சம்பள தேதி ஒன்னிலே…
3:28 பிப இல் மே 10, 2008 | நகைச்சுவை இல் பதிவிடப்பட்டது | 11 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: கணவன் மனைவி, சம்பளம், முதல் தேதி
புருஷன் பொண்டாட்டிக்குள்ள இதெல்லாம் சகஜமப்பா….
மனைவி: மார்கெட்ல புதுசா ஒரு ஐ-பாடு வந்திருக்கு. எனக்கு அது வேனும். ஒழுங்கா உன் சம்பளத்த குடுத்துட்டு அடுத்த வேலைய பாரு
கணவன்: ஒரு ஐ-பாடுக்கு இப்டி நாயா அலையிறியேடி, இந்த சம்பளத்துக்கு நான் பட்ட ”பாடு” தெரியுமாடி உனக்கு
மனைவி: மாடு மாதிரி உழைக்கதான் உன்னை புருஷனா வைச்சிருக்கேன். மொதல்ல உன் பர்ஸ் எங்கேன்னு சொல்லு
கணவன்: தரமாட்டேன், தரமாட்டேன், தரமாட்டேன்… கைய எடுடீ…
கணவன்: என்ன உடூ…. இதெல்லாம் ரொம்ப ஓவரு. பர்ச எடுக்காத ப்ளீஸ்…
மனைவி: பிச்சிருவேன், பணத்த குடுக்காம இருந்துடுவியா இந்த வீட்ல… பட்டா, சாவடிச்சிருவேன்…
மனைவி: என் சமத்து புருஷா, இப்போ நான் கடைக்கு போயிட்டு, எனக்கு ஐ-பாடும் உனக்கு குச்சிமிட்டாயும் வாங்கிட்டு வருவேனாம். வழிவிடுறா செல்லம்…
மனைவி: உம்ம்ம்ம்ம்ம்ம்மா, எம் புருஷன்னா புருஷந்தான்…
கணவன்: ஏன்டி சொல்ல மாட்டே, அதான் முழு சம்பளத்தயும் புடுங்கிட்டியே, இதுவும் சொல்லுவ இன்னுமும் சொல்லுவ… போடீ…
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.