அறை எண் 123ல் அமெரிக்கா…

10:04 பிப இல் ஜூலை 27, 2008 | பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 2 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , ,

பெங்களூரு மற்றும் அகமதாபாத் குண்டு வெடிப்புகளை டெல்லியிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கண்டித்து அறிக்கை விட்டுள்ளதாம். இதைக் கேள்விப்படும்போது எதால் சிரிப்பது என்று தெரியவில்லை. அமெரிக்காவுக்கு இவ்வளவு நாளும் இல்லாமல் இப்போது என்ன அக்கறை வந்தது இந்தியா மீது? இதற்கு முன்பு இந்தியாவில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகள் எதுவும் அமெரிக்காவின் கவனத்துக்கே வரவில்லையா?

இந்தியர்கள் தான் பெருந்தீனி தின்பவர்களாயிற்றே… குண்டு வெடிப்பில் இந்தியாவின் மக்கள் தொகை குறைந்தால் அமெரிக்காவுக்கு நன்மை தானே? இந்தியாவின் உணவுத் தேவை குறைந்தால் அமெரிக்காவின் உணவுத் தட்டுப்பாடு சரியாகிவிடும் அல்லவா? பிறகு எதற்கு அமெரிக்கா இந்த குண்டு வெடிப்புகளைக் கண்டிக்க வேண்டும்?

இதற்குப் பெயர் தான் “காரியவாத நட்பு”. மன்மோகன் சிங் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்று விட்டது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் படி நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற அரசின் மீது அடுத்த ஆறு மாதங்களுக்கு நம்பிக்கையில்லாத் தீர்மாணம் கொண்டு வர இயலாது. ஆக மன்மோகன் அரசு தனது ஆட்சிக் காலத்துக்குள் எப்படியும் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றப் போகிறது. அணுசரனையாக நடந்துகொள்கிறவர்களுக்கு ஆதரவாக நாலு வார்த்தை சொல்வதொன்றும் தவறில்லையே. மேலும் வாய் வார்த்தையாகச் சொல்வதில் என்ன குறைந்துவிடப் போகிறது?

விருந்துக்கு வந்த வீட்டில் நானும் கையை நனைத்தேன் என்று சொல்லிக் கொள்ள வேண்டாமா? அதற்குத் தான் இவ்வளவும். இதில் கண்ணுக்குத் தெரியாத இன்னொரு விஷயமும் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் “அணு ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள் தலையில்லாத கோழிகள்” என்று சொல்லியிருந்தார் அல்லவா, இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதருக்கு “நானும் அவருக்குச் சளைத்தவர் இல்லை” என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயமோ என்னவோ…

ஓம் நமோ ஒன் டூ த்ரீயாய நமஹ!!!

Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.