதையைப் போல், படங்கள் இல் பதிவிடப்பட்டது | 12 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: குடை, பள்ளிக் காலம், பிரிவு, மழை
நல்ல மழை அன்று,
உன் பூப்போட்ட குடையுடன்
பள்ளியிலிருந்து புறப்பட்டாய்.
உன் குடைக்குள்
எனக்கும் ஒரு இடம் தேடி
கையிலிருந்த குடையை
சட்டைக்குள் பதுக்கினேன்.
வேண்டுமென்றே உனக்கு முன்னால்
நனைந்தபடியே ஓடியபோது,
எதிர்பார்த்தபடியே என்னை
விரல் சொடுக்கி அழைத்தாய்.
நீ குடையைப் பகிர்ந்துகொண்டாய்
நான் நனைதலைப் பகிர்ந்துகொண்டேன்,
குடைக்குள் மறையாத
நம் உடல் பாகங்களில் எல்லாம்
மேகங்கள் தூவிய அட்சதைகள்…
என்ன அது… சட்டைக்குள்?
அதுவா, அக்கவுண்ட்ஸ் நோட்.
பொய்யில் உடைந்தது அந்த
மழை நேர மௌனம்.
என் வீதித் திருப்பத்தில்
நம்மிருவர் வழியும் வேறானது…
வீதிக்குள் நுழைந்ததும்
மறைத்த குடையை
விரித்துப் பிடித்தேன்…
வீட்டை நெருங்கிய நொடிகளில்
தற்செயலாகத் திரும்பியபோது
விழியெல்லாம் நெருப்பாக நீ…
அப்பட்டமாய்ப் புரிந்தது
உன் விழிகளின் மொழி…
திருட்டுப் பயலே…
12 பின்னூட்டங்கள் »
RSS feed for comments on this post. TrackBack URI
மறுமொழியொன்றை இடுங்கள்
Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.
// நீ குடையைப் பகிர்ந்துகொண்டாய்
நான் நனைதலைப் பகிர்ந்துகொண்டேன், //
Wonderful…
Comment by Jayarathina Madharasan— ஓகஸ்ட் 2, 2009 #
//நீ குடையைப் பகிர்ந்துகொண்டாய்
நான் நனைதலைப் பகிர்ந்துகொண்டேன்,
குடைக்குள் மறையாத
நம் உடல் பாகங்களில் எல்லாம்
மேகங்கள் தூவிய அட்சதைகள்//
அருமையான வரிகள். ஒரு தேர்ந்த கவிஞனின் பக்குவம் தெரிகிறது!
http://kgjawarlal.wordpress.com
Comment by Jawahar— ஓகஸ்ட் 2, 2009 #
நல்லா தான் இருக்கு கொலை வெறி…
வரிகள் அருமை…
வரிகளை மடக்கினால் கவிதையா… சேவியர் அண்ணன் இதை சொல்லவே இல்லை. 🙂 நானும் கவிதை எழுத போறேன்.
Comment by சாய்கணேஷ்— ஓகஸ்ட் 2, 2009 #
nice vijay.. thaniyaa rompathaan feel panreengaloo..
Comment by cable சங்கர்— ஓகஸ்ட் 3, 2009 #
எப்படிண்ணே இப்படி கலக்குறீங்க…தபசங்கர் கவிதையை படித்த மாதிரியே ஒரு பீலிங்.
Comment by thuppakki— ஓகஸ்ட் 3, 2009 #
அருமையான கவிதை + கதை.
//என்ன அது… சட்டைக்குள்?
அதுவா, அக்கவுண்ட்ஸ் நோட்.
பொய்யில் உடைந்தது அந்த
மழை நேர மௌனம்//
இந்த வரிகளுடன் கவிதை முடிவடைந்திருக்கலாம் என்பது எனது (தனிப்பட்ட ) கருத்து 🙂
Comment by சேவியர்— ஓகஸ்ட் 3, 2009 #
//என்ன அது… சட்டைக்குள்?
அதுவா, அக்கவுண்ட்ஸ் நோட்.//
இல்லை.ஆழ்ந்த காதல் கொண்ட மனது…
Comment by துபாய் ராஜா— ஓகஸ்ட் 3, 2009 #
நல்ல கவிதை.
கொ.வெ கவிதைகளின் தொகுப்பில் சேர்த்தது தவறோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
Comment by நித்தில்— ஓகஸ்ட் 3, 2009 #
அடிச்சு ஆடுறிங்க போங்க…
Comment by VIKNESHWARAN— ஓகஸ்ட் 6, 2009 #
excellent.
Comment by Bharathi— ஓகஸ்ட் 10, 2009 #
இது வீட்டுக்கார அம்மாவுக்கு தெரியுமா?
Comment by jaisankarj— ஓகஸ்ட் 16, 2009 #
என்னாச்சு ஆளையே காணோம் ??
Comment by சேவியர்— செப்ரெம்பர் 17, 2009 #