வணக்கம் மக்களே

4:32 பிப இல் செப்ரெம்பர் 14, 2008 | கடிதங்கள், பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | 12 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: , ,

ஏறக்குறைய ஒரு மாதமாகக் காணாமல் போனவர்கள் பட்டியலில் இருந்து, இப்போது திரும்பி வந்திருக்கிறேன். இது வரை பிறந்தநாள் மட்டுமே எனக்கே எனக்கானதாக இருந்தது. வரும் ஆண்டு முதல் இன்னொரு நாளையும் அதனுடன் சேர்த்துக் கொள்ளலாம். எனது திருமண நாள்! ஹி ஹி

என்னுடைய சில கவனக்குறைவுகளால் என் திருமணத்தைக் குறித்து சகபதிவர்கள் பலருக்குத் தெரிவிக்க இயலாமல் போய் விட்டது. மதிமாறன், லதானந்த் அங்கிள், வெயிலான் ஆகியோரிடம் என்னுடைய திருமணத்தைக் குறித்து தொலைபேசியில் தெரிவித்திருந்தேன். ஆனால் அவர்களுக்கு அழைப்பிதழை அனுப்புவதில் நேர்ந்த பிழை காரணமாக யாராலும் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. குறிப்பாக மதிமாறன் அவர்கள் என் திருமண வரவேற்பு நாளன்று மற்ற அலுவல்களை ஒதுக்கி வைத்துவிட்டு வரத் தயாராக இருந்தார். ஆனாலும் அவருக்கு அழைப்பு அனுப்ப மறந்த காரணத்தால் அவராலும் கலந்து கொள்ள இயலவில்லை. இதற்காக எனது வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தம்பி விக்னேஸ்வரன் என்னை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்திருக்கிறார். ஆனாலும் தமிழ்நாட்டுக்குச் சென்ற உடன் எனது செல்பேசி எண்ணை மாற்றிக் கொண்டதால் என்னையும் அறியாமல் அனைவருடைய தொடர்பு எல்லைக்கும் வெளியே இருந்திருக்கிறேன். தொலைபேசியில் தொடர்புகொள்ள நினைத்து பதில் சொல்லி இயந்திரத்தின் தெலுங்கு வாக்கியங்களைக் கேட்டு கடுப்பானோருக்கும் எனது மன்னிப்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என் திருமண அழைப்பிதழ் முழுவதும் தமிழிலேயே அச்சிடப்பட்டிருந்தது மகிழ்ச்சிக்குரிய விஷயமாக இருந்தாலும், அலுவலகத்தில் தமிழ் தெரியாத என்னுடைய மேலாளர், சகபணியாளர்கள் ஆகியோரால் அதனை வாசிக்க இயலாமல் போனது வருத்தத்திற்குரிய விஷயமாகிவிட்டது.

ஆகஸ்ட் இருபத்திஎட்டாம் நாள் குடந்தையில் திருமணம் இனிதே நிகழ்ந்தது. ஏறக்குறைய இதுவும் ஒரு காதல் திருமணம் தான். என்னுடைய (கவனிக்க, எங்களுடைய என்று எழுதவில்லை) காதலை என் குடும்பமும், திருமதியாரின் குடும்பமும், முக்கியமாக திருமதியாரும் ஏற்றுக்கொண்டு நிகழ்ந்த திருமணம் இது. பதினோரு வயது வரை கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து பிறகு தனிக்குடும்பமாக வாழவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானவன் நான். திருமதியாரின் குடும்பம் இன்னும் கூட்டுக் குடும்பமாகவே இருந்து வருகிறது. அவர்களை விரும்பியதற்கான முதல் காரணமும் இது தான்.

திருமண புகைப்படங்களின் மென்-வடிவம் (சாஃப்ட் காப்பி) தயாரான உடன் அதற்கான சுட்டியை பதிவில் போடுகிறேன். பார்த்தருளுக.

12 பின்னூட்டங்கள் »

RSS feed for comments on this post. TrackBack URI

 1. வாழ்த்துக்கள் வி.கோ. அழைப்பு கிடைத்தும், வரவேண்டுமென நினைத்திருந்தும் வர முடியாமல் போய்விட்டது மன்னியுங்கள். !

  அன்பு அகலாது
  ஆயுள் வரை வாழ்க.

 2. திருமண நல் வாழ்த்துக்கள்

 3. திருமண நல் வாழ்த்துக்கள்
  வாழ்க பல்லாண்டு.

  அன்புடன்
  சுபாஷ்

 4. பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

 5. வாழ்த்துக்கள்… நல்ல வேலை மறுபடியும் வந்து பதிவெழுதுனிங்க… இல்லைனா வி.கே வை காணவில்லையேன அறிக்கைவிடப்பட்டிருக்கும்…

 6. Valthukal!

 7. வருக! வணக்கம்!! வாழ்த்துக்கள்!!!

 8. விஜய கோபலசாமி வாழ்த்துக்கள்!
  ஆல் போல வாழ்த்துக்கள்.
  அன்புடன்
  கமலா

 9. வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் நன்றி. தொலைபேசி இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடந்த பத்து நாட்களாக பதிவுகள் எழுத முடியவில்லை. மன்னிக்கவும்.

 10. திருமண நல் வாழ்த்துக்கள்.

 11. ஓ ஆகஸ்ட் 28ஏ நீங்க அரஸ்ட்டா!?!? நான் செப்டம்பர் 11

  :))))))))))))))))))))))))))))))))))

 12. அன்புடன் இணைந்து, பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் தம்பி.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.
Entries மேலும் மறுமொழிகள் feeds.

%d bloggers like this: