ஏக்கமும் பெருமூச்சும்
5:30 பிப இல் பிப்ரவரி 7, 2009 | அரசியல், நகைச்சுவை இல் பதிவிடப்பட்டது | 10 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: இஸ்ரேல் தூதர், காங்கிரஸ், காமெடியன், சீன பிரதமர், செருப்பு, ஜார்ஜ் புஷ், தங்கபாலு, பத்திரிகை சந்திப்பு
ஈராக்குல ஜார்ஜ் புஷ்ஷ செருப்பால அடிச்சாகளாம்
லண்டன்ல சைனா பிரதமர செருப்பால அடிச்சாகளாம்
சுவீடன்ல இஸ்ரேல் தூதர செருப்பால அடிச்சாகளாம்
காமெடியன் தங்கபாலு கூட அப்பப்போ பத்திரிகைகாரங்கள சந்திக்கிறாரு. ஹூம்…
[நன்றி: குறுஞ்செய்தி அனுப்பிய நண்பன் ஆண்டனிக்கு]
சின்ன மாமா ஜார்ஜ் புஷ் அவுகளுக்கு
7:18 முப இல் மே 5, 2008 | நகைச்சுவை இல் பதிவிடப்பட்டது | 9 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: ஜார்ஜ் புஷ், நமிதா, பர்கர், பில் கிளின்டன், பீட்சா, மஞ்சள் மகிமை, மானாட மயிலாட, ஹிலாரி
சின்ன மாமா ஜார்ஜ் புஷ் அவுகளுக்கு,
தின்னு கெட்ட இந்தியாவுலெந்து உங்க மருமயன் எழுதிக்கொள்வது. நல்லாருக்கியளா. வீட்டுல அய்தை, அத்தாச்சிகள்ளாம் (உங்க மவளுவளதான் கேக்கேன்) சௌக்கியமா. பெரிய மாமா பில் கிளின்டன், பெரிய அய்த்தை ஹிலாரி எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க. பெரிய அய்த்தை பஞ்சாயத்து எலக்சன்ல நிக்காகளாம்ல. சந்தோசம். எலக்சன் அன்னிக்கு சொல்லிவுடுங்க கள்ள ஓட்டு குத்துறதுக்கு சிக்குனவன எல்லாம் டெம்போல அள்ளிப் போட்டு கூட்டியாற்றேன். ஓட்டுக்கு ஐநூறு ரூவா, ஒரு பொட்டலம் பிரியாணி… உங்க ஊர்ல பிரியாணி கெடைக்காதா, சரி விடு கழுதய, மேல நூறு ரூவா குடுத்துக்கலாம். பெரிய மாமன துட்டத் தேத்தி வைக்க சொல்லுங்க, நாங்க மறக்காம வந்து குத்திட்டுப் போறோம் (ஓட்டு).
என்ன மாமா இருந்தாப்புல இருந்து இப்புடி சொல்லிப்புட்டீய? நாங்க திங்கிற தீனியாலதான் ஒலகம் பூரா சாப்பாட்டு வெல ஏறிப்போச்சாம்ல. சத்தியமா தெரியாது மாமா.
ஏதோ சாஃப்டுவேறாம். அதுல அம்மூட்டு பசங்க கொள்ள பேரு வேல செய்யிறாய்ங்க. கையிலயும் கொஞ்சம் காசு பெரளுது. வெச்சி என்ன செய்யிறதுன்னு தெரியல. அதான், பல்லு வெளக்குன கையோட ரெண்டு பர்கரும், பத்தரமணி வாக்குல பெருசா வட்டமா ரெண்டு பீட்சாவும் தின்னுக்கிட்ருக்கோம். மாடு கன்னுங்க கூட முன்ன மாதிரி கழனிதண்ணி ஊத்துனா குடிக்க மாட்டேங்குதுக. கோலா தான் வேணுமாம். ஊர்லயும் எவனும் வெவசாயமே பாக்குறதில்லை. வீட்டுல பொம்பளய கூட இப்போ ஒரு வேலையும் செய்யிறதில்லை. அம்புட்டு பேரும் கலைஞர் டிவி யில (அரசாங்கம் குடுத்த எலவச கலர் டிவி) மஞ்சள் மகிமையும், மானாட மயிலாடவும் பாத்துக்கிட்ருக்காய்ங்க.
நமக்கென்ன வருத்தம்னா, இருந்தாப்புல இருந்து இந்த நமிதா புள்ளைய வீட்டுக்கு அனுப்பிட்டாய்ங்க. கலைஞர் டிவி ல சொல்லி அந்த புள்ளைய மறுபடியும் கூட்டியாற சொன்னீயள்னா மாமனுக்கு புண்ணியமா போவும்.
அது சரி மாமா, நா ஒன்னு கேள்விப்பட்டேன். கோவிக்காம அது உன்மையா பொய்யான்னு மட்டும் சொல்லுங்க. ஒங்க மூஞ்சில முழிச்சா பொடிக்கு பொகயெல கூட சிக்காதாமே, நெசமா?
இப்படிக்கு
அன்பு மருமயன் கோவாலு
————————————————————————————-
அமெரிக்க அதிபர் நாற்காலியில் யார் உட்கார்ந்தாலும் இந்தியாவை வம்புக்கிழுப்பதே வேலையாகிவிட்டது. முன்னர் பில் கிளின்டன், இப்போது ஜார்ஜ் புஷ்.
உலகத்திலேயே ஆபத்தான பகுதி எது என்று பில் கிளின்டனை கேட்டபோது, ”காஷ்மீர்” என்று சொன்னார். அவரது நாட்டிலேயே பிலெடெல்பியா என்று ஒரு மாநிலம் இருக்கிறது. அங்கே 2007ம் வருடத்தில் மட்டும் வன்முறையால் கொல்லப்பட்டவர்கள் 392 பேர். அப்பாவிப் பொதுமக்கள். அதிலும் 310 பேர் கறுப்பினத்தவர். அதே 2007ம் வருடம் காஷ்மீரில் கொல்லப்பட்டது 170 பேர் மட்டுமே. இத்தனைக்கும் காஷ்மீரின் மக்கள் தொகை பிலெடெல்பியாவை விட ஐந்து மடங்கு அதிகம். (தகவல் உதவி: அரசு பதில்கள், குமுதம்; 7-5-2008 தேதியிட்டது)
இதே மாதிரி மோசடியைத்தான் ஜார்ஜ் புஷ், இப்போது விலைவாசி விஷயத்தில் இந்தியாவுக்கு எதிராக கட்டவிழ்த்து விடுகிறார். உயிரி எரிபோருள் (பயோ ஃப்யூயல்) தயாரிப்புக்காக அமெரிக்காவின் சோள விளைச்சலில் பெரும்பங்கு பயன்படுத்தப்படுவதுதான் இந்த விலைவாசி உயர்வுக்கான காரணம் என்று அறிவுள்ள எவருக்கும் தெரியும்.
இந்தியர்கள் உணவுப்பொருள்கள் அனைத்தையும் அமெரிக்காவிடமிருந்துதான் இறக்குமதி செய்கிறார்களா? இந்தியாவில் விவசாயமே நடக்கவில்லையா? இந்தியாவில் தெற்கே இருக்கிறவன் இன்னும் இட்லியும் தோசையும்தான் தின்றுகொண்டிருக்கிறான். வடக்கே இருப்பவன் சப்பாத்தியும் குருமாவும் தான் தின்றுகொண்டிருக்கிறான். அப்படியே நம்மவர்கள் அமெரிக்க உணவு வகைகளை உண்ண ஆரம்பித்ததுதான் காரணமென்றால் அதற்க்கு பொறுப்பு இந்தியர்கள் அல்ல. இந்தியர்களுக்கு அமெரிக்க உணவுவகைகளை அறிமுகப்படுத்திய பீட்சா ஹட்டும், மெக்டொனால்ட்சும், கெண்ட்டகி ஃப்ரைட் சிக்கன்சும் தான் பொறுப்பு. வேண்டுமானால் அவர்களனைவரையும் திரும்ப அழைத்துக்கொள்ளுங்கள். யாரும் தடுக்கப்போவதில்லை.
எவனுக்குமே அவனவன் முதுகு எட்டாது. அதனால் தான் புஷ்ஷும் கிளின்டனும் இந்தியாவின் முதுகை சொறிய வந்திருக்கிறார்கள். சொறியட்டும் சொறியட்டும். அவர்கள் நம்மை சொறிய சொறிய அவர்கள் முதுகில்தான் ரத்தம் வரும்.
அடிங்ஙொய்யாலே….
2:47 முப இல் ஏப்ரல் 23, 2008 | நகைச்சுவை இல் பதிவிடப்பட்டது | 4 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: அடிங்ஙொய்யாலே, அமெரிக்கா, ஜார்ஜ் புஷ், நியூ ஆர்லியன்ஸ்
நியூ ஆர்லியன்ஸ் வர்த்தக மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் நடனம். 23-04-2008 சன் செய்திகளில்.
ஏறுன வெலவாசில அவன் அவனுக்கு டப்பா டான்ஸ் ஆடிக்கிட்டிருக்கு, புஷ்ஷு டான்ஸ் ஆடுனது தான் இப்ப ரொம்ப முக்கியம்.
”மானாட மயிலாட” ஆளுங்க கொத்திக்கிட்டு போறதுக்கு முன்னாடி அவர கூட்டியாந்து “மஸ்தானா மஸ்தானா” ல ஆட உடுங்க. அப்டியே புஷ்ஷ விட்டு மாளவிகாவோட ஒரு சண்டைய போட வச்சிட்டா டி.ஆர்.பி. பிச்சிக்கும்.
Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.