பத்திரிகா தர்மம்…
7:03 பிப இல் ஜனவரி 31, 2009 | அரசியல், படங்கள், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது | 3 பின்னூட்டங்கள்குறிச்சொற்கள்: தீக்குளிப்பு, நாகேஷ், முத்துக்குமார், மும்பை தாக்குதல், வி.பி. சிங்
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான கொந்தளிப்பு தமிழகத்தில் உச்சத்தை அடைந்துள்ளது. ஏற்கெனவே ஒருவர் தீக்குளித்துள்ள நிலையில், இன்னொருவரும் இதே காரணத்துக்காக தீக்குளித்ததாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. நடிகர் நாகேஷின் மறைவும் இதனுடன் சேர்ந்துள்ளது.
சரியாக இரண்டு மாதங்களுக்கு முன்பும் அகில இந்திய அளவில் இதே போன்றதொரு சூழல். இந்தியாவின் வர்த்தகத் தலைநகரம் தீவிரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகிறது. அதே நேரத்தில் முன்னாள் பிரதமரான வி.பி. சிங் அவர்களும் இயற்கை எய்துகிறார்.
முத்துக்குமாரின் தீக்குளிப்பு தமிழகத்தில் ஏற்படுத்திய அதிர்வுகளும், அதனையொட்டி மாநிலம் முழுவதும் நிகழ்ந்து வரும் போராட்டங்களும் ஊடகங்களால் செய்தியாக்கப்படும்போது, நாகேஷின் மரணமும் விடுபடாமல் பார்த்துக் கொள்கிற பொறுப்பு, ஒரு முன்னாள் பிரதமரின் மரணத்தின்போது எங்கே போயிற்று. நாகேஷ் ஒரு சிறந்த நடிகர் தான். இல்லை என்று சொல்வதற்கில்லை. ஆனால், இடஒதுக்கீட்டு வரலாற்றில் நீங்கா இடம் பெற்ற வி.பி. சிங் அவர்களை இழந்தது ஒரு நடிகரின் மரணத்தை விட முக்கியத்துவமற்ற செய்தியா? சொல்லித் தொலையுங்கள் தமிழக ஊடகங்களே…
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Entries மேலும் மறுமொழிகள் feeds.