சைதை தமிழரசி தாக்கப்பட்டார்…..

9:09 பிப இல் மார்ச் 3, 2009 | அரசியல் இல் பதிவிடப்பட்டது | 3 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , , ,

image பல வருஷம் முன்னாடி பங்காளீன்னு ஒரு படம் வந்துச்சு. அதுல கவுண்டமணி சொல்ற டயலாக்தான் இந்த பதிவோட தலைப்பு.

சத்தியராஜ் ஒரு அசைவ ஹோட்டல்ல லெக் பீசா தின்னுட்டு பில்லு குடுக்க காசில்லாம உக்காந்திருக்கும் போது. “சைதை தமிழரசி தாக்கப்பட்டார்… ஒரு கண்ணீரில்லையா, கம்பலையில்லையா, கடையடைப்பு இல்லையா…. ஹர்தால்” அப்படீன்னு கத்திக்கிட்டே கவுண்டமணி ஓடி வருவாரு.

ரெண்டு பேருமா சேந்து கடைகள எல்லாம் அடிச்சு நொறுக்கி அவுங்களுக்கு வேண்டியத எல்லாம் எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போவாங்க. மறுநாள் சைதை தமிழரசிக்காக நிதி திரட்டுறதுக்காக வீடு வீட போவங்க. அப்படிப் போகும்போது பானுப்பிரியா வீட்டுக்கும் போவாங்க. அவுங்க கிட்டயும் நிதி கேப்பாங்க. ஆனா, பானுப்பிரியா தான் அவுங்க சொன்ன சைதை தமிழரசி.

அந்த மாதிரிதான் ஈராக்குல உள்ள புகுந்து காட்டடி அடிச்சு, கைல அகப்பட்டத எல்லாம் சுருட்டிக்கிட்டிருக்கு அமெரிக்கா. 2012 க்குள்ள அங்க அனுப்புன ராணுவத்த கொஞ்ச கொஞ்சமா திருப்பிக் கூப்பிட்டுக்கப் போறாங்களாம். கொள்ளையடிச்சதெல்லாம் பத்தல போல இருக்கு. கால நீட்டிப்பு…

அடுத்த டார்கெட் கெடைச்சுட்டா இருபத்திநாலு மணிநேரத்துல கூட ஈராக்க காலி பண்ணிட்டு போயிருவானுங்க. அவிங்க ரொம்ப நல்லவனுங்க. இன்னிக்கு பாகிஸ்தான்ல இலங்கை கிரிக்கெட் ஆட்டக்காரங்கள (வார்த்தை உபயம்: வே. மதிமாறன்) சுட்டுட்டாங்களாம். ஒருவேளை நான் எழுதிக்கிட்டிருக்கற இந்த நிமிஷத்துக்கு முன்னால கூட முடிவெடுத்திருக்கலாம். “பங்காளி, இங்க ஒருத்தன் சிக்கிட்டான்னு” சிக்னல் குடுப்பான். யாருக்கு? “நம்ம பிரிட்டிஷ் மாமனுங்களுக்குத் தான்”.

நாம என்னத்த சொல்றது!!! கவுண்டமணி சொன்னதத்தான். “அட்றா சக்க… அட்றா சக்க… அட்றாஆஆஆஆஆ சக்க”.

உபரி:

நம்ம ஊர் மீனவர்கள் எத்தனையோ பேரு நடுக்கடல்ல செத்தப்போ வராத அதிர்ச்சி இலங்கை ஆட்டக்காரர்கள் தாக்கப்பட்டதும் நம்ம பானா சீனாவுக்கு வந்துருச்சாம். “டேய், ஆதிடா….” “போடா….” கோவாலு வேணாண்டா…. “கபோதின்னு சொல்ல வந்தேன்பா”.

“the government of Srilanka never support any form of violence” நான் சொல்லைங்க, ஸ்ரீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் பொக்கவாய் பொக்கலஹாமா கொல்றாரு… சாரி, சொல்றாரு.

அறை எண் 123ல் அமெரிக்கா…

10:04 பிப இல் ஜூலை 27, 2008 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 2 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , ,

பெங்களூரு மற்றும் அகமதாபாத் குண்டு வெடிப்புகளை டெல்லியிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கண்டித்து அறிக்கை விட்டுள்ளதாம். இதைக் கேள்விப்படும்போது எதால் சிரிப்பது என்று தெரியவில்லை. அமெரிக்காவுக்கு இவ்வளவு நாளும் இல்லாமல் இப்போது என்ன அக்கறை வந்தது இந்தியா மீது? இதற்கு முன்பு இந்தியாவில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகள் எதுவும் அமெரிக்காவின் கவனத்துக்கே வரவில்லையா?

இந்தியர்கள் தான் பெருந்தீனி தின்பவர்களாயிற்றே… குண்டு வெடிப்பில் இந்தியாவின் மக்கள் தொகை குறைந்தால் அமெரிக்காவுக்கு நன்மை தானே? இந்தியாவின் உணவுத் தேவை குறைந்தால் அமெரிக்காவின் உணவுத் தட்டுப்பாடு சரியாகிவிடும் அல்லவா? பிறகு எதற்கு அமெரிக்கா இந்த குண்டு வெடிப்புகளைக் கண்டிக்க வேண்டும்?

இதற்குப் பெயர் தான் “காரியவாத நட்பு”. மன்மோகன் சிங் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்று விட்டது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் படி நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற அரசின் மீது அடுத்த ஆறு மாதங்களுக்கு நம்பிக்கையில்லாத் தீர்மாணம் கொண்டு வர இயலாது. ஆக மன்மோகன் அரசு தனது ஆட்சிக் காலத்துக்குள் எப்படியும் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றப் போகிறது. அணுசரனையாக நடந்துகொள்கிறவர்களுக்கு ஆதரவாக நாலு வார்த்தை சொல்வதொன்றும் தவறில்லையே. மேலும் வாய் வார்த்தையாகச் சொல்வதில் என்ன குறைந்துவிடப் போகிறது?

விருந்துக்கு வந்த வீட்டில் நானும் கையை நனைத்தேன் என்று சொல்லிக் கொள்ள வேண்டாமா? அதற்குத் தான் இவ்வளவும். இதில் கண்ணுக்குத் தெரியாத இன்னொரு விஷயமும் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் “அணு ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள் தலையில்லாத கோழிகள்” என்று சொல்லியிருந்தார் அல்லவா, இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதருக்கு “நானும் அவருக்குச் சளைத்தவர் இல்லை” என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயமோ என்னவோ…

ஓம் நமோ ஒன் டூ த்ரீயாய நமஹ!!!

அடிங்ஙொய்யாலே….

2:47 முப இல் ஏப்ரல் 23, 2008 | நகைச்சுவை இல் பதிவிடப்பட்டது | 4 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , , ,

வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்....

நியூ ஆர்லியன்ஸ் வர்த்தக மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் நடனம். 23-04-2008 சன் செய்திகளில்.

ஏறுன வெலவாசில அவன் அவனுக்கு டப்பா டான்ஸ் ஆடிக்கிட்டிருக்கு, புஷ்ஷு டான்ஸ் ஆடுனது தான் இப்ப ரொம்ப முக்கியம்.

”மானாட மயிலாட” ஆளுங்க கொத்திக்கிட்டு போறதுக்கு முன்னாடி அவர கூட்டியாந்து “மஸ்தானா மஸ்தானா” ல ஆட உடுங்க. அப்டியே புஷ்ஷ விட்டு மாளவிகாவோட ஒரு சண்டைய போட வச்சிட்டா டி.ஆர்.பி. பிச்சிக்கும்.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.